பயந்துடாதீங்க மக்களே :)
செல்போனில் முதலில் தமிழைக் 'கண்டுபிடித்து' செல் தமிழ் ஆசான் பட்டத்தைப் பெற்றதும் ('யாரு கொடுத்தா எங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது ஆமா:P) ) கை துருதுருன்னு இருக்குதுங்க. ('அட இரும்பு புடிச்சவன் கையே, அது துறுதுறு'!ன்னு மனசாட்சி சொல்லுதுங்கோ)
இதில் தமிழில் குறுஞ்செய்தி கோர்த்து அனுப்பினால் யுனிகோடாகவே போகிறதா, பெறுபவர் போனில் யுனிகோடு உடைகிறதா உடையவில்லையா என்றெல்லாம் யோசனையாகவே இருந்ததுங்க. உடனே எனக்கே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், அது சரியாகவே தெரிந்தது. பத்தாயிரம் ரூபாய் போன் வைத்துள்ள என் நண்பருக்கு அனுப்பினேன் கட்டம் கட்டமாகத் தெரிகிறது.
இப்ப நான் கேட்பது, உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் உங்கள் இந்திய செல் எண் கொடுத்தால் நான் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பி சோதிக்க விரும்புகிறேன். எற்கனவே முத்து நெடுமாறனின் செல்லினம் போன்ற பல ஜாவா செயலிகள் மூலமாக தமிழ் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருந்தாலும், மேலதிக கருவி/சேவை/பதிவிறக்கம் ஏதும் இல்லாமல் தமிழில் அனுப்பப்படும் முதல் குறுஞ்செய்தியைப் பெற உங்களை அழைக்கிறேன். குறுஞ்செய்தி செலுத்திய கோமகன் பட்டத்தை யாராவது பிடித்துக்கொள்ளுமுன் அதைப் பிடிக்க வேண்டாமா? என்ன குறுஞ்செய்தி ஏற்ற குலக்கொழுந்து பட்டத்துக்கு நீங்க தயாரா?
இங்கேயோ தனி மடலிலோ செல் எண்ணைத் தரலாம். அஞ்சல்: akaasi (at) gmail (dot) com
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
22 கருத்துகள்:
காசியண்ணே,
எனக்கு ஒன்னு தட்டிவிடுங்க!
என்னோடது Siemens SP65. பசங்க இது செங்கல்லுன்னு ஓட்டிகினுகீறானுங்க. இது மட்டும் ஒர்க்காச்சுன்னா அப்பறம் இருக்கு அவிங்களுக்கு!! :)
மின் கூரியரில், சுவிஸ் எலி அனுப்பியுள்ளேன்.சந்தேகமில்லை தமிழ் எலிதான். :)
911
சும்மா தமாசுக்கு!
எலிக்குட்டி சோதனை எதாவது செய்ய தமிழ் எலிகள் தேடுறீங்களோன்னு பார்த்தேன். என்னோட எண்ணை தரலாம் பன்னாட்டு குறுஞ்செய்தி அனுப்ப உங்களுக்கு பணம் அதிகமாகும் பரவாயில்லயா?
குறுஞ்செய்தி கிடைத்தது...இந்த எலிக்கு கட்டம் கட்டமா தான் தெரியுது...எதாவது செட்டிங் மாத்தனுமா...என்னுது நோக்கியா 3230...
நாலுபேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. :)
மக்களே, நான் அனுப்பிச்ச செய்தியை இங்கே காபிபேஸ்ட் பண்ணுங்க என்னதான் வந்ததுன்னு பாக்கலாம். யுனிகோடு முழுசாத் தெரியுதா உடைஞ்சிட்டுதா... என்னது போனே உடைஞ்சுபோச்சா? நான் அம்பேல்...எஸ்கேப்பு.
காசி,
என் எண்தான் தெரியுமே! இருந்தாலும்: 98945 28849 அனுப்புங்களேன் - நானும் 'குறுஞ்சேதி கண்ட கிழவன்' என்று ஆகிவிட்டுப் போகிறேன்.
