இன்று அதில் பார்த்த ஒன்று பயங்கர சிரிப்பை வரவழைத்தது பத்ரி சேஷாத்ரியின் கருத்துச் சுதந்தரம் என்ற இடுகைதான் அது. அதில் பத்ரி (மறுமொழி மட்டுறுத்தல் ஆசான்:), இவர் சொல்லபோய்த்தான் ப்ளாக்கரின் புதுசாய் அந்த வசதி வந்தது எனக்குத் தெரிந்தது, அதுக்குமுன்பே அது இருந்ததுபோலவும் நாங்கள் தான் ஒளித்துவைத்தது மாதிரியும் இன்னொரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருப்பது வேறுகதை) தன் மட்டுறுத்தல் கொள்கைகளாக அப்போது இவர் அறிவித்தது:
கருத்து ரீதியாக நான் செய்யப்போவது (இப்போதைக்கு) இதுதான்:
- spam, தேவையற்ற வெட்டி விளம்பரங்கள் ஆகியவை வெட்டப்படும்.
- மூன்றாவது மனிதர்களை (என்னை அல்ல) பற்றி ஒருவர் எழுதும்போது defamation/libel என்று நான் அதைக் கருதினால் அதனை வெளியிட மாட்டேன்.
- என்னைப் பற்றி எந்த விமரிசனத்தையும் வெட்டமாட்டேன் - ஆனால் கீழ்த்தரமான "கெட்ட" வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதை வெட்டுவேனா மாட்டேனா என்று இன்னமும் யோசிக்கவில்லை.
- ஒரு பதிவுக்குச் சம்பந்தமற்ற பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.
இவைதான் இப்பொழுதைக்கு...
அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க:) ) என்னைச் சூழ்ந்து தர்ம அடி போட்டபோது என்னால் யாருக்கும் பதில் தர நேரமோ, பொறுமையோ, மனநிலையோ வாய்க்கவில்லை.
அப்போது நடுநிலைவியாதிகள் வேசம் போட்டுக்கொண்டிருந்த முக்கால்வாசி பதிவர்கள் 'எங்கேயோ மழை பெய்யுது, எங்கேயோ காத்தடிக்குது' என்ற மோன நிலையில் இருந்தார்கள்.
சில வாரங்களுக்கு முன் பரண்மூலம் அன்று நடந்த கூத்துக்களையெல்லாம் இன்று படித்து ரசித்து சில பதிவுகளில் என் மறுமொழியையும் இட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பத்ரியின் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் (இதற்கு அவர் முதலில் வைத்த தலைப்பு '... சில அறிவிப்புகள்', அது என் 'அறிவிப்பு' இடுகைகளைக் கிண்டல் செய்ய விரும்பி, பிறகு அப்பட்டமாக எழுதினால் தன் புனித பிம்பத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி இப்படி மாத்தீட்டாருன்னு இப்ப புரியுது, எளவு, அன்னிக்குப் புரியலை! ஆதாரம்: இன்னும் தமிழ்மணம் தரவுத்தளத்திலுள்ள தலைப்பு '...அறிவிப்புகள்'தான், இதுபற்றிய என் மறுமொழியையும் பார்க்கலாம்.)
அதில் முதல் வாக்கியம்: 'இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)'
இன்றைக்கு இவங்க அரசியல் எல்லாம் புரிந்துவிட்டதால், இதை விட்டுவிட மனமில்லாமல் ஒரு கேள்வி கேட்டேன்: 'ஊர் உலகத்தில் நடப்பதைப்பற்றியெல்லாம் எழுதுபவருக்கு தன்னைச்சுற்றி நடப்பதைப் பற்றி எழுத ஒண்ணுமில்லையா? நல்லாருக்கு உங்கள் பரந்த பார்வை' (இந்தாளு இதைக்கூட நிறுத்தி வைப்பாருன்னு தோணாம அதை சேமிச்சுக்கூட வைக்காமப் போயிட்டேன்!)
அதுக்கு முன் வேறு இடுகைக்கு நான் எழுதிய மறுமொழிகள் உடனுக்குடன் மட்டுறுத்தப்பட இது மட்டும் பலநாள் கிடந்தது. இன்னொருமுறையும் எழுதிக் கேட்டேன். ம்ஹும். பெட்டி பூட்டுனது பூட்டுனதுதான்.
இதில் என்ன தனிமனிதத் தாக்குதல், என்ன 'கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகள்', ஒரு எளவும் புரியலே!
புனித பிம்ப .சிருகள் வாழ்க!
டிஸ்கி:
1. 'நான் இதுவரைக்கும் 900 கமெண்டு போருக்கேன் சார்வாள் ஒண்ணையும் நிறுத்தலை, தங்கம்'னு சர்டிபிகேட் கொடுக்கறவங்க அப்பீட்டாகிக்குங்க. இங்க, வராததைப் பத்தி மட்டும்தான் பேச்சு.
2. 'இங்கே மட்டும் மட்டுறுத்த மாட்டியா, எல்லாம் போடுவியா?'ன்னு கேக்கறவங்களுக்கு 'ராசா, இது ஒரு *சர்வாதிகார*, *த..க் கம்மனாட்டியின்* வலைப்பதிவு, இங்க நான் வெச்சதுதான் சட்டம், இஷ்டமிருந்தா எழுது இல்லாட்டிப் போயிட்டே இரு'ங்கறதுதான் பதில்.
3. சாரைப் பத்தி அறிவுத்திருட்டு அது இதுன்னு எழுதி ஒய்ஞ்சவங்க எதுனா இங்க வந்து கும்முனா, 'அது என்னோட சட்ட அறிவுக்குட்பட்டே மட்டுறுத்தப்படும், எதுக்கும் நான் கியாரண்டி இல்லை'ங்கைறதையும் சொல்லிடறேன்.
4. 'பட்டறை மேளாவுல பலரும் பேசுனதையெல்லாம் வலையேத்துனவர் என் உளறலை ஏன் ஏத்தலைங்கற காண்டுலதான் கரிக்க்கிறான் வயத்தெரிச்சல் புடிச்சபய'ன்னாலும், 'ஆமா அப்படின்னே வெச்சுக்க, இப்ப அதுல என்ன தப்புங்கறேன்'ன்னு இப்பவே கேட்டுக்கர்றேன். அதுமட்டுமில்ல, இந்தியா டுடே போட்டாவிலிருந்து, ரிப்போர்ட்டர்ல எம் பொண்டாட்டி சொன்னதா அவனவன் விருப்பத்தை எளுதிக்கிட்டதிருந்து,
மக்களே, கடைசியா, சார் எழுதறதெல்லாம் 'politically very correct', ஆனா நான் சொல்லிக்கறது 'people, be alert!'
