எங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் பெரிய கட்சியில் இரண்டுபேரும் தொழிற்சங்கவாதிகள். அதுவா இதுவா என்று இருந்த நான் கடைசியில் வழக்கமாகப் போடும் கட்சிக்கே போட்டுவிட்டேன். ஆனால் என் மனைவி விடாப்பிடியாக ஓ தான் போடுவேன் என்று அடம் பிடிக்க, 'அதெல்லாம் விரலில் மைவைக்கும் முன்பே சொல்லணும் இப்ப முடியாது, மேலும் அதுக்கான பாரம் எல்லாம் இங்கே இல்லை' அழிச்சாட்டியம் பண்ணி அவரையும் போடவைத்துவிட்டார்கள் அலுவலர்கள்.
பொதுவாக அமைதியாக கண்ணியமாக நடந்தது வாக்குப்பதிவு.
என் கணிப்பு:
திமுக அணி: 140-150 தொகுதிகள்
அதிமுக அணி: 70-80 தொகுதிகள்
மற்றவர்: 5-20 தொகுதிகள்
முக்கியமாக: இரண்டு பெரிய கட்சிகளும் அடித்த லூட்டிதாங்காமல் 'முரச'றைந்தவர்கள் 10-15% இருப்பார்கள் என்பேன்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
15 கருத்துகள்:
நம்ம தொகுதியில தான் மாவட்டதிலேயே கம்மியா வாக்குபதிவு ஆகியிருக்குன்னு சொல்றாங்களே?
// பெரிய கட்சியில் இரண்டுபேரும் தொழிற்சங்கவாதிகள்.//
இருவரும் வெளியூர்காரர்கள்!
ஒருவர் உடுமலை மக்கம், இன்னொருவர் சென்னை.
வாங்க காசி, ரொம்ப நாளாயிற்று. திரும்பவும் உங்கள் அறிவியல் கட்டுரைகளை எதிர்நோக்குகிறேன். சில பாதியிலேயெ நிற்கின்றன.
அப்படியானால் ஓ போடு பிரச்சாரத்தின் கதி அவ்வளவுதானா? புதிய விஷயங்கள் என்றாலே அதிகாரிகளுக்கு வேப்பங்காய். இது பழைய விஷயம்தான் என்றாலும் அவர்களுக்கு (நமக்கும்) புதிது. இனி அடுத்தடுத்த தேர்தல் களில்தான் எல்லாம் சரியாகும்.
ம். பார்ப்போம் எங்கேயாவது ஓ போடப்பட்டிருக்கிறதா என்று நாளை தெரியும்.
//நான் கடைசியில் வழக்கமாகப் போடும் கட்சிக்கே போட்டுவிட்டேன்//
ஓட்டு வங்கியின் நிறந்தர உறுப்பினரா நீங்கள் ?
சமுத்ரா, இப்போது புள்ளிவிவரத்தில் 71% ஆகிவிட்டதே பார்த்தீர்களா?
மணியன், முடிந்தவரை பொருத்தமான தலைப்புகளில் அறிவியல்/நுட்பம் எழுதுவேன்
வலைஞன், 'ஓ போடு' நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அதற்கும் ஒரு பொத்தான் வேண்டும்.
கோவிகண்ணன், :-)
சார்,
கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!
தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!
நன்றி!
//
தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!
//
இதே தமிழ் மணத்தில் கிட்ட தட்ட 38 பேர் ஓ போட்டதாக முடிவில் வந்ததே ? அப்ப தமிழ் மணத்தில் வாக்களித்தவர்கள் உண்மையில் வாக்களிக்காதவர்கள்...
சரியா...
அதாவது இணையத்தில் உலாவும் படித்தவர்கள்...
கிராமத்தில இருக்கவங்க முடிவு விரைவில் தெரியவரும்...அதுவரை பொறுத்திருங்க...
