புதன், ஜனவரி 30, 2008

சென்னை பயணம் - பிப்ரவரி 08

அலுவலக வேலையாக சனிக்கிழமை 2-2-2008 அன்று சென்னையில் இருப்பேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மெரினா கடற்கரையில் கழிக்க யோசனை. நேரமும் விருப்பமும் இருக்கும் வலைப்பதிவு நண்பர்கள் (எதிரிகளும்தான்:-) தொடர்புகொள்ள செல்பேசி எண்: 94426 09820

5 கருத்துகள்:

enRenRum-anbudan.BALA சொன்னது…

Kasi,

Unfortunately I won't be able to meet you though Marina is walkable from my house :(

I will be in Chengelpet from 2nd A/N to 3rd evening.

Kasi Arumugam - காசி சொன்னது…

பரவாயில்லை,பாலா. அடுத்த முறை.

பெயரில்லா சொன்னது…

படிக்கும்போது - இந்த பதிவின் ஆரம்பத்தில் - நாமும் பதிவு போட்டு கோவியாரின் டவுசரை அவிழ்த்துவிடலாம் என்று நினைத்தாலும், அடச்சீ என்ற சலிப்பே மிஞ்சுகிறது...

இத்தனைகாலம் இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருந்த திரு.கோவி.கண்ணன் அவர்களுடன் பழகிய நாட்களை நானும் நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்...

இந்த ஆள் இதய தூய்மையோடு மட்டும் இருந்திருந்தால் எவ்வளவு நல்ல நன்பராக பழகியிருக்கலாம் என்று...!!!!

ஹும்...அந்த மூர்த்தி கசடோடு இணைந்து இரட்டை வேடம் போட்டு பதிவுகள் உருவாக்கி ( அனானிகள் முன்னேற்ற கழகம் தளம், சதுர்வேதி தளம், ஆதிசேஷன் தளம்....)

மூர்த்தி (அலுவலகத்தில் முருகனாம் - கருமம்டா சாமி) தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டது, அதன் பின் முகமூடி தளத்தில் முதல் முறையாக அசிங்க பின்னூட்டங்களை டென்ஷனாகி போட்டது, பிறகு டோண்டு ராகவனை எதிர்த்து தளம் ஆரம்பித்தது, பிறகு டோண்டு ராகவன் தளத்தில் பின்னூட்டம் போடுபவர்களை எல்லாம் ஆபாச அர்ச்சனை செய்தது என்று எல்லாரும் அறிந்த தகவல்களை கொஞ்சம் ரிவைஸ் செய்யுங்கள்...

வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவந்த மூர்த்தி மனதளவில் காயப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் அதற்கு அவன் எடுத்த ஆயுதமோ கேவலம். பத்து பதினைந்து வலைப்பூக்களை உருவாக்கி, எழுதத்தொடங்கினான்...

கிட்டத்தட்ட ஒரு முழு மன நோயாளியாகவே மாறினான்...

ஆனால் ஆதியோடந்தமாக மூர்த்தியை அறிந்த கோவியார் அவனை சமாதானப்படுத்தத்தான் நினைத்திருப்பாரே ஒழிய - நீ ஆபாசமா எழுது ராசா என்று கண்டிப்பாக என்க்கரேஜ் செய்திருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது...

ஒரு கட்டத்தில் அவனது பல தளங்களில் ஒன்றான விடாது கருப்பு ஹிட் ஆக, (திரு கி.வீரமணி ஒரு முறை அதனை குறிப்பிட்டு சொன்னார்) அதிலேயே ஜாகையை மாற்றினான்...

