புதன், மார்ச் 11, 2015

வட்டாடுவோமா?

வட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் என்ற ஆர்வலர் உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.  தரவிறக்கி நிறுவி நம் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வட்டெழுத்துக்காலத்தில் எப்படியிருந்தது என்று பார்த்து ரசித்தேன்.

நண்பர் நா. கணேசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: இந்த எழுத்துரு நிறுவிப் பார்ப்பவர்களுக்கு சரி, எதையும் நிறுவாமலேயே ஒரு இணைய வாசகருக்கு வட்டெழுத்து வரிவடிவத்தில் எதையும் காட்ட முடியுமா? உமரின் தேனீ போல வட்டெழுத்து வடிவத்தைக் காட்டும் ஒரு இயங்கு எழுத்துரு சாத்தியமா?

நமக்குத்தான் இம்மாதிரி சீண்டல்கள் உவப்பானதாயிற்றே. கொஞ்சம் முட்டி மோதி செய்துவிட்டேன்.

இதோ பாருங்கள், இந்தப் பக்கத்திலேயே கீழே பாரதிதாசனின் கவிதை தற்காலத் தமிழ் வரிவடிவத்திலும், அதற்கடுத்து வட்டெழுத்து வடிவத்திலும்.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!

 இனி வட்டெழுத்து:

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!



இதை நீங்களும் எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த இடுகையில் பகிர்ந்துகொள்வேன்

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...