எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
புதன், ஜனவரி 30, 2008
சென்னை பயணம் - பிப்ரவரி 08
அலுவலக வேலையாக சனிக்கிழமை 2-2-2008 அன்று சென்னையில் இருப்பேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மெரினா கடற்கரையில் கழிக்க யோசனை. நேரமும் விருப்பமும் இருக்கும் வலைப்பதிவு நண்பர்கள் (எதிரிகளும்தான்:-) தொடர்புகொள்ள செல்பேசி எண்: 94426 09820
செவ்வாய், ஜனவரி 22, 2008
'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை சற்றுமுன் கண்டேன். (நன்றி: ஸ்ரீனிவாசன்) சில உடனடியான கருத்துக்கள்:
நல்ல ஸ்கிரிப்ட். பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாத/அரைகுறையாகத்தெரிந்த ஒருவருக்கு நன்றாகப் புரியவைக்க இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பணியாற்றியிருக்கிறது. தயாரித்தவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்.
சில குறைகள்: (அதானே, அது இல்லாமலா?:-))

- முற்பாதியில் எழுத்தாளர்கள் தொல்லை அதிகம். 'பத்திரிகைகளில் இடம் கிடைக்காத புனைவு எழுத்துக்களுக்குத்தான் வலைப்பதிவுகளே' என்று ஐயுறும் அளவுக்கு கதை,கவிதை என்று போனது,பிற்பாதியில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே இன்னும் ஏன் எழுத்தாளர்கள் பிரேமை என்றுதான் தெரியவில்லை. இவங்க தொல்லை தாங்கமுடியலப்பா! :-)
- தமிழ்மணத்தைப் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டது, அடுத்த முறை சரிசெய்யப்பட்டு விடும்:-) அப்போதுகூட தமிழ்மணம் இணையத்தில் சுயம்புவாக இருக்கவில்லை என்பதும், ஒரு வேலைகெட்டவன் செய்தான் என்பதையும் சொல்லியிருக்கலாம். (அதுசரி அவன்தான் சென்னையில் இல்லையே, சென்னையில் இருப்பது என்ற அடிப்படைத் தகுதிகூட இல்லாதவனைப் பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது!:P) இன்னொன்றும் சொல்லிக்கணும்: 'உலகின் முதல் திரட்டி'க்கெல்லாம் நான் பொறுப்பில்லை, மா.சி.யின் கருத்து. ('சரி' போலத்தான் தோணுது!)
- பத்ரியின் விளக்கம் நன்றாக இருந்தது. புனைவுகளை விடுத்து பொதுவாகக் குறிப்பிட்டதும் சேர்த்து.கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். மா.சி. சொன்னதும் புனைவுகளைப் பற்றி அதிகமில்லாததால் நன்றாக இருந்தது. (ஜால்ரா என்று சில வக்கிரங்கள் சொல்லட்டும, கவலையில்லை)
- சில முக்கியமான யு.ஆர்.எல்.களை பெரிய எழுத்தில் காட்டியிருக்கலாம். அது காரணத்தோடுதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
- தமிழில் எல்லாரும் எழுதணும் என்ற ஸ்ரீனிவாசனின் அழைப்புக்கு ஒரு சபாஷ். வலைப்பதிவு என்று சொல்லாமல் ப்ளாக் என்றே பேசியதற்கு ஒரு குட்டு! (தலைப்புக்கு அர்த்தம் வந்தாச்சா?:-))
உதகைப் பயணம் செல்பவருக்கும், இணையத் தொடர்பில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும்.
4-5 வருடமாக கிடப்பில் கிடந்த ஆங்கிலப் பதிவை தூசிதட்டி எடுத்து, இரண்டு இடுகைகளும் எழுதிவிட்டேன். அதே இடுகைகளைத் தமிழிலும் இங்கே எழுதி வைக்க ஆசை. நேரமில்லாததால், அப்படியே அவற்றின் சுட்டிகளை மட்டும் இங்கே போட்டுவைக்கிறேன்.
