புதன், மே 10, 2006

தேர்தல் ஆணையத்துக்கும் விஜயகாந்துக்கும் என்ன பிணக்கு?

மே 8ஆம் தேதியன்று தமிழ்மணம் தேர்தல்-2006 சிறப்புப்பக்கம் தயாரிக்க தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திலிருந்து தமிழகத்தின் மொத்த வேட்பாளர் பட்டியலை எடுத்தோம். அதில் ஆங்கிலத்தில் உள்ள பட்டியலுக்கும் தமிழில் உள்ள பட்டியலுக்கும் சரியாக 232 குறைவாக இருந்தது. எதேச்சையாக விருத்தாசலம் தொகுதியைப் பார்த்த போதுதான் விஜயகாந்த் என்ற பெயரில் உள்ள 26, 30 வயது ஆட்கள் மட்டும் இருப்பது தெரிந்தது. 55 வயது விஜயகாந்தைக் காணோம்! கேப்டன் கட்சியின் 232 வேட்பாளர்களும் தமிழ்பட்டியலில் விடுபட்டிருப்பது தெரிந்தது. இன்று தி ஹிந்துவில் ஒரு செய்தி: கேரளாவில் ஒரு வேட்பாளர் பெயரும் கணக்கில் வராமல் போனது என்பது. இங்கே 232, அதுவும் ஒரு வளரும் கட்சி!
தொடர்புள்ள சுட்டி: http://genesys.eci.gov.in/fullcandidatelist/uireports.aspx
இப்போது சரி செய்துவிட்டார்கள். ஆனாலும் முன்பு தமிழில் எக்செல்லில் தெரிந்த கட்டங்கள் இப்போது குழம்பிப்போய்த்தெரிகின்றன!

http://eci.gov.in/TAMILMay2006/pollupd/ac/states/s22/a_index.htm என்ற முடிவுகள் அறிவிக்கும் தளத்தில்கூட விஜயகாந்த்தின் பெயர் கட்சியில்லாமல் காட்டப்படுவதைக்காணலாம்.

இந்த ஒரு குறையைத்தவிர மற்றபடி அருமையாகத் தொகுக்கப்பட்ட தரவுகள். யுனிகோடு தமிழில் இருப்பதால் 'அப்படியே சாப்பிடலாம்!' தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டும் நன்றியும்.

10 கருத்துகள்:

SK சொன்னது…

இதைதான் நான் வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்!

விஜய்காந்தின் 232 பேர்களும், அவர் கட்சியின் பெயரும் விடுபட்டிருக்கிறது!

இதெலாம் ஒரு, வரப்போகும், நல்ல சகுனத்தின் அறிகுறி1

dondu(#4800161) சொன்னது…

இது கண்டிப்பாக எதேச்சையாக நடந்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. யாரோ செய்த விஷமம். சுட்டிக் காட்டியவுடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டோ கேட்காமலோ திருத்திக் கொள்ளலாம் என்று யாரோ நினைத்திருக்கிறார்கள்.

தேர்தல் கமிஷன் தளத்தின் வெப்மாஸ்டர் பதில் கூறுவாரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. மிகுந்த துர் உபயோகத்துக்கான அதர் ஆப்ஷன் இன்னும் காசி சாரின் வலைப்பூவிலா?

பெயரில்லா சொன்னது…

I think VK's party doesnt hold any registration with EC becos, his party didnt value any democratic process at all levels.

ஜீவா (Jeeva Venkataraman) சொன்னது…

:-)
அது சரி, உங்களுக்கும் வி.(கோ)காந்துக்கும் பெரிய ஒட்டு இருக்கும் போல...!
;-)

குறும்பன் சொன்னது…

முடிவுகள் அறிவிக்கும் தள சுட்டிக்கு நன்றி காசி.

இன்னும் கூட தேமுதிக பெயர் முடிவுகள் அறிவிக்கும் தளத்தில் இல்லை. 232 என்று போடியிட்டோர் எண்ணிக்கை உள்ளது.
குப்தா இத கொஞ்சம் பாரப்பா, தேமுதிக கட்சி 10% மேல் வாக்கு வாங்குற மாதிரி தெரியுது.