சமீபத்துல:P 2003-ல் நாங்கள் வலைப்பதிவு எழுதத் தொடங்கியபோது இதே பிரச்னைதான் கணினியிலும் இருந்தது. விண்டோஸ் 98 வகைக் கணினியில் யுனிகோடு வலைப்பதிவைப் பார்த்தால் இப்படியேதான் கட்டம் கட்டமாகத் தெரியும். பிறகு எக்ஸ்பி கிட்டத்தட்ட எல்லோருக்கும் வந்தபின் கட்டம் கட்டப்பட்டதெல்லாம் வெட்டவெளிச்சமானது.(ச்சே, எதுகை மோனையெல்லாம் நமக்கு வராதே:()
அதுபோலவே இனி வரும் போன்களில் யுனிகோடு அனுசரணை வாங்கும்பொதே வந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்போது இந்தப் பிரச்னைகுத் தீர்வு கிடைக்கலாம். அதுவரை இடைக்கால நடவடிக்கையாக எதாவது செயலியை இறக்கியாவது யுனிகோடை தெரியவைக்க யாராவது கணினி வல்லுநர் செய்வாரென்று நம்பலாம். சுரதா, உமர், முகுந்த், கோபி, ...
(உமருக்கு மீண்டும் அஞ்சலி)
வணக்கம் என்னோட நோக்கியா 2600 (பழைய மாடல் தான்) ஆனா இதுல தமிழ் நல்லாவே தெரியுதுங்க. ரெண்டு மூணு பேர் அனுபபுனது எனக்கு கரெக்டா வந்திருக்குங்கோ :)
குறுஞ்செய்தி ஏற்ற குலக்கொழுந்து பட்டத்தைத் தட்டிச் செல்வது எங்கூரம்மணி அனுசூயா!
அவங்க சொல்வதைப் பார்த்தால் என் குறுஞ்செய்தி செலுத்திய கோமகன் பட்டத்துக்கே பாதகம் வரும்போல இருக்குது. ம்ஹும் என்ரது, நான் தரமாட்டேன் போ:))
அது சரி தொலைபேசி எண்ணைப் பிரசுரித்து விட்டீர்களே!
சிபி,
பிரசுரிக்க வேண்டாமென்றால் தனிமடலிலல்லவா சொல்லியிருக்க வேண்டும்!
நீங்கள் மறுமொழியில் இடும்போதே இது ரகசியமில்லை என்று நினைத்துவிட்டேன். வேண்டாமென்றால் நீங்களே மறுமொழியை நீக்கிவிடலாமே!
//செல்போனில் முதலில் தமிழைக் 'கண்டுபிடித்து' செல் தமிழ் ஆசான் பட்டத்தைப் பெற்றதும் ('யாரு கொடுத்தா எங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது ஆமா) ) //
பதிவுலக ஆசானே!இதுதான் முதல்.
100
நட்டு, என்ன சொல்லவர்றீங்கன்னு சரியா வெளங்கலியே:(
பெரிய மனசு பண்ணி எலியா இருக்க சம்மதித்த 8 பேருக்கும் நன்றி. அனுப்பியதில் அனுசுயாவுக்கும் சீனாவுக்கும் தான் தமிழ் ஒழுங்காப் போய்ச் சேர்ந்திருக்கு. பிடிங்க பட்டத்தை:))
இரண்டும் நோக்கியா தான்!
//நட்டு, என்ன சொல்லவர்றீங்கன்னு சரியா வெளங்கலியே//
செல் தமிழ் ஆசான் பட்டமெல்லாம் இப்ப வாங்குனதுங்கோ!பதிவுலக ஆசான்தான் முதல் பட்டமின்னு சொல்ல வந்தேனுங்க...
நட்டூ, நட்டு :))
செல்தமிழாசான் பட்டம் போயிந்தே ;). இப்பத்தான் கொஞ்க்ச நேரத்துக்கு முன்னால அதை ஹரன்பிரசன்னாவுக்கு அளிச்சாச்சு.
இங்க பாருங்க
நோக்கியா செல்பேசிகளில் 1110,1600,1650, 2310, 2626, 2630, 2760,6030, 8800, ஆகியவை தன்னியக்கமாகவே தமிழுக்கான ஆதரவைக் கொண்டுள்ளவை எனத் தெரிகிறது. இன்னும் சில இருக்கலாம்.
1100 வில் இந்தி மொழி ஆதரவு இருக்கிறது. அதன் விசைகளிலேயே இந்தி இருக்கிறது. ஆனால் அதில் தமிழ் கட்டமாகத்தான் தெரிகிறது.
கருத்துரையிடுக