61 கருத்துகள்:
Are u the same Kasi?
No, he is dead. This is different Kasi:))
He was rather killed:P
காசி பதிவுக்கு நன்றி. பதிவர்களின் நடத்தைகளை பதிந்து வைப்பது
சுய/பிறர் விமர்சனங்களுக்கு உதவும். தமிழ்மணம் தொடரந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவது
இங்கே பலவருடங்களாக பதிவர்களாக இருப்பவர்களுக்கு கூட சாதரண முறையில் கூட உறுத்துவதில்லை. அப்படி உறுத்தினால் அவர்கள் பார்ப்பன எதிரிகளாக சித்தரிப்பதும் இன்னொரு
யுக்தியாக மேற்கொள்ளப்படுகிறது. இன்னொன்று முக்கியமானது, பதிவர் பெயரிலி கனவிலே வீடுகட்டினாலும் நன்னடத்தை யோக்கியவான்களின் திருவாய் மலர்ந்தருளுவதில் விலாவரியாக் வரும் ஆனால் இங்கே பதிவிலே சுட்டியதெல்லாம் வராது. அட சல்மா அயூப் கூட வராதுன்னா இது எந்த மூலை.
இதையே நாம் புனிதபிம்ப ம...ன் பெரும் சாதனையாகக் கொள்ளவேண்டும்.
இப்படி இருப்பதுஅவர்கள் அரசியல் அவர்கள் சுதந்திரம் அதை நானும் மதிக்கிறேன். ஆனால் பசுத்தோல் மட்டும் விலக்க யோசிக்கலாம் அல்லவா?
மேலே எழுதியது வலைப்பதிவர் கார்த்திக்ராமாஸின் தனிப்பட்ட கருத்து.
//ஒரு எளவும் புரியலே!//
அதே!
மறுமொழி விசயம் பற்றி - ஓக்கே!
வலைப்பதிவுலக புனிதப்பிம்பங்கள் பற்றி - ஒருவரல்ல (as per your words). இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்யவேஏஏஏஏஏஏஏ இருக்கிறார்கள். சிலரது உடனே கிழிக்கப்படலாம். சிலரது கிழிய சில நாளெடுக்கலாம். சிலரது கிழிபடாமலே போகலாம்!!! இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது. ;)
ஆனால், தனிப்பட்ட அளவில் ***நான்*** கற்றுக்கொண்டது நிறைய.
[நீங்க வலைப்பதிவு தொடங்கின சமயத்தில் இந்த பிரமுகர்கள் - தமிழ்ப்பிரமுகர்கள் - தமிழ் இணையப் பிரமுகர்கள் - (கூடவே தமிழ்வலைப்பதிவுப் பிரமுகர்கள்) - துதிபாடல்கள் பற்றிச் சொன்னது நினைவிருக்கா? :)
-மதி
http://mugamoodi.blogspot.com/2005/10/blog-post_112977597462865817.html#c112980557278855687
உள்ளேன் ஐயா
சரியா நினைவில்லையே மதி. வயசாச்...:)
சிலது ஏன் கிழிபடாமலே போகணும். கிழிக்கவேண்டியதுதானே, என்னுதானாலும்!
//இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது. ;)//
இந்தப் பூனைங்க தொல்லை தாங்க முடியலப்பா... சிலது மெரினா மணலிலேயே தலையைக் கவுத்துக்கிட்டு 'என்னது இந்திரா காந்தியச் சுட்டுட்டாய்ங்களா?'ன்னு கேக்கும் பாருங்க.... முந்தியெல்லாம் கபகபன்னு எரியும், இப்பல்லாம் சிரிச்சுக்கறதுதான்.
//பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது//
நானும் படிக்கிறேன், மறு மொழியிடுகிறேன்.
//பெட்டி பூட்டுனது பூட்டுனதுதான்.//
பொட்டி அவருதுதானே.. விடுங்கண்ணே..
//ஆனால் பசுத்தோல் மட்டும் விலக்க யோசிக்கலாம் அல்லவா?//
ஹ்ஹஹஹ்ஹ, கனவு காணறீங்களா கார்த்தி.. இதெல்லாம் நடக்காது..
//தமிழ்மணம் தொடரந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவது
இங்கே பலவருடங்களாக பதிவர்களாக இருப்பவர்களுக்கு கூட சாதரண முறையில் கூட உறுத்துவதில்லை. அப்படி உறுத்தினால் அவர்கள் பார்ப்பன எதிரிகளாக சித்தரிப்பதும் இன்னொரு
யுக்தியாக மேற்கொள்ளப்படுகிறது. //
இன்று கதை வேறங்க. பார்ப்பன அடிவருடின்னுதான் சொல்லப்படுகிறது. ட்ரெண்ட் மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்,. வேணுமின்னா ஒரு கொரலு வுட்டு பாருங்க.(மதியக்கா சொன்ன மாதிரி ***நான்*** பெற்ற அனுபவம்தான்)
காசி,
ஏதோ விரக்தில இருப்பது போல தெரியுதே, அது சரி உண்மையான நடுநிலைவாதிகள் தங்களை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார்கள்,(நீங்களும், நானும் தான்னு வையுங்களேன்) அப்படி சொல்லிக்கொண்டு வருபவர்கள் எல்லாம்... ஓர சார்புள்ளவர்கள் தானே,
ஆமாம் நீங்க எந்த நடுநிலை வியாதிகளை சொல்றிங்க? :-))
ஏன்னா நான் எல்லாம் நடுநிலைவாதினு பிரகடணப்படுத்தாமல் நடு நிலையாக இருப்பவன், அதான் ஒரு சந்தேகம், நான் தான் அப்படிலாம் சொல்லிக்கவே இல்லையேனு :-))
(ஒரு மனுஷன் விருப்பு வெருப்பு இல்லாமல் இருக்க முடியாது போல)
நீங்கள் போலிகள் உஷார்னு சொல்லியே பதிவ போட்டு இருக்கலாம், யார் உங்களுக்கு தூக்கு தண்டனை தரப்போறா?
தெகிரியமா சொல்லுங்க!
வெளிப்படையாக பேசுவது ஒரு விரும்பதக்க மாற்றம், நீங்களும் அப்படி பேச முன்வருது மகிழ்ச்சியே!இம்மாற்றம் நீடிக்கட்டும்!