குப்தாவுக்கும் விஜயகாந்த் க்கும் என்ன லடாயோ? யார் அறிவார்? SK தான் பதில் சொல்லனும் :-))

கோவி.கண்ணன் சொன்னது…

விஜயகாந்துக்கும் தமிழ்மணத்துக்கும் கூட பிணக்கு, அவரைப் பற்றி கருத்துக் கணிப்பு வந்ததாக ஞாபகம் வரவில்லை. கருணாநிதி, ஜெ பற்றியெல்லாம் வந்தது விஜயகாந்த் பற்றி வரவில்லை,

விஜயகாந்தும் அரசியலும்
1. தேமுதிக வேட்பாளர்களுக்கு நஷ்டம்
2. அதிமுக, மதிமுக விற்கும் நஷ்டம்
3. திமுக விற்கும், பாமகவிற்கும் நஷ்டம்
4. அவருக்கே நஷ்டம்

அல்லது

1. ரஜினிக்கு இவர் பரவாயில்லை, வருவேன் என்று வந்துவிட்டார்
2. பாமக விற்கு சவாலக இருப்பார்
3. திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக இருப்பார்
4. கல்யாண மண்டபத்திற்காக கட்சி ஆரம்பித்தார்
5. இவரும் குடும்ப அரசியல் வாதிதான்

இப்படி ஏதாவது போட்டிருக்கலாமே, ம் ஓரவஞ்சனை

காசி (Kasi) சொன்னது…

SK, :-)

டோண்டு, விஷமம் என்று குற்றம் சுமத்த முடியவில்லை. நான் நினைக்கிறேன், அவர் கட்சி பதிவுசெய்யப்பட்டது கடைசி நேரத்திலாயிருக்கும் என்று. வழக்கம்போல ஆங்கிலப்பட்டியலை இற்றைப்படுத்தியவர்கள், தமிழ்ப்பட்டியலை சாய்ஸில் விட்டுவிட்டார்கள்:-))

வெப்மாஸ்டர் என்ன சொல்கிறார் என்று அங்கே கேட்டால்தானே தெரியும். இங்கே என் பதிவில் எழுதுவதால் அவருக்கு எப்படித் தெரியும்?

(அதர் ஆப்ஷனை எடுத்துவிடேன் நன்றி)

ஜீவா, :-))

குறும்பன், இந்த சுட்டி ஜெர்மனி முத்துவின் இடுகையிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றியை அவருக்கு முன்வரிக்கிறேன்.

இன்னும் கட்சிப்பெயர் காட்டப்படாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எஸ்கே உங்கள் கட்சியிடம் சொல்லி ஆணையத்தை அணூகலாமே!

ராம்கி சொன்னது…

//ரஜினிக்கு இவர் பரவாயில்லை, வருவேன் என்று வந்துவிட்டார்
:-)

இளவஞ்சி சொன்னது…

காசி! ரொம்ப நாளாச்சு உங்க பதிவுகளை பார்த்து! அடிக்கடி வாங்க!! ("இதான் நேரம்கறது"ன்னு நீங்க நினைக்கறது இங்க கேக்குது! :) )


கோவிகண்ணன்,
//அவரைப் பற்றி கருத்துக் கணிப்பு வந்ததாக ஞாபகம் வரவில்லை.//

தமிழ்மணம் Poll: 10/03/2006

விஜயகாந்த் கட்சி தனித்து நின்றால் எந்த அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்?
தி.மு.க. அணி. 39% 62 Votes
அ.தி.மு.க. அணி. 21% 34 Votes
யாருக்கும் பாதிப்பு இல்லை. 40% 64 Votes
160 Votes

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்மணம் Poll: 10/03/2006 //

இளவஞ்சி,

அந்த வாக்குபதிவு வந்த போது நான் தூங்கிட்டேனோ, வலைப்பக்கம் ஒதுங்கவில்லையோ தெரியவில்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...