பார்ப்பணீய எதிர்ப்பு நடத்துகிறேன் என்ற அவனது கோஷத்தில் மயங்கி விழுந்த அத்துனை பார்ப்பணீய எதிர்ப்பாளர்களையும் ஒருங்கிணைத்தான்...(இன்னமும் கருப்பு சதீஷ் என்று விளித்து அவனுக்கு மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது...இதில் யாரோ ஒரு அப்பாவியின் புகைப்படத்தை வேறு வெளியிட்டான் ஹி ஹி )

திராவிட குழுமத்தில் இருக்கிறான், பார்ப்பணீய எதிர்ப்புகள், பெரியாரின் கட்டுரைகளை வெளியிடுகிறான் என்று நான் கூட ஒரு போஸ்ட் எழுதி அனுப்பினேன்...( ஒரே ஒரு காமெடி போஸ்ட்...ஆனா நான் ஆசிரியர் குழுவாம் - திட்டமிட்டு ஒரு குழுவை எனக்கெதிராக திருப்பும் முயற்சி - ஹி ஹி)

போலி டோண்டுவாக செயல்படுவது மூர்த்தி என்று முழுமையாக அறிந்து (மூர்த்தி, போலி டோண்டு, விடாது கருப்பு) ஆகிய அனைவரும் ஒருவர்தான் என்பதை ஆர்வத்துடன் கண்டுபிடித்ததில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சியே...(http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html) என்னுடைய இரண்டாவது பதிவின் தலைப்பு "போலி டோண்டு"

///சரி. தமிழ் இணைய உலகிற்க்கு வந்தாயிற்று...எத பத்தி எழுதறது ? தூய தமிழ் ல எழுதறதா இல்ல LOCAL தமிழ் ல எழுதறதா அப்படின்னு ஒரே குழப்பம். ஒரு வழியா என்ன தமிழ் தட்டச்சு செய்ய முடியுதோ அந்த தமிழ் ல எழுதறது அப்படின்னு முடிவு செய்தேன்.

சரி. இப்பொ என்ன எழுதறது ?? அப்படின்னு முடிவு செய்யனும். எதயாவது எழுதி டாக்டர் பட்டம் வாங்குர அளவுக்கு போகனும். அது தான் நம்ம லட்சியம்.

இணையத்துல இப்போ என்ன ரொம்ப பிரபலமான டாப்பிக்...???////

இது தான் என்னுடைய முதல் பதிவு :)))))

என்னுடைய முதல் நோக்கம் போலி டோண்டுவை கண்டறிந்து தோலுரிக்க வேண்டும் என்பது தான்...

எனக்கு முதலில் பின்னூட்டம் போட்டவர் டோண்டு...அதுக்கு பிறகு - பிரசுரம் செய்ய அல்லன்னு போட்டது - யார்னு நெனைக்கிறீங்க...போலி தான்...

தான் இணையத்தில் சாதியை எதிர்ப்பதாகவும், திரு.டோண்டு ராகவன் அவர்கள் ஐயங்கார் என்றும் அவர் சாதியை வளர்க்க முயற்சி செய்கிறார் என்றும், இதனை எதிர்க்க மிக சிறப்பான தீவிர குழு ஒன்று இருப்பதாகவும் தன்னுடைய குழுவில் பெண்கள் உட்பட பலர் இணைந்து செயல்பட்டு சாதியை தடுப்பதாகவும் மடல் வந்தது...

கம்மிங் பேக் டு த பாய்ண்ட்...

போலி டோண்டு பற்றி நான் ஆராய்ச்சி செய்தபோது அதிகமாக கிராஸ் செய்தவர்கள் சிலர்...

ஒருவர் துபாய் முத்துக்குமரன். மற்றவர் திரு. கோவிக்கண்ணன். போலிடோண்டு இவராக இருக்கலாம் என்று நான் எடுத்துவைத்த லிஸ்ட் ஒன்றில் - நம்பினால் நம்புங்கள் - முதலில் இருந்தவர் - திரு.கோவி.கண்ணன்...

அவரிடம் பிறகு சாட்டில் பேசும்போது பல விசயங்கள் தெரிந்தது ( அவற்றை எல்லாம் வெளியிடுவது முறையாகாது ), கடைசியாக தெரிந்த ஒரே ஒரு விடயம், போலி டோண்டுவுக்கு அடுத்த பதிவுக்கான ஐடியாவை கொடுப்பதே கோவியார் தான் என்பது ( இதற்கு என்னுடைய சாட்டில் ஆதாரங்கள் உண்டு )

போலி டோண்டு இணையத்தில் தீவிரமாக ஆபாச தாக்குதல் தொடுத்த நேரம், அந்த நேரத்தில் இணைய உலகில் நுழைந்த லக்கிலூக் - இவரும் அதிரடியானவர் தானே - போலி டோண்டுவை அவன் பாசையிலேயே வசைபாடியதாக டோண்டு பதிவில் எழுதினார்...