Notes on our Trip to Ooty
BSNL broadband - Parental control (prevent visits to unwanted sites)

ஞாயிறு, ஜனவரி 13, 2008
பொங்கல் வாழ்த்து - சிரிக்க
நம்ப நண்பர் ரங்கராஜு் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவருங்க. அப்பப்ப தங்கிலீசில் அவர் புதுமையாக எதையாவது அனுப்புவார். 'கொஞ்சம் தங்கிலீசை விட்டு தமிழுக்கு வாங்க,. பலருக்கும் கொண்டுபோகலாம்'னு சொன்னதில், முயன்று தமிழில் எழுதியிருக்கிறார். பார்த்து எப்படின்னு சொல்லுங்க மக்களே.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
-காசி.
இனி, ரங்கராஜு:
சில தலைவர்கள், கட்சிகள் பொங்கல் வாழ்த்து சொன்னால் எப்படி இருக்குமென்று ஒரு கற்பனை..............
கற்பனை மட்டுமே, சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் துளி கூட இல்லை. யார் , எது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
சொரணை கெட்ட தமிழர்கள்
சொல் அம்பு விடும் மறவர்கள்
நன்றி கெட்டு நான்கைந்து முறை
நாற்காலி கொடுக்காவிட்டாலும்
எண்பதிலே என்பால் பற்று கொண்டு
எழுச்சி கண்ட ஏமாற்றுக்காரர்கள் அல்ல...
சேலைகட்டி ஆட்சி செய்த கேவலம்
சோழர்களின் வரலாற்றில் இல்லை என்பதை
வேட்டிக் கட்டிய எனக்கு
வாக்குச்சீட்டில் எழுதிய வல்லமைக்காரர்கள்.
புத்தியில்லை என்று புத்தாண்டில் சொல்லி
பத்தி கொளுத்தும் பழக்கத்தை
பெரியாரின் பள்ளியில் பயிலவில்லை....
அண்ணாவின் ஆசிரமத்தில் அறியவில்லை....
பானையில் அரிசி இல்லாவிட்டாலும்
பார்வையில் இலவச டிவி யுடன்
பொங்குக பொங்கல் என்று வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------
காவிரியில் கப்பல் விட கையெழுத்திட்டு ஆணையில் ரேகை வைக்க அன்றய தினம் நான் அனுப்பிய கடிதம் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் சிக்கி பிரதமர் கைக்கு போகாததை இந்த நாடே கைகொட்டி சிரிக்கிறது. தஞ்சை மாவட்டம் பஞ்சனல்லூர் கிராமத்தில் எல்.கே.ஜி படிக்கும் மாணவன் சக மாணவனிடம் பென்சில் கேட்க, கொடுக்க மறுத்தவனோடு கை கலப்பு ஏற்பட்டு கட்டி புரண்டிருக்கிறார்கள்.எனது கட்சி நிர்வாகிகள் வரும் பொங்கல் தினத்தன்று போராட்டம் நடத்தவுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு இந்த மைனாரிட்டி அரசில் சரியில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். அடுத்த பொங்கலுக்குள் என் ஆட்சி அமைவது உறுதி, வரும் காலம் இனி வசந்தகாலம் என் கட்சியினருக்கு என்று பொங்கல் திருநாளில் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------
மடியும் வரை மருத்துவர்களும், இருக்கும் வரை இன்ஜினியர்களும், ஆயுள்வரை ஆசிரியர்களும் சம்பளம் வாங்காமல் அரசு பணியாற்ற வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக சட்டமாக இயற்ற வேண்டும்,மறுத்தால் போராடுவோம். மறுக்காவிட்டால் நாங்கள் வாபஸ் வாங்குவோம். இந்த பொங்கலுக்கு இங்கே உள்ளோம். அடுத்தபொங்கலுக்கு அ.. ங்கே இருப்போம். எந்த பொங்கலுக்கு எங்கே இருந்தாலும்,தைப் பொங்கலுக்கு தை...புரம் வந்து தமிழனைகாப்போம் என்று வாழ்த்துகிறேன்.
