வியாழன், அக்டோபர் 09, 2008

மொக்கை+கும்மி @ நீலகிரி எக்ஸ்பிரஸ் - 7 அக்.2008

சென்னை-கோவை. வழக்கம் போலவே கையிலிருந்த வாழைப் பழங்களை உள்ளே தள்ளிவிட்டுக்கொண்டு உசாராக பெட்டியின் வெளிப்புறம் ஒட்டப்பட்டிருக்கும் அட்டவணையில் பேர் இருக்கிறதாவென சரிபார்த்துக்கொள்கிறேன். அதிசயமாக 72-ல் ஒரு முப்பதாவது காலியாக இருக்கிறது. 'ஒருவேளை ஆர். ஏ. சி.க்காரங்களுக்குக் கொடுத்திருப்பாங்க' என்று நினைத்தால், ஊர்போகும்வரை காலியாகவே வந்தது இன்னமும் ஏன் என்று புரியவில்லை.

அரக்கோணம் வரை உரிமையுடன் ஏறிக்கொள்ளும் ரயில்வே பணியாளர்கள் சிலரை அங்கே இறக்கிவிட்டுவிட்டதும், விசிலெல்லாம் ஊதினார் உடன் பயணம் செய்த ரயில்வே போலீஸ் காவலர். ஒரு முறைக்கு இரு முறை கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு ஏகத்துக்கும் படம் காட்டினார்.

இரவு ஒரு மணி இருக்கும், தடதடவென்ற சத்தம். விழித்துப் பார்த்தால், ஒரு ஆளைப் போட்டு அதே காவலர் கும்முகும்மு என்று கும்மிக்கொண்டிருந்தார்.
'ஏண்டா, டாய்லெட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டா புடிக்க முடியாதுன்னு நினைச்சியா? படவா.'

மொக்கை அடி. ஆள் அசரவேயில்லை.

'ஆறு பொட்டிதாண்டி ஓடி போக்குக் காமிக்கறயா, ராஸ்கோல்'.

இரண்டு வார்த்தைக்கு ஒரு அடி, நான்கு அடிக்கு ஒரு உதை, என்ற சீரான வேகத்தில் கர/பாத சேவை.

'டிக்கட் எங்கடா?'

கொடுத்தார்.

'ஜெனரல் டிக்கட்டு வாங்கிட்டு இங்க எப்படிடா ஏறுன நாயே?'
'சார், சீட்டுக் காலியா...'
'காலிப்பயலே, ஏண்டா ஒவ்வொரு சீட்டுக்கடியிலும் குமிஞ்சு குமிஞ்சு என்னடா அப்படித் தேடின, பொறகு என்னைக் கண்டதும் ஏண்டா ஓடின?'
'சார்...'

கிடுக்கிப்பிடியில் அவனைப் பிடித்து வைத்திருந்தவர், செல்பேசியில், 'சேலம் ஆர்பிஎப்பா, ஒர்த்தன் தண்ணியடிச்சுட்டு ரகளை பண்றான். ரெண்டு ஆளுங்களை எஸ்10 பொட்டிக்கு வர ஏற்பாடுபண்ணுங்க...'

தடதடதட சத்தமும் வெளிப்புறக் காட்சிகளும் சேலம் நெருங்குவதை உணர்த்தின. பிறகு 25 வாரமா பயணம் பண்ணி இதுகூடத்தெரியலைன்னா எப்படி?

'செல்போனை எடுரா'.

கொடுத்தான். (இனி எதுக்கு மரியாதை அதான் ஆளுவிவரம் தெரிஞ்சபோச்சே).

பட்டன்களை அமுத்தியவர், 'க்காளி, 1 மணிக்கு யாருக்குடா போன் பண்ணினே. இதே இருக்கு பாரு நம்பரு, அவனும் சேர்ந்து உள்ற போயிடுவான். சொல்லிடு'.

'நான் பண்ணவேயில்ல சார்'.

அத்தனை அடியையும் வாங்கின மாதிரி ஒரு அடையாளமும் இல்லை. மூத்திரச் சந்துக்கு சரியான டிக்கட்டாயிருப்பான் போலிருக்கு! கைப்புள்ள கெட்டார் போங்க.