இளா,
//இன்று கதை வேறங்க. பார்ப்பன அடிவருடின்னுதான் சொல்லப்படுகிறது. ட்ரெண்ட் மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்,.//
எப்படி அது, கார்த்திக்ராமாஸ் சொன்னது பரவாயில்லை, உண்மை அது தான், ஆனால் நீங்கள் சொல்வது எப்படி என்று புரியவில்லை.
எனக்கு இந்த அரசியல் நீரோட்டங்கள் லேசாக புரியாது அது தான் கேட்டேன்!
konjam puriyara madhiri eludharadhu!!
-11thirai
---நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது---
என்னோட காதோட மட்டுமாவது சொல்லுங்க... யாரு அந்த ரெண்டு நல்லவங்க?
கிசுகிசுவிரும்பி
பாலாஜி
---இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது.---
'அண்ணே அண்ணே... சிப்பாயண்ணே', ஊரே கெட்டுக் கிடக்கு... காலமே கெட்டுப் போச்சு என்பது மாதிரி சொல்லாமல், யார்/ஏன்/எவ்வாறு உங்கள் பிம்பங்கள் ஏன் உடைந்தது என்று சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
தருமி, நான் இங்க எளுதுனது புரியலையா, இல்ல நான் அங்க சொன்னதுக்கு ஆதரவா? ஒண்ணும் புரியலை போங்க:)
இளா, பொட்டி அவருதாவே இருக்கட்டும், யார் எப்படின்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?
வவ்வால், விரக்தியா? யாருக்கு? எதுக்கு? :))
ரெண்டு வருசம் முன்பு நீங்க வலைப்பதிவில் இருந்தீங்களா? (வேற பெயரிலாவது;P). அதனால் இது உங்களைக் குறிக்குமான்னு தெரியலை.
//நீங்கள் போலிகள் உஷார்னு சொல்லியே பதிவ போட்டு இருக்கலாம், யார் உங்களுக்கு தூக்கு தண்டனை தரப்போறா? // போலிகள் இங்க எங்க வந்தாங்க?
//வெளிப்படையாக பேசுவது ஒரு விரும்பதக்க மாற்றம், நீங்களும் அப்படி பேச முன்வருது மகிழ்ச்சியே!இம்மாற்றம் நீடிக்கட்டும்!// என்னிக்குமே நான் வெளிப்படைதான். எனக்கு பாசாங்கு பண்ணத் தெரியாதுங்க. என்ன தமிழ்மணம் பொறுப்பிலிருந்தவரை சில கடமை, பொறுப்புணர்வு என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இப்ப ஜாலி, எல்லா லூசுகளையும் போல நானும் பிரீபேர்டு! லூசுன்னா இறுக்கமற்ற நிலைன்னு புரிஞ்சுக்கணும் :P
//நடந்ததை அசைபோடுவது வயசான காலத்தில் நல்ல பொழுதுபோக்கல்லவா? :P//
ரிப்பீட்ட்ட்ட்ட்டு:-)))
//ஆமாம், உங்களுக்கு என்னா அப்படி வயசாச்சுன்னு இந்தப் புலம்பல்?இந்தப் பூனைங்க தொல்லை தாங்க முடியலப்பா... சிலது மெரினா மணலிலேயே தலையைக் கவுத்துக்கிட்டு 'என்னது இந்திரா காந்தியச் சுட்டுட்டாய்ங்களா?'ன்னு கேக்கும் பாருங்க.... முந்தியெல்லாம் கபகபன்னு எரியும், இப்பல்லாம் சிரிச்சுக்கறதுதான்//
இப்பத்தான் காந்தியைக் கொன்னுட்டாங்கன்னு படிச்சேன் ,இப்ப என்னன்னா இந்திரா காந்தியையுமா?!!!!!
உண்மையாத்தான் சொல்றீங்களா பூனைகள் தொல்லை தாங்கமுடியலைன்னு?:-))))
யம்மா -11திரை, புரியாட்டி வுட்டுடுங்க. மூளை சுளுக்கிக்கப் போவுது:)
பாபா, உங்களுக்கா தெரியாது என் வாயைப் புடுங்காதீங்க. உங்க ரெண்டாவது கேள்வி மதிக்குத்தானே.
உள்ளேன் ஐயா. எனது இப்பதிவுகளை இங்கு பின்னூட்டமாக வைக்கிறேன், சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ. ஏனெனில் அவற்றில் தமிழ்மணம் பற்றிய எனது உண்மையான கருத்துக்கள் உள்ளன.
1
2
3
உங்களிடம் எனக்கு ஒரு சிறு வருத்தம் உண்டு. நின்று சண்டை போடவேண்டிய பல தருணங்களில் அப்பால் அகன்றீர்கள். அதனால் உங்கள் மேல் பலர் அவதூறு செய்ய நேர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
துளசி, நான் பொய் சொல்லவில்லை!
டோண்டு,
//நின்று சண்டை போடவேண்டிய பல தருணங்களில் அப்பால் அகன்றீர்கள். அதனால் உங்கள் மேல் பலர் அவதூறு செய்ய நேர்ந்தது. //
எனக்கு இருந்த பொறுப்புகளும் சுமைகளும் தெரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டீர்களய்யா. ஒரு கூகுள்/யாஹூ குழுமம் பொறுப்பாளராய் இருப்பவர்களைக் கேட்டுப்பாருங்க, அதுவே எத்தனை சுமைன்னு. அது மாதிரி பத்து மடங்கு சுமந்திருக்கிறேன், சுயநலமும் பாசங்கும் மட்டுமே பிரதானமான (பெரும்பாலான) பதிவர்களுக்காக! இந்த வரையறையில் சேராத என் மதிப்புக்குரிய பதிவர்கள் இப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிக்கட்டும்.
உங்கள் அறிவுரை உங்களுக்கு. என் சூழ்நிலை எனக்கு!
// டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா?// பார்த்தேன். நீங்கள் தமிழ்மணத்தை விட்டு விலகுவதும் விலகாததும் உங்கள் பிரச்னை. உங்கள் சுயநலம் உலகப் பிரசித்தம். உங்களிடம் பாசாங்கில்லை என்பதே நான் மரியாதை காட்டக் காரணம். You support thamizmanam not because of any righteousness, it is just because of its usefulness to you:)
//You support thamizmanam not because of any righteousness, it is just because of its usefulness to you:)//
உங்கள் இச்செய்திக்கு நான் இவ்வாறு பதில் கூறுகிறேன்.
"I support thamizmanam not only because of any righteousness, it is also because of its usefulness to me:)"
அப்படிப் பார்த்தால் சுயநலம் இல்லாதவர் யார்? Mine is enlightened self-interest.
