புதன், ஜூலை 08, 2009

சிந்தாநதி

சிந்தாநதியுடனான என் தொடர்பு சுமார் ஐந்தாண்டுகளாகத் தொடர்வது.

எழுத்தார்வம், கணிமை நுட்பம், ஊடகங்கள் பற்றிய தெளிவு, அனைத்துக்கும் மேலாகத் தமிழ்மேல் ஆழ்ந்த பற்று இவை ஒருங்கே அமையப் பெற்றவர் சிந்தாநதி. அனுராக் என்ற பெயரில், வலைஞன் என்ற வலைப்பதிவை நடத்தியபோது அறிமுகமானார். பின் ஒரு புதுமையான உருவமாக வெளிப்பட விரும்பி, சிந்தாநதி என்ற பெயரிலேயே கடந்த 3 - 4 ஆண்டுகளாக அறியப்படுபவர். பலமுறை மின்னஞ்சலூடாகவும், மின் அரட்டையூடாகவும் எண்ணங்களைப் பரிமாறிக்கொன்டிருந்தோம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். நேரில் சந்திக்காவிட்டாலும் பழகுவதற்கு இனிய நண்பராகவும், கண்ணியமும் மதிப்பும் பொறுமையும் சக மனித உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் தன்மையும் அவரிடத்தில் நான் கண்டு வியந்தவை.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் வலை உலகில் நடப்பவற்றில் அதிகம் ஈடுபடமுடியாததால் இப்போது அதிகம் பேசவோ ஊடாடவோ இயலுவதில்லை. ஒருமுறை மின்னஞ்சலிலும் போனிலும் பிடிக்கமுடியாமல் 'சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்' என்று என் வலைப்பதிவில் கூவியும் இருக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் மீன்டும் ஒருமுறை போனில் அழைத்தார். நீண்ட நேரம் பேச வாய்க்கவில்லை. எதோ ஒரு நுட்ப சிக்கலுக்கு விடை கேட்டார். தமிழ் தட்டுவதற்கே பொங்குதமிழ் தேடும் நிலையில் நானிருக்கையில் அவருக்கு என்ன சொல்லமுடியும்? என்னவோ சொன்னேன். அது பலித்ததா என்றுகூட நினைவில்லை.

உமர்தம்பியையும், சாகரனையும் கலந்து செய்த வார்ப்பாம் சிந்தாநதி, அவர்களைப் போலவே தமிழ் கணிமைக்காக, தமிழ் வலைக்காக தன் உழைப்பைச் செலவிட்டார். இது பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குழும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...