மூர்த்தி என்கிற போலி டோண்டு உண்மையான பார்ப்பணீயத்தை தான் எதிர்க்கிறான் என்று ஏமாந்தவர் லக்கி என்பது மறுக்க முடியாத உண்மை...

மூர்த்தியிடம் பார்ப்பணீய எதிர்ப்பும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை என்று லக்கிக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

குழலி,நான்,ஓசை செல்லா மூவரும் போலி என்பது மூர்த்தி தான் என்று அவன் டவுஸரை அவிழ்த்தபோது ஒரு சிலரை விட்டுவைத்தோம்...

காரணம், மூர்த்தி சாதியை ஒழிக்கவந்த இன்னொரூ பெரியார் என்று அவர்கள் நம்பி வந்தது தான்...( கோவி.கண்ணன் விடாது கருப்பு தளத்தை பார்த்து தான் பெரியாரை அறிந்துகொண்டேன் என்று மடல் அனுப்பி இருப்பதற்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை)

இன்றைக்கு இந்த கசட்டில் இருந்து எப்படி கையை கழுவுவது என்று தெரியாமல் முழிக்கும் அந்த கோஷ்டியில் பலபேர் எழுதுவதை நிறுத்திவிட்டது எல்லாருக்கும் தெரிந்தது...அனில் குட்டி அனிதா ஒரு உதாரணம்...

அவனுடன் பழகியதே அவன் யார் என்று வெளிக்காட்ட்வே என்று நான் முதலிலேயே சொல்லிவிட்டேன்...

என்னுடைய மின்னஞ்சல்களில் டோண்டுவை எதிர்ப்பது போல நான் எழுதுவது ஒரிஜினல் டோண்டு ராகவனுக்கு தெரிந்ததே...அதனை அவரே சொல்லியிருக்கிறார்...

மேலும் நான் யாரிடமும் சர்ட்டிப்பிக்கேட் வாங்கி நான் நல்லவன் என்று நிரூபிக்க தேவையில்லை...நான் நியாயத்தின் பக்கம் மட்டுமே நின்றேன்...தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்ள பல வலைப்பதிவர்களிடம் பெரியாரின் கொள்கைகளை பரப்புவதாகவும், சாதியை ஒழிப்பதாகவும் பொய் சொல்லி, போலி பதிவுகள் , ஆபாச பதிவுகள் உருவாக்கி மற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தியவன் ஒழியவேண்டும் என்றே நான் இவ்வாறு செயல்பட்டேன்...

திரு.கோவி.கண்ணன் போன்று எது சரி எது தவறு என்று தெரிந்தும், தவறானவனுக்கு கள்ள ஆதரவு கொடுத்து, உசுப்பி விட்டு, ஒன்றும் அறியாத பதிவர்களுக்கு போலி டோண்டு மூர்த்தியின் தொடர்பை ஏற்படுத்தி, கருப்பு என்கிற சதீசு உண்மையில் இருக்கிறார் என்று பொய் உரைத்து அவமானகரமான வாழ்க்கையை வாழவில்லை...

டிபிசிடி வலையில் முதல் முதலாக பேசியது என்னிடம் தான். முதல் நாளே நான் அவரிடம் சொன்னது, விடாது கருப்பு போன்ற தளத்துக்கு தொடுப்பு கொடுக்கவேண்டாம் ( அந்த நேரத்தில் மூர்த்தியின் டவுசரை நான் அவிழ்க்கவில்லை) - அது சரியல்ல - வேண்டாம் என்று சொன்னேன்...விடாது கருப்பு தளத்துக்கு தொடுப்பு உங்கள் தளத்தில் இருந்தால் நான் உங்களுடன் பேசமாட்டேன் என்றேன்...அது இன்னும் என்னுடைய சாட் ஆர்க்கைவில் உள்ளது.....