இந்த போலி டோண்டு பிரச்சினையையே எடுத்துக் கொள்வோம். பலர் இதை முதலில் எனது பிரச்சினையாக மட்டுமே பார்த்தனர்.
நான் முதலிலிருந்தே கூறிவந்தேன். இது ஒருவர் பிரச்சினை மட்டும் அல்ல, ஒவ்வொருவருக்கும் முறை வைத்து அது வரும் என்று. அவ்வாறே நடந்து ஒரு அளவிற்கு மேல் முக்கியமான பலர் சேர்ந்து அவனை தூக்கி எறிந்தனர்.
அப்போது கூட நான் யாரிடமும் முதலில் அவர்கள் எடுத்த நிலைக்காக குறைகூறவில்லை. ஏனெனில் எனது முக்கியக் கவலை போலியை ஒழிப்பதே.
இது சம்பந்தமாக நாம் இருவருமே ஒருவருடன் ஒருவர் பல ஊடகங்களில் பேசியுள்ளோம். இதிலும் எனது சுயநலத்தைப் பார்க்கலாம்.
ஆனால் எனது சுயநலம் இந்த விஷயத்தில் பொது நலத்தையும் சார்ந்திருந்ததால்தான், பின்னூட்ட மட்டுறுத்தல் என்பது பொது விதியாகப் போயிற்று. தமிழ்மணமே அதைக் கட்டாய ஷரத்திலிருந்து நீக்கியும் யாரும் அதை இன்னும் விட்டுவிடவில்லை.
ஆனால் இப்போது இவ்வளவு ஆப்வியஸ் ஆக இருப்பதை நிலைநிறுத்த எவ்வளவு விவாதங்கள் நடந்தன என்பதையும் பாருங்கள்.
தமிழ்மணமே பலரது ஐப்பிக்களை வெளியில் தருகிறது என்ற கருத்தை எதிர்த்தே நான் செயல்புரிந்துள்ளேன். இதுவும் என் சுயநலமே, ஏனெனில் இம்மாதிரியான நல்ல ஏற்பாடு இதனால் எல்லாம் சீர்குலையக்கூடாது என்பதே அது. அப்படி நடந்தால் என் நலனும்தானே பாதிக்கும்?:))
சண்டை போட வேண்டிய தருணங்களில் நீங்கள் அகன்றதை நான் குறிப்பது முகமூடியின் இப்பதிவில் வந்த விஷயத்துக்காகவே. அதில் எனது பின்னூட்டங்களைப் பாருங்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் காத்த மௌனம் எனக்கு வருத்தத்தை தந்தது. அச்சமயம் நீங்கள் தமிழ்மணம் நிர்வாகத்தில் இல்லைதான். இருப்பினும் ஒரு சிறு க்ளாரிஃபிகேஷன் பல விஷயங்களை சரி செய்திருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அண்ணே, பதிவ் ட்ராக் மாறாப்ல தெரியுது. இல்லே எனக்குத்தான் அப்படித்தோணுதோ தெரியல.. இருந்தாலும், அப்படி பெஞ்சுல உக்காந்துக்கிறேன், நீங்க பேசுங்க. சோடா வேணும்னா தரட்டா?
**அச்சமயம் நீங்கள் தமிழ்மணம் நிர்வாகத்தில் இல்லைதான்.**
ஞே...
ஒரு சுயநலவாதி இன்னொருவரை சுயநலவாதி என்கிறார், சபாஷ், சரியான போட்டி!
அட அனாமதேயமே,
ராஜேந்திரகுமார்னு ஒருத்தர் ஆரம்பிச்சு வெச்சதைதானே சொல்ல நினைச்சே, அது 'ஙே...', இது கூடத் தெரியலையா!
'ஞே'ன்னா என்ன அர்த்தம்?
//No, he is dead. This is different Kasi:))//
I Love this :-) சில பின்னூட்டங்கள் அவ்வப்போது நினைத்து சிரிப்பேன், அந்த வரிசையில் இதுவும் ஒன்று.....
புனித பிம்பங்கள் பற்றி... ஹா ஹா சொல்வதற்கு ஒன்றுமில்லை.... எவனும் கேணையில்லை எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள்...
ஆஹா... அண்ணாத்தே புல் பார்முக்கு வந்தா மாதிரி தெரியுது.
எங்களை மாதிரி சின்ன லெவல் தி.குஞ்சுகள் எல்லாம் இனிமே எஸ்கேப்பு ஆவ வேண்டியது தான் :-)))))
காசி,
//No, he is dead. This is different Kasi:))//
இதனால் தான் ஏதோ விரக்தியா எனக்கேட்டேன்!
அதான் நான் தான் பிரகடணப்படுத்திக்கொள்ளாத நடுநிலையாச்சே, நீங்க சொன்னது யாரைனு தெரிந்துக்கொள்ள ஒரு பிட்டைப்போட்டேன் :-))
எல்லாம் பெரிய எழுத்து சித்தர்கள், நமக்குலாம் சரிவராது வேடிக்கை மட்டும் பார்ப்போம்னு 2 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் வலைப்பதிவு வாசகனாக இருந்தேன், அப்புறம் பார்த்தா நாமே இவங்களை விட கொஞ்சம் பெட்டரா எழுதுவோம்னு தோன்றியது களத்தில் குதித்துவிட்டேன்.
ஆகா போலி என்றால் அப்படி வேற அர்த்ததில போய்டுமா, புனித பிம்பம் என்பதே எதிர்மறையாக புனிதம் இல்லாதவர்களைத்தானே சுட்டுகிறது, அதனால் தான் உண்மையான கருத்துக்கள் இல்லாமல் வெளிவேஷம் காட்டுபவர்களை போலி என்று சொல்ல வந்தேன்,எனவே புனித பிம்பங்களும் போலிகள் தானே! மற்றப்படி ஆள்மாறாட்ட அவதூறுப்போலியை சொல்லவில்லை.
//You support thamizmanam not because of any righteousness, it is just because of its usefulness to you :)//
உண்மையை பட்டுணு போட்டு உடைச்சிட்டிங்களே :-))
//No, he is dead. This is different Kasi:))//
ஒருவேளை ஒரிஜினல் காசியோட ஜிமெயில் ஐடியையும் சுட்டுட்டாங்களோ? இது டூப்ளீகேட் காசியோ? :(
எந்த புத்துல எந்த பாம்புன்னே தெரியலையே? ஹரஹர சிவசம்போ!!!!
