செவ்வாய், டிசம்பர் 04, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்

இது முழுமையான விமர்சனமல்ல. படத்தைப் பார்த்ததும் தோன்றிய சில கோர்வையற்ற எண்ணங்களின் தொகுப்பே.
  • படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத சாதாஜீவிங்கோ)
  • சத்யராஜின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. மனிதர் விருதுக்குத் தயாராகி வருகிறார்.
  • சத்யராஜ் உள்பட இன்னும் பலரின் பேச்சு வழக்கு சரியான கடலூர் வட்டார வழக்காகத் தெரியவில்லை.
  • அர்ச்சனா அடிக்கடி ஆங்காரமாய் அலறுவது எரிச்சலாயிருக்கிறது. எங்கள் பின் இருக்கையிலிருந்தவர்கள் அடுத்த முறை அர்ச்சனா எழும்போதே கூடக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
  • இரண்டாம் நாள், சனி இரவுக் காட்சிக்கே சிறிய தர்சனா தியேட்டரில் இருக்கைகள் காலி என்பது வரவேற்புக் குறைவைக் காட்டுகிறது
  • எல்லாருமே ரொம்பப் பேசுகிறார்கள். 'ஒளி ஓவியர்' பேச்சைக் குறைத்து விசுவல்களை அதிகம் பயன்படுத்தவேண்டாமா?
  • எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று என்னால் படத்துடன் ஒன்ற இயலாமல் செய்கிறது. வெயில், காதல் அளவுக்கு உணர்ச்சிகரமாக இல்லை.
  • நினைத்தது போலவே, மகனுக்கும் மகளுக்கும் பிடித்திருக்காது. கூட்டிவராதது நல்லதாய்ப் போயிற்று. அவர்கள் அப்பச்சியுடன் அழுகிய தமிழ்மகனை சந்தோசமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இலவச விளம்பரம்: இதே பெயரில் ரொம்ப நாள் முன் செய்த உப்புமா.

8 கருத்துகள்:

~பொடியன்~ சொன்னது…

அப்போ தமிழ்ட்யூப் ல கூட பாக்க வேணாம்னு சொல்றிங்க.. :)

aadumadu சொன்னது…

//படத்தோடு ஒன்ற முடியவில்லை//
எப்படி முடியும்? அழகி, பள்ளிக்கூடம் எல்லாம் எல்லாருக்குமான கதை. எல்லார் வாழ்க்கையிலும் பாதித்த சம்பவம். இது தங்கரின் அப்பா பற்றிய கதை. எப்படி ஒட்டும்?

//படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத சாதாஜீவிங்கோ)
//
ஒன்பது ரூபாய் நோட்டு என்பது செல்லாத நோட்டு. படத்தில் மாதவர் படையாச்சி செல்லாத நோட்டாக இருக்கிறார். என் குறைந்த பட்ச அறிவுக்கு இப்படித்தான் தோன்றியது.
நன்றி.
ஆடுமாடு

ILA(a)இளா சொன்னது…

அட.. என்னப்பூ இப்படி சொல்லிபுட்டீக?

enRenRum-anbudan.BALA சொன்னது…

காசி,
குறுகிய, சுவையான (அதாங்க, short and sweet:)) ஒரு விமர்சனம் ! என்ன, சினிமா விமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க ?????
எ.அ.பாலா

Kasi Arumugam - காசி சொன்னது…

//அப்போ தமிழ்ட்யூப் ல கூட பாக்க வேணாம்னு சொல்றிங்க.. :)//

அட, பொடியன், அப்படியில்லீங்க. தங்கர்மேல எதிர்பார்ப்பு இருக்கறதுனாலயும், பள்ளில்க்கூடம் ஏமாத்திட்டதாலயும் நான் சொன்னது ரொம்ப எதிர்மறையாப் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

தாராளமா ஒரு முறை பாக்கலாம்.

ஆடுமாடு,
//இது தங்கரின் அப்பா பற்றிய கதை. எப்படி ஒட்டும்?//

இதைவிட கஷ்டப்பட்ட அப்பாக்கள் கதையெல்லாம் சின்னப்பையனா இருந்தப்பவே ஒட்டுச்சே, இப்ப அப்பாவா இருக்கறப்ப இன்னும் சுலபமா ஒட்டணுமே. நமக்கு அதுக்குமேல சொல்லத் தெரியலீங்க. ஆனா ஒட்டலை!