------------------------------------------------------------------------
தலைவர்களை விடதொண்டர்களே எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், மாற்றத்திற்கு ஒரு தொண்டர் வாழ்த்து தெரிவிக்கிறார். அகிம்சை வழியில் சத்தியாகிரக போராட்டம் கண்ட பாரம்பரிய இயக்கம் தொடர்ந்து சத்தியமூர்த்தி முன் கத்தி சண்டை நடத்தி o+, B+,AB-, என இரத்தம் அற வழியில் ஒன்று கலந்து பின் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்த பெருமையினை இந்த தைத் திருநாளில் நினைவு கூர்ந்து தலைவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து முன்னிலை பெற வாழ்த்துகிறேன்".
-------------------------------------------------------------------------------------------------
மேம்பாலம் வருதுன்னு சொன்னா மண்டபத்திற்கு ஆபத்துன்னு அர்த்தம் புத்தாண்டு தைக்கு வருதுன்னு சொன்னா என் அரச‘ங்கத்துக்கு ஆபத்துன்னு அர்த்தம் நான் புறப்படும்போது புயல் வருதுன்னு சொன்னா என் பிரசாரத்துக்கே தடைனு அர்த்தம் தடை, ஆபத்தை மீறி நான் ஆட்சிக்கு வருவது உறுதி.நானாக கூட்டணிக்கு போகமாட்டேன் திராவிட கூட்டணிக்கு இப்போது போகமாட்டேன், திராவிட் இந்திய கேப்டனாக வரும்வரை..... த .அரசுபொங்கலுக்கு வழங்கிய இலவச துணியில் ஒரு சிலருக்கு தையல் விட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தைத்தவருக்கும் அமைச்சர்களுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பினை முதல்வர் தைத் திருநாளில் தெளிவாக விளக்க வேண்டும் என கேட்டு, வாழ்த்து கூறி ஏழைகளுக்கு பிறந்த நாள் தையல் மிஷின் வழங்க புறப்படுகிறேன்.
-----------------------------------------------------------------------
தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஆடி மாதத்தில் AUDI கார், தைமாதத்தில் THAI(தாய்லாந்து) இருப்பதால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மீறி அறிவித்தால் ஆதரவை விலக்கிக் கொள்வோம். இருப்பினும் எங்கள் நிலைமையை நினைவில் கொண்டு சிறுமாற்றத்தோடு அனுமதி அளிப்போம் என்ற ஸ்திரத்தன்மையான கொள்கையோடு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தைப்பொங்கல் வைக்கமுடியாமலும், விக்கலை அடக்கமுடியாமலும் அந்தோ என் தமிழினம் யாழ்ப்பாணத்தில் தவியாய் தவிக்கும் தருணத்தில் கூட அறிக்கைவிட முடியாத இடத்தில் எனை தள்ளிய தாண்டவராயர்கள்,சேது சமுத்திரம் பற்றி செய்தி படித்தால்கூட சினம் வரக்கூடிய சிம்மாசனம் அருகே அமர வைத்து விட்டார்கள் பாவிகள்.கோடியை கொடுக்கும் தங்கங்கள் என்னிடத்தில் இல்லை. வெள்ளியை கொடுக்கும் வறியவர்கள், கொள்கையோடு என்னோடு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.படைபலம் இல்லாதவன் போர் பரணி பாட முடியாமல் போகலாம், பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று உங்களை கோட்டான்களிடமிருந்து காத்திட இந்த தைப்பொங்கல் நன்னாளில் சூளுரை ஏற்கிறேன்.
----------------------------------------------------------------------------

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...