\\ஒருவேளை ஒரிஜினல் காசியோட ஜிமெயில் ஐடியையும் சுட்டுட்டாங்களோ? இது டூப்ளீகேட் காசியோ? :(
எந்த புத்துல எந்த பாம்புன்னே தெரியலையே?\\
அப்படீன்ன,
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தோர் கெதி என்னாவுறது.....?
டோண்டு,புனித பிம்பங்கள் நிலையே இப்படி இருக்கையில் தலையில்லா முண்டத்தினுடன் மல்லுக்கட்டி என்ன பிரயோசனம்? அந்த இடுகை மூலமா உங்களைப் பத்தியெல்லாம் இன்னும் நல்லாத் தெரிஞ்சுக்க முடிஞ்சுதே!
இளா, ஒரு கிளாஸ் ஜீராவெள்ளம் கிட்டுமோ?
பாரதி, ஒத்திக்க.
குழலி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
லக்கிலுக், தி.குஞ்சு இங்கே எவன்? போலிக்கு சாமரம் வீசுறவன், நாடகம் போடுபவன் எல்லாம் தி.கு.வில சேத்தியா இல்லையா? இந்த ஆரிய அரைவேக்காடுகளையும் பாத்தாச்சு, திராவிட குஞ்சுகளையும் பாத்தாச்சு, என்னைய எதுலயும் பிராக்கெட் போடாதீங்க கண்ணுகளா. பெரியார் ஒண்ணும் எனக்கு நாத்திகம் சொல்லித் தரலை. பத்து வயசிலயே முழு நாத்திகன் நான். 17 வயசில ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை'யை ரெண்டு வாட்டி படிச்சுட்டேன். அப்புறமாத் தான் பெரியார்னு ஒர்த்தரையே தெரியும். இன்னும் அவரைப் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறேன். நம்மாழ்வார் திருவாய்மொழியும் 2 வால்யூமும் பக்கத்திலயே இருக்கு:P ஒருத்தன சுயம்புவா இருக்க விடுங்கப்பு.
வவ்வாலு, எங்கேயே பாத்த மாதிரி இருக்குன்னு நெனச்சுக்கிட்டேன், அப்ப பழைய ஆளுதானா நீங்க! சித்தராவது பித்தராவது, எல்லாமே ஈத்தர்!
//ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தோர் கெதி என்னாவுறது.....?//
நீ கொடுக்கலையில்ல, போயிட்டே இரு.
காசி அண்ணாச்சி
நவீன கவுஜை மாதிரி பூடகமாப் பேசி என்னை இருண்மைல தள்ளாதீங்க.
இப்பத்தான் நீங்க லூசாச்சே :-) அதனால தகிரியமா இவங்க இவங்க எல்லாம் புனித பிம்பம் போட்டுக்கிட்டு எனக்கு காலுக்கடியில திரியைக் கொளுத்திப் போட்டானுங்கன்னு சொல்லுங்க.
'ஏம்லே அப்படிச் செய்திய சவத்து மூதிங்களா?'ன்னு ஆவேசமா ஒரு பதிவைப் போட்டு வைக்கிறேன். நம்மாள அதுமட்டும்தான் முடியும்
அப்புறம் குழும நிரிவாகி விசய்ம். அது ஒரு பெரிய காமெடி. நானும் ஒரு குழுமம் வச்சிருக்கேன். பண்புடன்' அப்படின்னு பேரு.(எப்படி சந்தடிச்சாக்குல வெளம்பரம் போடுதேன் பாருங்க:-)அதுதான் எனக்கு 'மூச்சு பேச்சு ஊச்சா எல்லாம்'ன்னு நான் நெனைக்குறதில்ல அதனால அதுல பெரிய சுமையெல்லாம் வர்றதுமில்ல.
ஆனாலும் சில சமய்ங்கள்ல கடுப்பு வரும் பாருங்க. இருந்தும் அடுத்த ஸ்டாப் வரைக்குமாவது அடக்குவோம்னு ஒண்ணுக்கு போறதை அடக்குற மாதிரி அடக்கிக்க வேண்டியதுதான் :-)
அப்புறம் சுயநலவாதி பதிவர்கள்னு சொல்லி தனிமனிதக் கீறல் செய்திருக்கும் உங்களைக் கண்டித்து ஒரு பதிவு போட்டுடறேன். ஜூடான இடுகைல சேர்த்த மாதிரி இருக்கும்
ஆனாலும், இன்னைக்கு நான் இப்படி மொக்கையா போட்டுத் தாளிக்குறேன்னா அதையெல்லாம் திரட்டி தமிழ்மண்மா கொண்டு வந்த பாவத்துக்கு உங்களுக்கு இதெல்லாம் வேணும்யா :-)
நல்லா இருங்கய்யா!
சாத்தான்குளத்தான்
//பெரியார் ஒண்ணும் எனக்கு நாத்திகம் சொல்லித் தரலை. பத்து வயசிலயே முழு நாத்திகன் நான். 17 வயசில ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை'யை ரெண்டு வாட்டி படிச்சுட்டேன். அப்புறமாத் தான் பெரியார்னு ஒர்த்தரையே தெரியும். இன்னும் அவரைப் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறேன். நம்மாழ்வார் திருவாய்மொழியும் 2 வால்யூமும் பக்கத்திலயே இருக்கு ஒருத்தன சுயம்புவா இருக்க விடுங்கப்பு.
//
யப்பா. ப்ரொபைல் ரொம்ப சூப்பரா இருக்கே ;)
ஆசிப்,
//நவீன கவுஜை மாதிரி பூடகமாப் பேசி என்னை இருண்மைல தள்ளாதீங்க.//
அய்யோ, நானா கவுஜனா? லூசா வேணாலும் இருந்துட்டுப் போயிர்றேன், இந்த வேலை வேணாமே.
//இப்பத்தான் நீங்க லூசாச்சே :-) அதனால தகிரியமா இவங்க இவங்க எல்லாம் புனித பிம்பம் போட்டுக்கிட்டு எனக்கு காலுக்கடியில திரியைக் கொளுத்திப் போட்டானுங்கன்னு சொல்லுங்க.//
சொன்னா?
//'ஏம்லே அப்படிச் செய்திய சவத்து மூதிங்களா?'ன்னு ஆவேசமா ஒரு பதிவைப் போட்டு வைக்கிறேன். நம்மாள அதுமட்டும்தான் முடியும்//
இந்த மட்டும்தான் முடியும்னதுக்கப்புறம் எதுக்கு வெட்டிவேலை? அதுவா சமயம் வரும்போது வரட்டும்.