விடாது கருப்பு தளத்தில் என்னுடைய குடும்பம் பற்றி ஆபாசமாக எழுதப்பட்டபோது அதை நீக்க முயற்சி செய்தவர் கவிதா. அதே போல் ஓசை செல்லாவிடமும் சென்று பதிவுகளை நீக்க முயற்சி செய்தார். (விடாது கருப்புடன் கேப்பங்கஞ்சி வித் கவிதா எழுதியபோது, அவர் கருப்பு என்பவர் சதீஷ் என்று நம்பித்தான் செய்தான் என்று எனக்கு தெரியும்)...

ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகும் அந்த தளத்தில் போய் பின்னூட்டம் வைப்பதும் பாராட்டுவதும் சிறப்பாக என்கரேஜ் செய்வதுமாக இருந்த கோவி கண்ணனுக்கு விடாது கருப்பு மூர்த்தி தான் போலி டோண்டு என்று தெரியும். இருந்தாலும் தான் ஒரு நல்லவர் என்று வெளிவேடமிட்டது எவ்வளவு கேவலமான செயல்...

தினமும் ஒரு கருத்து சொல்லி வலைப்பதிவு எழுதும் கருத்து கந்தசாமி திரு.கோவி.கண்ணன், ஆன்மீகம் எழுதும் வீ.எஸ்.கேவின் நன்பர்...ஆனால் அதே வீ.எஸ்.கேவின் போலி தளத்தை உருவாக்கி அதில் வீ.எஸ்.கே.வின் குடும்பம் அனைத்தையும் அசிங்கமாக எழுதியுள்ள விடாது கருப்பு மூர்த்திக்கும் நன்பர்...இருவரிடமும் சாட் செய்வார்...ஏன் இந்த வெளி வேடம் ? பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள், அவர்கள் சாதி, மனைவி பெயர், போன்ற தகவல்களை அவர்களுடன் பேசி பெற்று அதனை போலி டோண்டு மூர்த்திக்கு பாஸ் செய்யும் மிக கேவலமான வேலையை திரு.கோவி.கண்ணன் செய்தார்.

கிழுமத்தூர் மகேந்திரன் இன்றைக்கு போலியால் திட்டப்படுகிறார். இது பற்றி எனக்கு நம்பிக்கையை விட சந்தேகமே அதிகம் உள்ளது. பழகுவதற்கு இனிய கிழுமத்தூர் மகேந்திரன் இன்றைக்கு என்னுடைய நன்பர் இல்லை. மூர்த்தி தான் விடாது கருப்பு என்று அறிந்தும் அவனது கேவலங்களுக்கு துணைபோனதே இதற்கு காரணம். நான் இதனால் வருந்தவில்லை.

தனிப்பட்ட முறையில் ஆக்கப்பூர்வமான பல வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்...அதனால் தான் பதிவு போட்டு நேரத்தை வீணடிப்பதை விட, ஒரு சின்ன பின்னூட்டத்தை - அல்லது ஸ்மைலியை தட்டிவிட்டுவிட்டு செல்லலாம் என்றே பின்னூட்ட பெட்டியை திறந்தேன்...

வெளியே நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாது என்று கோவி.கண்ணன் பின்னூட்டம் போடுவதை பார்த்து தான் டெண்ஷன் ஆகிவிட்டேன்...இந்த பொழப்புக்கு...தூத்தெறி...

ஒரு தமிழ் இணைய கசடுக்காக பதினைந்து நிமிட நேரத்தை வீணடித்ததை பெரிய தவறாகவே என்னைப்பொறுத்த வரையில் நினைக்கிறேன்...

மன்னித்துவிடுங்கள் ப்ளீஸ்....!!!

ILA(a)இளா சொன்னது…

ங்ஏங்ங்ஏ- அட ஆமாம் ngee அப்படின்னு கலைப்பையில தட்ட முடியாதுன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.

velarasi சொன்னது…

அன்புடையீர்,எனது பதிவை படித்து கமெண்ட் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...