'லேப்டாப், சூட்கேஸ் கிடைக்குதான்னு தேடிட்டுத்தானே இருந்தே?'
'...'
'...'
'...'


புரண்டு படுக்கிறேன். சேலத்தில் இறக்கி என்ன பண்ணாங்கன்னு தெரியலை.

6 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

நல்லவர்களோ கெட்டவர்களோ ஆனால் இது போன்ற சமயங்களில் கொஞ்சம் மனம் கலங்கித்தான் போகிறது! :(

இது போலவே பேருந்து நிறுத்தம் தவறவிட்ட சிறுவனின் நிலைமை!

தவறாக பேருந்து ஏறி தடம் மாறிய வயதான பயணிகள் நிலை என்று பல சம்பவங்களில் மனம் கலங்கியதுண்டு :((

Kasi Arumugam சொன்னது…

ஆயில்யன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையில் இந்த சம்பவம் பெரிதாகப் பாதிக்கவில்லை.

அடுத்த நாள் கோவை-சென்னை பயணத்தில் நடந்த சில சுவையான அனுபவங்களை அடுத்து எழுதுவேன்...

பழமைபேசி சொன்னது…

அண்ணா, நீங் அடிக்கொருக்கா மெட்ராசு போய்ட்டு, போய்ட்டு வாங். ஏன்னா, எங்களுக்கு நாலு நல்ல பழமை கெடைக்குது பாருங்கோ....

போனவாட்டி போலீசுகாரன் கதையும் நொம்ப நல்லா இருந்துச்சுங்கோ!

Sanjai Gandhi சொன்னது…

//அத்தனை அடியையும் வாங்கின மாதிரி ஒரு அடையாளமும் இல்லை. மூத்திரச் சந்துக்கு சரியான டிக்கட்டாயிருப்பான் போலிருக்கு! கைப்புள்ள கெட்டார் போங்க.//

ஹாஹா.. காசி அண்ணன் நம்ம கட்சி.. ரயில் பயணங்களில் இது செம சப்பை மேட்டர்ணா.. போன மாசம் ஒரு டிடிஆர் கூட செம சண்டை.. ஆன்லைன் டிக்கெட்ல ஒரு சின்ன தப்பு இருந்ததுக்கு ஒரு அம்மாவை அநியாயத்துக்கு டார்ச்சர் பண்ணார் அவர்.. எனக்கும் அவர்க்கும் பயங்கர சண்டை.. கொஞ்ச நேரத்துல அந்த ஆள் போட ஆரம்பிச்சான் பாருங்க மொக்கை.. அவங்க அப்பா ஒரு திருசில பத்திரிக்கை நடத்தினது சுதேசிமித்திரனில் வேலை பார்த்தது முதல் அவங்க பய்யன் ஆரக்கிள் படிச்சிட்டு அடுத்த மாசம் அமெரிக்கா போர வரை.. ஸ்ஸபா.. என்னால முடியலை.. அவர் கிட்ட மனிப்பு கேட்டு கெஞ்சி அனுப்பி வச்சேன்.. :))

அப்புறம் தான் தெரிஞ்சது அந்த அம்மா ரேடியோசிட்டி ஆர்ஜே விஜியோட அம்மா என்று.. அம்மாவை வழியனுப்ப அந்த பொண்ணும் வந்திருந்தது.. அதனால் தான் நமக்கு பாசம் பொங்கியது தனி கதை.. ஆனா பாருங்க அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆய்டிச்சாம்.. :((

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

அழுக்கறத் தினம் குளித்தும்

அழுக்கறாத மாந்தரே

அழுக்கிருந்தது அவ்விடம் ?

அழுக்கு இல்லாதது எவ்விடம் ?

அழுக்கிருந்த அவ்விடத்தில்

அழுக்கறுக்க வல்லீரேல்

அழுக்கில்லாத சோதியோடு
அணுகி வாழலாகுமே!''---------சிவவாக்கியார்

பெயரில்லா சொன்னது…

Very Nice!

At times, certain people behave like this.

I have stamped the feet of such idiots so hard with strong chappals, such that they dont do it again.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...