//அதுல பெரிய சுமையெல்லாம் வர்றதுமில்ல.//
ம...டி மகாத்மியமெல்லாம் கேள்விப்பட்டதை வெச்சுச் சொன்னது அது. 'பண்புடன்'னு பேருவெச்சதுனால எல்லாரும் பண்போட நடந்துக்கறாங்களோ என்னமோ:P
//அதையெல்லாம் திரட்டி தமிழ்மணமா கொண்டு வந்த பாவத்துக்கு உங்களுக்கு இதெல்லாம் வேணும்யா :-)//
இதுமட்டுமா வேணும் இன்னமும் வேணும்.
லக்கிலுக், ;)
படா தமாஷாக்கீது வாத்யாரே!
(அல்லாத்தையும் சேத்துத்தான் சொல்றேன்!)
;)
// சிலரது உடனே கிழிக்கப்படலாம். சிலரது கிழிய சில நாளெடுக்கலாம். சிலரது கிழிபடாமலே போகலாம்!!!//
சத்தியமான வார்த்தைகள்.
அரிதாரத்தோடு வாழ்பவர்கள் என்றாவது ஒருநாள் அறிந்தோ அறியாமலோ அதை தாங்களாகவே கலைக்க நேரிடும். எதிர்கொள்பவனின் புரிதலுக்கேற்ப அதிர்வுகளோ, ஆச்சரியங்களோ, ஏமாற்றமாங்களாகவோ அமையும்.
பதிவில் நான் மிகவும் ரசிச்சது
//மக்களே, கடைசியா, சார் எழுதறதெல்லாம் 'politically very correct', ஆனா நான் சொல்லிக்கறது 'people, be alert!'//
விழிப்புடன் இல்லாவிட்டால் விழுப்புண்களோடு வீழ்ந்திடத்தான் வேண்டும்.
// தமிழ்மணப் பக்கத்தையே காமிச்சுங்கூட தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும், //
வரட்டும். எதிர்பார்க்கிறேன். அதைப்பற்றி நீங்கள் மட்டும்தான் பேச முடியும்.
முடிந்தவரை எல்லாவற்றையும் பதிவு செய்வது நலம். நாளைய திரித்தல்களுக்கு எதிராக அவைகளே சிறந்த ஆயுதங்களாக இருக்கும்
///...அப்போதுதான் பத்ரியின் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் (இதற்கு அவர் முதலில் வைத்த தலைப்பு '... சில அறிவிப்புகள்', அது என் 'அறிவிப்பு' இடுகைகளைக் கிண்டல் செய்ய விரும்பி, பிறகு அப்பட்டமாக எழுதினால் தன் புனித பிம்பத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி இப்படி மாத்தீட்டாருன்னு இப்ப புரியுது, எளவு, அன்னிக்குப் புரியலை! ஆதாரம்: இன்னும் தமிழ்மணம் தரவுத்தளத்திலுள்ள தலைப்பு '...அறிவிப்புகள்'தான், இதுபற்றிய என் மறுமொழியையும் பார்க்கலாம்.)///
காசி, பதிவின் இந்தப் பகுதிக்கு மட்டுமான என் எண்ணம்..
இந்தப் பதிவில் அவர் தலைப்பில் முதலில் உபயோகித்த வார்த்தை அறிவுரைகள். ஒரு கணினிக் குறிப்புக்கான Instructions என்பதற்கான சரியான வார்த்தையாக அறிவுரைகள் என்றுதான் எழுதியிருந்தார். ஆனால் அறிவுரை என்பது இப்போது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு advice என்றும் அர்த்தம் தருவதால், அந்த வார்த்தை பலருக்கு அலர்ஜி என்பதால் ஆலோசனைகள் என்று- நான் சொல்லி, தனக்கும் அதுவே சரியாகத் தெரிவதாகவும் அவசரத்தில் தட்டிவிட்டதாகவும் சொல்லி மாற்றினார். ஆனால் அது தமிழ்மணம் பக்கத்தில் தலைப்பு மட்டும் மாறாமலே அறிவுரைகள் என்றே வந்துகொண்டிருந்தது.
மற்றபடி நீங்கள் எழுதியிருப்பது போல் உங்கள் பதிவின் தலைப்பை ஒற்றி அறிவிப்புகள் என்று எழுதியிருக்கவில்லை. அப்போது எங்களுக்குள் நடந்த யாஹூ சாட் மூலம் என்னால் இதை நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால் என் பொட்டி புட்டுக்கொண்டதால் அவை எல்லாம் அழிந்துவிட்டன. உங்களால் தமிழ்மணம் பக்கத்தில் சரிபார்க்க முடிந்தால் பொறுமையாக நீங்களே பார்த்துக் கொள்ளவும். நம்புவதும் நம்பாததும் ஒத்துக் கொள்வதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்தான். :) Thanks for this space.
காசி,
அதான் நீங்களே இங்க பின்னூட்டங்கள்லயே சொல்லிட்டீங்களே. இதுமட்டுந்தான் முடியும்னதுக்கப்புறமும், எதுக்கு வம்புன்னு ஒதுங்கிறப்பவும் எதுக்கு எனக்கு அந்த வெட்டிவேலை. அதுவா சமயம் வரும்போது வரட்டும்! வரும்!! :)
-மதி
போபோ.. ஸ்ஸ்ஸ்ஸ்.. பாபா,
அண்ணே... என்ன இருந்தாலும் (எனக்கெல்லாம்) உங்க அளவுக்கு வராதுங்ணா. ஒண்ணுமே தெரியாது தெரியாதுன்னு சொல்லிக்கினே கிகா பைட் கணக்கில எழுதுறதோ, சத்யசந்தராகவும் சாத்வீகியாகவும் காட்டிக்கொண்டே குத்துவகையில் எத்தனை குத்து இருக்கிறது என்று கோடி போடுவதோ, இன்னும் நிறைய தோ.. வோ நமக்கு தெரியாதுங்ணா. அதுனால நீங்க என்ன பண்ணுறீங்க நீங்க மொதல்ல மோட்சம் போங்க. [தியேட்டரில்லீங்ணா.. ;)] அப்பாலிக்கா மோட்சமெல்லாம் என் கால் படுற அளவுக்கு யோக்கியமான்னு பார்த்துக்கிறேன். ;)
-மதி
ஜெயஸ்ரீ,
பதிவின் *அந்தப் பகுதிக்கு* மட்டுமான என் பதில்:
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். புட்டுக்கொண்ட பொட்டியை சுட்டுக்கொண்டு வந்தால்தான் ஒத்துக்கொள்வேன் என்றெல்லாம் அடம் பிடிக்கவில்லை. முதலில் இடப்பட்ட தலைப்பு 'ஆலோசனைகள்' அல்ல என்பது மட்டுமே என்னால் இன்று சொல்லமுடிகிறது. அடுத்த வருடம் அதே நாளில் தமிழ்மணம் பரண் பார்த்தால் தெரிந்துவிடுகிறது:) அதானலெல்லாம் என் விமர்சனம் நீர்த்துவிடாது. இதெல்லாம் ஒரு ஒற்றை நிகழ்வை வைத்து சொல்லப்பட்டதல்ல!