இளா, :-))

பாலா, விமர்சனம் தானே உலகத்திலயே சுலபமான விசயம்! அதிலும் புத்தக விமர்சனமெல்லாம் செய்யணும்னா படிக்கணும், இது அப்படியில்லையே, சும்மா உக்காந்து எந்திரிச்சு வந்தாலே போதும்.

(short and sweet-ஐ தமிழ்ப்படுத்தினது நல்லால்லை:-))

OSAI Chella சொன்னது…

nachunnu oru vimarasanam .. appadinnulla potirukkanum!? Visuals kaakave jeeva padam paarpen naan! maraintha varahu padangalil oru richness irukkum. rich edukkarennu shankar panrathullam enakku aruvaruppa irukkum.. uthaaranam.. thoppaiyi rajini padam pottu oru koottame palla lakkannu shivaji yila adunathu!

மயிலாடுதுறை சிவா சொன்னது…

காசி

நல்ல தரமான இயக்குனர் எடுத்தப் படத்தை இப்படி ஒரே குறையாக சொல்லி உள்ளது சரியாக படவில்லை.

அதுவும் தெண்ட விஜய் படத்திற்கு உங்கள் குடும்பம் சென்றது சற்று வருத்தமாக உள்ளது....

மயிலாடுதுறை சிவா...

Kasi Arumugam - காசி சொன்னது…

சிவா,

கோபித்துக்கொள்ளவேண்டாம். :-))

தங்கர் தரமான இயகுநர் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. நான் இதை ஒரு முழு விமர்சனமாக எழுதவில்லை. அதற்கு பொறுமையும் நேரமும் இல்லாததால் படம் பார்த்த கணத்தில் தோன்றிய சில எண்ணங்களை அபப்டியே இங்கே கொட்டிவிட்டேன். அது மிகவும் எதிர்மறையாகப் போனதற்கு இப்போது வருத்தப்படுகிறேன். 'தங்கர் போன்ற படைப்பாளிகளின் தேவை, அவர்கள் எத்தகைய சிரமத்துக்கிடையிலும் இம்மாதிரி முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், அவர்களின் குறைகளை சுட்டும்போது நிறைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விடுவது நீதியில்லை' போன்ற அறிவுப் பூர்வமான எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு சாதாரண திரைப்பட பார்வையாளன் பார்வையில் சொல்லிவிட்டேன். அது தவறு என்பது சில மறுமொழிகளைப் படித்தவுடனே புரிய ஆரம்பித்தது.

எனக்கு திரை விமர்சனம் எழுதிப் பழக்கமில்லை. முடிந்தால் இன்றோ நாளையோ முயற்சிக்கிறேன். உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன். நன்றி.

//அதுவும் தெண்ட விஜய் படத்திற்கு உங்கள் குடும்பம் சென்றது சற்று வருத்தமாக உள்ளது..../

இதுதான் ஏன் என்று புரியவில்லை. இன்றைய நடைமுறைச் சுழல் அப்படித்தானுள்ளது. என் குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக் காட்ட முடியும். செய்திருக்கிறேன். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாதல்லவா? அவர்களுக்குப் பிடித்தவறை அவர்கள் செய்கிறார்கள். இதில் நான் ஏன் குறுக்கிட வேண்டும்? அவரவர் தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய இயலுவதே பெரிய சந்தோசம். அவர்களின் அப்பச்சி வரவில்லையானால் இவர்களுக்காக தெண்ட விஜய் படத்துக்கு நானும் போயிருக்கவேண்டும் என்பதை நினைத்துப் பார்த்து மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான் உன்மை நிலை. (அப்பச்சியின் நிலைமை? கவலைப்படவேண்டாம், அவர் 60 வயசிலும் தெண்ட விஜய்யின் ரசிகர்!)

உங்கள் வருத்தம் புரிந்தாலும் இதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்:-))

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...