வியாழன், ஜூலை 31, 2008

பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் : ஆக்கம்- மா. நன்னன்

சென்னை வந்து 4 மாதமாகிறது. நேற்றுத்தான் ஒரு விழாவுக்கு செல்ல முடிந்தது. நமக்கெல்லாம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ப்பாடம் நடத்திய/நடத்தும் பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் ஆக்கிய 'பெரியாரைக் கேளுங்கள்' என்ற தலைப்பிலான 24 குறுமங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடும் நிகழ்வு தி.நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. தமிழக நிதி அமைச்சர் திரு. க. அன்பழகன் அவர்கள் தலைமையில் முனைவர்கள் திரு. பொன்னவைக்கோ, திரு. சொ. ந. கந்தசாமி, திரு. சிலம்பொலி செல்லப்பன் இவர்களோடு திரு. முகம் மாமணி, திரு. இரா. நல்லக்கண்ணு ஆகியோரும் பங்கேற்றார்கள்.

விழா முடிவில் 24 குறுமங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். ஒவ்வொன்றும் 64 பக்கங்கள் கொண்ட, சிறு கையேடு வடிவில் அமைந்திருக்கிற தொகுப்பின் தலைப்புகளைக் கீழே தருகிறேன்:
  1. தாம்
  2. ஒழுக்கம்
  3. கல்வி
  4. தொண்டு
  5. பொருள்
  6. மனிதன்
  7. மொழி
  8. இலக்கியம்
  9. கடவுள்
  10. சமூகச் சீர்திருத்தம்
  11. சாதி
  12. திருமணம்
  13. மதம்
  14. மூடநம்பிக்கை
  15. சுயமரியாதை
  16. புராணங்கள்
  17. கட்சிகள்
  18. தனிநாடு
  19. அரசியல்
  20. தொழிலாளர்
  21. பகுத்தறிவு
  22. பார்ப்பனியம்
  23. கிளர்ச்சி
  24. தமிழர்
வெளியீடு:
ஏகம் பதிப்பகம்,
தபால் பெட்டி எண் 2964,
3, பிள்ளையார் கோயில் தெரு,
2ஆம் சந்து,
முதல் மாடி,
திருவல்லிக்கேணி,
சென்னை -5

விலை: குறுமம் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ரூ. 240/- (சலுகை விலை ரூ. 200)

மா. நன்னன் அவர்கள் பெரியாருடன் உரையாடும் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தொகுப்பின் முகவுரையில், 'இக்குறுமங்களிலுள்ள வினாக்கள் மட்டும் எம்முடையவை என்றும் விடைகள் யாவும் அய்யா பெரியாருடையவை மட்டுமே' என்று குறிப்பிடப்படுகிறது.

குறுமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் சில துளிகளை ஒவ்வொரு நாளுக்கு ஒன்றாக எடுத்துப் போட ஆசை. பார்க்கலாம்.

6 கருத்துகள்:

தமிழ் ஓவியா சொன்னது…

அய்யா தங்களின் பதிவை இன்றுதான் பார்த்தேன். நன்னன் அய்யா அவர்கள் சிறப்பாக அப்பணியைச் செய்துள்ளார்கள்.தாங்கள் சொல்லியுள்ளது போல் தொடர்ந்து பெரியாரின் கருத்துக்களை வெளியிட்டு பரப்பவும். மிக்க நன்றி.

புருனோ Bruno சொன்னது…

//கல்வி அமைச்சர் திரு. க. அன்பழகன்//

நிதி அமைச்சர் திரு க அன்பழகன்
பள்ளி கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு
உயர் கல்வி அமைச்சர் திரு பொன்முடி

Kasi Arumugam சொன்னது…

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி புருனோ, சரியாக்கிவிட்டேன்.:)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

குறுமம் என்ற சொல் புதுசு. ஆங்கிலத்தில் என்ன :(

Kasi Arumugam சொன்னது…

ரவி,

குறுமம் என்ற சொல்லை நூலாசிரியர் திரு. மா. நன்னன் பயன்படுத்தியிருக்கிறார். குறுநூல் என்பதுதான் குறுமம். (குறும் புத்தகம்?) அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்.

Kasi Arumugam சொன்னது…

ரவிசங்கர்,

நன்னன் அய்யாவிடம் கேட்டதற்கு, booklet என்று ஆங்கிலத்தையே புழங்கிவிடும் அபாயத்தைத் தவிர்க்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...