வருகைக்கும் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி.
Welcome "back with a BANG"
//
// தமிழ்மணப் பக்கத்தையே காமிச்சுங்கூட தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும், //
வரட்டும். எதிர்பார்க்கிறேன். அதைப்பற்றி நீங்கள் மட்டும்தான் பேச முடியும்.
Athey Athey Athey!
-- Paandi
முத்துக்குமரன், மதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//புனித பிம்ப தமாஷ்! //
part 1,2,3.... ???
forgot to mention part numbers?
-- curiosity Govindu aka Paandi ;)
ஒரு விளக்கம்: என் பதிவில் பொருட்குற்றம், சொற்குற்றம், எழுத்துப்பிழை எல்லாம் எதுக்கும் ஒருதடவை பாத்துக்கலாம்னு புட்டுக்காத என் பொட்டியை நோண்டியதில் அது சிஎன் என் ஐபிஎன் இல்லை, சன்டிவிங்கறது தெரியவந்தது. நாள் ஜூன் 9, 2006.
கிர்ரென்று தலை ஒருமுறை சுற்றுகிறது...
நான் தூங்கப்போறேன்...
புது முயற்சிகளை முன்னெடுத்து செல்பவர்களை போற்றாவிட்டாலும் ஒற்றைப்பார்வையில் குறை சொல்லி விரக்தியை பரிசாக கொடுப்பதில் தமிழ் சமுதாயத்தை அடிக்கவே முடியாது ..ஹும்.
மாஹிர்,
இப்படி மையமா ஒரு மறுமொழி எழுதி வெச்சுக்கிட்டா பின்னாடி எதுக்காவது யூஸ் ஆவும். நல்ல ஐடியா. பொழச்சுக்குவீங்க:)
ஜோ, யாருக்கு விரக்தி? headless chicken ஒண்ணு பேய்புடிச்சு ஆடுதே அதைப் பாத்து சொன்னீங்களோ:P
காசி,
இந்தப்பதிவுக்கென்றில்லாமல் இதைப்படித்தபிறகு பொதுவாய்ச் சொல்ல நினைத்தது இது:-
வலைப்பதிவுகளின் வசதிகளை விரிவுபடுத்தல், அவை "அறிவுக் குழாமின்" பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற அளவில் நின்றுவிடாமல் சாதாரணமானவர்களும் அனுபவிக்க எடுத்துரைத்தல், முக்கியமாக வலைப்பதிவு எனும் சிறு ஊடகம் ஏறி உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒருவரையொருவர் சந்தித்தல் எனும் முக்கியமான தொழிநுட்ப வேலைகளை எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னார்வத்தில் மட்டுமே முயன்றும், உழைப்பைச் செலவிட்டும் கொண்டுவந்த உங்களைப் போன்ற ஆர்வலர்களோடு ஒப்பிடுகையில் இங்கெல்லாம் ஒரு சிறுதுரும்பையும் எடுத்துப் போட்டிராத, ஆனால் மேற்குறிப்பிட்ட முயற்சிகளால் விளைந்த பலன்களை அனுபவிப்பதில் சளைக்காத மனமுடைய ஆட்களில் ஒருவளாய் ஓரமாய் உட்கார்ந்து வலைப்பதிந்து வரும் ஆள்தான் நானெல்லாம்.
அப்படியிருந்தாலும் இங்கே நடந்தவைகளை, நடப்பவைகளைப் புரிந்துகொள்வதில் பெரிதாக எந்தச் சிரமமுமில்லை. சபைகளுக்கேற்றபடி சந்தர்ப்பங்களை மட்டுமல்ல , நியாயங்களையும் சட்டென்று உருவாக்கிவிடமுடிகிற சாதுரியங்களும், எங்கே தேனூற்றவேண்டும், எங்கே எப்போது சேறடிக்கவேண்டும் என்பதை கணக்கிட்டு நுட்பமாக, மிகநுட்பமாகச் செய்யத்தெரிந்த திறமைகளும், இவையெல்லாம் தடங்கல்களற்று இயல்பாக இருக்கமுடிகிற சாத்தியங்களும் இங்கே வாழ்வு குறித்துச் சொல்லித்தருபவை நிறைய. சிலநேரங்களில் சில இடங்களில் நின்று பேசுவதைவிடவும், நீங்கள் சொல்வதுபோல் நகைத்து நகர்ந்துவிடுவது எளிதாயிருக்கிறது.
செல்பேசியிலும் வலைப்பதிவு படிக்க இயலும் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி உங்களுக்கு. ஆனால் கணினிக்கே ஒழுங்காய் ஒருவாரம் தொடர்ந்தாற்போல் வந்து வலைப்பதிவு சமைக்காத எனக்கெல்லாம் அதனால் ஏதும் பயனிருக்குமா என்பது சந்தேகமே:))
காசி சார்,
// headless chicken ஒண்ணு பேய்புடிச்சு ஆடுதே அதைப் பாத்து சொன்னீங்களோ:P//
எப்போதும் போல இந்த பூடகமான விஷயம் எனக்கு புரியவில்லை . பரவாயில்லை .என்றென்றும் நீங்கள் ஆற்றிய பணியை நன்றியோடு நினைப்பவன் நான் .
அன்பு காசி,
தமிழக ஊடக 'அரசியலை' தினசரிகளை படித்தும், தொல்லைக்காட்சிகள் வழியும் அறிந்தது தான். கட்டற்ற கருத்துசுதந்தரம் என்று நம்பப்படுகிற இணையத்த்திலும் இந்த 'அரசியல்' வலைப்பதிவு எழுத துவங்கிய பின்னர் தான் புரிகிறது.
நடுநிலைவியாதின்னு ஒண்ணு இல்ல. வேணும்னா வெளியே தெரியாம இருக்கலாம்.
//தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும்,//
வெளிப்படையாக எழுதுவீர்கள் என நம்புகிறேன். அரிதாரங்கள் கிழிக்கப்படும் போது அவதாரங்களின் நாயகர்கள் முகம் பல்லிளிக்கும்.
'பேசுவதை போல, பேசாமல் இருப்பதும் அரசியல்'. பேசுங்கள்!
