புதன், மார்ச் 11, 2015

வட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டலாமா?

எப்படி வட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டுவது?

தேவையான கோப்புகள் ஏற்கனவே ஒரு வழங்கியில் ஏற்றப் பட்டிருக்கவேண்டும்.

கோப்புகளின் பெயர்கள் கீழ்வருமாறு:
  1. e-Vatteluttu OT-webfont.eot
  2. e-Vatteluttu OT-webfont.ttf
  3. e-Vatteluttu OT-webfont.woff
  4. e-Vatteluttu OT-webfont.woff2
இவை தற்போது ட்ராப்பாக்சில் ஏற்றப் பட்டிருக்கின்றன. நீங்கள் உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் (Template) சிறு மாற்றத்தைச் செய்து இந்த எழுத்துரு வசதியைப் பெறலாம்.

இந்த வழங்கிக்கான மீயுரைத்துண்டு( HTML code Snippet), நீங்கள் வார்ப்புருவில்சேர்க்கவேண்டியது,  கீழே:
/* Generated by Font Squirrel (http://www.fontsquirrel.com) on March 6, 2015 */

@font-face {
    font-family: 'e-vatteluttu_otregular';
    src: url('https://dl.dropboxusercontent.com/s/to25hzj9t5suxsf/e-Vatteluttu%20OT-webfont.eot');
    src: url('https://dl.dropboxusercontent.com/s/to25hzj9t5suxsf/e-Vatteluttu%20OT-webfont.eot?#iefix') format('embedded-opentype'),
         url('https://dl.dropboxusercontent.com/s/gzr76qidgxavx3a/e-Vatteluttu%20OT-webfont.woff2') format('woff2'),
         url('https://dl.dropboxusercontent.com/s/3mcslrckpu66llv/e-Vatteluttu%20OT-webfont.woff') format('woff'),
         url('https://dl.dropboxusercontent.com/s/u325jb6w8ezhelq/e-Vatteluttu%20OT-webfont.ttf') format('truetype');
    font-weight: normal;
    font-style: normal;

}
இதை எங்கே எப்படிச் சேர்க்கவேண்டும் என்பதற்கு கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்:
1. Go to your Blogger dashboard


2. Select "Template" option and clcik on "Edit HTML"

3. Search for tag inside stylesheet box. You may have to expand sections by clicking the blue arrows

4. Just before the searched tag, insert the code snippet given above.

5. Save Template. Voila! Your blog is ready to show vatteluttu script now.

சரி, வார்ப்புருவை மாற்றியாயிற்று, எப்படி வட்டெழுத்தில் ஒரு உரையை (பத்தியை)க் காண்பிப்பது?

அது மிக எளிது. உங்கள் இடுகையை எழுதும் முகப்பில் Compose/ HTML என்ற இரு வசதிகளைப் பார்க்கலாம். வழக்கமாக Compose பயன்படுத்துவோம். இப்போது HTML பயன்படுத்தினால் தேவைப்படும் சிறு மீயுரைத் துண்டை வட்டெழுத்து வரவேண்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சேர்க்கலாம்.

முன்பு வரவேன்டியது:
<span style="font-family: e-vatteluttu_otregular; font-size: 30px; font-weight: bold;"> 
பின்பு வரவண்டியது:
</span>
இதை நீங்கள் HTML Viewல் தான் செய்யவேண்டும். இடுகையை சேமித்து, பதிப்பித்து, பின் தனியாக உலாவியில் பார்த்தால்தான் சரியாகத் தெரியும். Previewல் சரியாகத் தெரியாது. வாழ்க வளமுடன். தமிழ் தழைக்க!

வட்டாடுவோமா?

வட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் என்ற ஆர்வலர் உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.  தரவிறக்கி நிறுவி நம் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வட்டெழுத்துக்காலத்தில் எப்படியிருந்தது என்று பார்த்து ரசித்தேன்.

நண்பர் நா. கணேசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: இந்த எழுத்துரு நிறுவிப் பார்ப்பவர்களுக்கு சரி, எதையும் நிறுவாமலேயே ஒரு இணைய வாசகருக்கு வட்டெழுத்து வரிவடிவத்தில் எதையும் காட்ட முடியுமா? உமரின் தேனீ போல வட்டெழுத்து வடிவத்தைக் காட்டும் ஒரு இயங்கு எழுத்துரு சாத்தியமா?

நமக்குத்தான் இம்மாதிரி சீண்டல்கள் உவப்பானதாயிற்றே. கொஞ்சம் முட்டி மோதி செய்துவிட்டேன்.

இதோ பாருங்கள், இந்தப் பக்கத்திலேயே கீழே பாரதிதாசனின் கவிதை தற்காலத் தமிழ் வரிவடிவத்திலும், அதற்கடுத்து வட்டெழுத்து வடிவத்திலும்.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!

 இனி வட்டெழுத்து:

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!



இதை நீங்களும் எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த இடுகையில் பகிர்ந்துகொள்வேன்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...