_(-)_
///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!///
சார்,
இங்கு 49 ஓ வை உபயோகிப்பது அவ்வளவு உசிதமல்ல என்பதை தேர்தல் அதிகாரிகளே நினைத்து பலரையும் அதை பிரயோகிக்காமல் இருக்கச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். உங்களுக்கு வேணும்னா இண்டிபெண்டண்ட் கேண்டிடேட்டுக்கு போட்டுட்டு போங்களேள் என்று கூறியிருக்கிறார்கள். அதுதான் சரி என்று நானும் நினைக்கிறேன்.
///கோவை செய்தி கேட்பதற்கே சுகமாக உள்ளது!!
என்னா, அது நம்ம கோவை!!///
நம்ம சிங்கை !
//'ஓ போடு' நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அதற்கும் ஒரு பொத்தான் வேண்டும்.//
ஏன் இரண்டு கட்சிகளின் சின்னத்துக்குரிய பொத்தான்களில் அழுத்தினால் ஓ போட்டதாக ஆகாதா?
முக்கியமாக: இரண்டு பெரிய கட்சிகளும் அடித்த லூட்டிதாங்காமல் 'முரச'றைந்தவர்கள் 10-15% இருப்பார்கள் என்பேன்.//
தமிழ்மணத்தில் ஒரே ஒருவர் தான் முரசை முழங்குகிறார்.70 சீட் என சவால் விட்டிருக்கிறார்.எனக்கென்னவோ திராவிட ராஸ்கல்கள் தான் வெற்றி பெறுவார்கள் என தோன்றுகிறது.இன்னும் 5-10 வருடம் கழித்து முரசு வேகமாக முழங்கலாம்.
சிவபாலன்: :-)
//தமிழ் மண முடிவைவைத்து DMKனு
சொல்லிட்டீங்களா!!/ இல்லீங்க, தமிழ்மணம் எப்படிங்க தமிழ்நாட்டின் எண்ணத்தை முழுதாய் பிரதிபலிக்கமுடியும்?
செந்தழல்ரவி:
//கிராமத்தில இருக்கவங்க முடிவு விரைவில் தெரியவரும்...அதுவரை பொறுத்திருங்க...// ஆமாங்க, அதையேதாங்க நானும் நினைக்கிறேன்.
செல்வநாயகி, கார்த்திக்வேலு: வாங்க:-)
ஜோசஃப் சார், அதெப்படிங்க தேர்தல் அதிகாரி அப்படி சொல்லமுடியும்? தப்புத்தாங்க.
ஜெயச்சந்திரன், அது சரியா வேலை செய்யும்னு நான் நம்பலைங்க.
செல்வன், இன்னிக்கு தோணுதுங்க முரசுக்கு 15-20% ஓட்டு இருக்கும்னு. இது யாரோ சொன்னமாதிரி விஜயகாந்த்துக்காக விழுந்ததில்லை. 'இவுனுகளே சாப்பிடுறானுகளே, ஒரு தடவை மாத்திப் போட்டா என்ன'னு நினைக்கறவுங்களுக்கு முரசு தான் கண்ணில் படுதுங்க. ஒருத்தர் தப்புப் பண்ணிட்டமேன்னு பெருமூச்சு விடுவார்னு யாரோ எழுதியிருந்தாங்க, அது நெசம்ங்க. பாக்கலாம்....
ஏங்க,
நீங்க ஓட்டு போட்டதுக்கு ஒரு பதிவா? சும்மாவா சொன்னாங்க..
பெரிய ஆளுங்க நின்னா நியூஸ் உக்காந்தா நியூஸ்..சிரிச்சா நியூஸ் :)
// இல்லீங்க, தமிழ்மணம் எப்படிங்க தமிழ்நாட்டின் எண்ணத்தை முழுதாய் பிரதிபலிக்கமுடியும்? //
நீங்க சொல்லறுது சரிதான்!
நான் சும்மா சொண்னங்க!!
கருத்துரையிடுக