காசிண்ணா...
பத்ரி தலைப்பு வெச்சது உங்களுக்கு கிண்டலா தெரிஞ்சது உண்மையிலேயே - வடிவேல் சொல்றமாதிரி - சின்னப்புள்ளத்தனமா இருக்கு...
மற்றபடி அவருக்கு பின்னூட்டம் போட்டேன், வெளிய விடல அப்படீங்கறது படா காமெடிங்னா...
அவர் இஷ்டம், வெளிய உடலாம் உடாம போலாம், இப்ப இந்த பின்னூட்டத்தை கூட நீங்க உடலாம் உடாம போலாம்...அதுக்காக மூலையில குந்தி அழுவவா முடியும்...
சுத்த ஹிப்போக்கிரட் மனவியாதித்தனமா இருக்கே ?
ஊட்டி பக்கத்துல தான இருக்கு, கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்களேன்...
உருப்படியா ஏதாவது பிஸினஸ் பேசலாம்..!!!
நாஸ்டால்ஜியாவை தூண்டிய பதிவுக்கு நன்றி, காசி ;-)
You are (for sure) getting into sublime form :)
//என்னைச் சூழ்ந்து தர்ம அடி போட்டபோது என்னால் யாருக்கும் பதில் தர நேரமோ, பொறுமையோ,
மனநிலையோ வாய்க்கவில்லை.
அப்போது நடுநிலைவியாதிகள் வேசம் போட்டுக்கொண்டிருந்த முக்கால்வாசி பதிவர்கள் 'எங்கேயோ மழை
பெய்யுது, எங்கேயோ காத்தடிக்குது' என்ற மோன நிலையில் இருந்தார்கள்
//
http://balaji_ammu.blogspot.com/2005/10/blog-post_22.html
இதை நீங்கள் அப்போது/இப்போது பார்த்தீர்களா என்று தெரியாது ! அன்று சொன்ன வார்த்தை தான்
இன்றைக்கும் !
அடுத்து பட்டறை பற்றிய ராம்கியின் பதிவைத் தேடினேன், நான் இட்ட ஒரு பின்னூட்டத்திற்காக !
மனிதர், அவரது எல்லா பதிவுகளையும் அழித்து விட்டார் போலிருக்கிறது :( என் சேமிப்பில்
தேடினேன், கிடைத்து விட்டது ! அதில் ஒரு பகுதி மட்டும் கீழே:
***********************
//
சுனாமி நேரத்தில் தோள் கொடுத்த பி.கே.எஸ். சிவகுமார், நாகை பாபு, பத்ரி சேஷாத்ரி, ரோஸா வஸந்த் போன்றவர்களையும் தற்போது உதவி செய்து கொண்டிருக்கும் என்றென்றும் அன்புடன் பாலாஜி, சங்கர், சிங்கை அன்பு, ஹரிஹரன் உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமையும் பாக்கி இருந்தது.
//
இவர்கள் தவிர இன்னும் பலர், நம் முயற்சிகளுக்கு ஆதரவு தந்து வருகின்றனர். என் பதிவுகள் பலவில் உதவி செய்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் அறிவீர்கள்.
காசி வந்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவரை மேடையில் வைத்து அறிமுகப்படுத்தினார்களா, (தமிழ்மணம் கண்ட pioneer என்ற வகையில்) ?
*****************************************
All said and done, உங்கள் அறிவுரையை ('people, be alert!') தலை வணங்கி ஏற்கிறேன் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
மூன்றாம் வெள்ளிக்கிழமை இங்கே பவர் shut down எனவே மட்டுறுத்தத் தாமதமானதற்கு மன்னிக்கவும் நண்பர்களே.
செல்வநாயகி,
உங்கள் வசீகரமான வார்த்தைக் கோர்வை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. பொறாமையாயும் இருக்கிறது. உங்கள் கருத்துக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி.
//செல்பேசியிலும் வலைப்பதிவு படிக்க இயலும் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி உங்களுக்கு. ஆனால் கணினிக்கே ஒழுங்காய் ஒருவாரம் தொடர்ந்தாற்போல் வந்து வலைப்பதிவு சமைக்காத எனக்கெல்லாம் அதனால் ஏதும் பயனிருக்குமா என்பது சந்தேகமே:))//
இதெல்லாம் நமக்குத் தட்டுப்படும் நாலு விசயங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் சொல்லப்பட்டதே. மற்றபடி உடனே நாமெல்லாம் செல்பேசியில் வலைப்பதிக்க படிக்கவோ செய்யப்போவதில்லை. இந்த வேலை அத்தனை முக்கியமானதில்லை.
//ஜோ, அதை விடுங்க, நான் இனியும் எதுக்கு இவனுங்களுக்கெல்லாம் இலவச விளம்பரம் தரணும்? உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
திரு, ஒத்துக்கொள்ளவேண்டிய ஆனால் தாமதமாக உணருகிற சொற்கள். நன்றி. இருப்பினும் பொதுச்சேவை வழங்குவோன் என்றவரையில் நான் காட்டிய நடுநிலை உணர்வில் இன்றும் பெருமிதம் கொள்கிறேன். புரிந்துகொள்பவர்களுக்கு நன்றி.
செந்தழல் ரவி குழந்தே, உனக்கெல்லாம் புரியாது, போய்ட்டே இரு. உன் பிசினசையெல்லாம் எங்காவது போய் பேசு.
எ.அ.பாலா,
உங்கள் அன்றைய இடுகையையும், பட்டறை பற்றிய மறுமொழியையும் பார்த்தேன், இரண்டுக்கும் நன்றி.
பட்டறையில் மேடையேற்றுவதா? அறிமுகப்படுத்துவதா? பட்டறைக்கு நான் வந்திருந்ததை நானே சில போட்டோக்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்:P
சுகுணா திவாகர் வார்த்தைகளைக் கடன் வாங்கி சொல்வதானால் அதை மேளா என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்பப் பேச ஆரம்பிச்சுட்டீங்களா, இனி பாருங்க, தூசி தட்டி சில மெயில்கள், இடுகைகள்னு சில நாள் இரைச்சலா இருக்கும், பிறகு மயான அமைதிதான், இந்த மூணு மாசமா இருக்கிறதைப்போல! :))
உண்மையச் சொல்றேங்க காசி. எனக்கு ஒன்னுமே புரியலை. :(
ஆனாலும் நீங்க பதிவெழுத வந்ததுல சந்தோஷந்தான். தொடர்ந்து எழுதுங்க.
ராகவன், :-))
கருத்துரையிடுக