வெள்ளி, டிசம்பர் 14, 2007

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்(நான்கு படங்களும் 14-12-2007 தினகரன் கோவைப் பதிப்பிலிருந்து நன்றியுடன் சுடப்பட்டவை)

காட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.ஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ வரை வெளியே வந்து தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இன்று காலை வரை தங்கள் எல்லைக்குள் போகாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இருவரை மிதித்துக் காயப்படுத்தியிருக்கின்றன. கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.வாலபாறையில் தேயிலைத் தோட்டத்திற்கருகில் இரவில் ஒரு 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் ஒரு சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றுவிட்டது. வால்பாறை பகுதியில் யானைக் கூட்டம் குடியிருப்புகளுக்குள்ளும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவிப்பது அடிக்கடி நடக்கிறது.'அமராவதி ஆற்றில் முதலைகள்' என்று செய்திகள் வந்தாலும் (சென்ற மாதம் போனபோது ஆற்றுக்குள் இறங்கி பாறைகள் மேல் அமர்ந்து இளைப்பாறும்போதும் பயம் இருந்தது) இன்று படத்துடன் செய்தி வந்திருக் கிறது. சாதாரணமாக குளிக்க துணி துவைக்க ஆற்றுக்குப் போகும் மக்கள் இதனால் பீதியடையவும் வாய்ப்பிருக்கிறது.

மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ? இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ?

(இது சம்பந்தமாக பத்திரிகைச் செய்தியிலிருந்து படங்கள் சுட்டுப் போடநினைத்தேன் இப்போது முடியவில்லை. மாலையில் முயற்சிக்கிறேன்) சுட்டாச்சு போட்டாச்சு.

32 கருத்துகள்:

ILA(a)இளா சொன்னது…

இது கொங்குவாசல்ல வர வேண்டிய பதிவு ஆச்சுங்களேண்ணா. ஏன் இங்கே? ஒரு வேளை 'உள்'குத்துங்கிறதால இங்கேயா?

துளசி கோபால் சொன்னது…

நானும் தினமலர் செய்திகளில் பார்த்தேன்.
மனிதன் எல்லா இடங்களையும் வசதிகளையும் ஆக்கிரமிச்சதின் பலனா
இருக்குமோ?

Kasi Arumugam - காசி சொன்னது…

இதிலேயும் உள்குத்தா? அட சாமீகளா திருந்தவே மாட்டீங்களாப்பா?

எழுதி முடிச்சதும் இன்னொண்ணும் தோணுச்சு. இந்த மோதலெல்லாம் எப்பவுமே நடப்பதுதானோ, இப்பக் கிடச்சிருக்கும் ஊடக வெளிச்சம் காரணமாத்தான் இதெல்லாம் நமக்கு பெரிசாத் தெரியுதோ என்னமோ?

SurveySan சொன்னது…

//மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ? இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ?//

:) அது சரி. விலங்குகளின் 'வரம்பு' குறைந்து கொண்டே வருதல்தான் காரணம்.
மனுஷனின் தேவைகள் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிட்டே போவுது.
இன்னும், பத்து இருபது வருஷத்துக்கப்பரம், யானைகள, போட்டோவாதான் பாக்க முடியும் போல. ஐயோ பாவம்.

ILA(a)இளா சொன்னது…

//மனிதன் எல்லா இடங்களையும் வசதிகளையும் ஆக்கிரமிச்சதின் பலனா
இருக்குமோ?//
மனதினுக்கு ஆசை, எல்லாத்தையும் அனுபவிக்கனும்னு. ஏற்கனவே காட்டுல இருக்கிற எல்லா வளத்தையும் அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனுஷங்க, தண்ணியையும் சேர்த்து. இதனால விலங்கினங்கள் அழிஞ்சுதான் போவும். மனுஷங்க வாழ கத்துகிட்டவங்க, மிருங்கங்களால சாவ போறது இல்லை. வேற யாரால? மனுஷங்களால தான்.

கொங்குவாசல்ல நாம யாருமே பதிவு போடுறது இல்லே. இப்படி செய்தி போட்டுட்டு இருந்தீங்க. இப்ப அதுவும் இல்லையா? ராசா, என்னான்னு கேளுப்பா..

பெயரில்லா சொன்னது…

தோட்டம் இருந்த இடமெல்லாம் வீடுகளாயிட்டு வருது. காடுகள் இருந்த இடமே இப்ப தெரியல. மிருகங்கள் எங்க தான் போகும்.

புரட்சி தமிழன் சொன்னது…

இதனை விலங்குகளுக்கும் மனிதனுக்குமான வர்கப்போராட்டம் வரலாறாக தொகுக்கப்படவில்லை மற்றபடி இது எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது

பாரி.அரசு சொன்னது…

எனக்கானதை நீ கொஞ்சம், கொஞ்சமாய் ஆக்கிரமித்தாய்!

உனது அதிகாரத்தை எனது எல்லைக்குள் விரிவு செய்கிறாய்!

நான் மிருகமானாலும் எனக்கான தேடல் உண்டு!

நீ என்னை அழிப்பாய் என் அதிகாரத்தால் - அதற்க்காக அஞ்சி நான் எனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருப்பதில்லை!

வவ்வால் சொன்னது…

காசி,

நல்ல தகவலை சொல்லி இருக்கிங்க,

காட்டை மனிதன் ஆக்ரமிப்பதன் விளைவே வன விலங்குகள் வழி தவறி நகருக்குள் வரக்காரணம்.மேலும் காட்டில் தோட்டம் அமைப்பவர்கள், சுவர், மின்வேலி போன்றவற்றை அமைத்து வழியை மறிப்பதால் யானைகள் பாதிக்கப்படுகின்றன.

யானைகள் எப்பொழுதும் ஒரே வழித்தடத்தை தான் பயன் படுத்தும், கடந்த ஆண்டு எந்த வழியாக காட்டில் பயணம் செய்ததோ அதே வழியாகவே இந்த ஆண்டும் வரும். அப்படி வரும் போது அங்கே தோட்டம் போட்டு வேலி, சுவர் கட்டினால் என்ன செய்யும்.

நாட்டில் இருக்க மலைலாம் யாருக்கு சொந்தம், சொல்லுங்க, எல்லாம் அரசு சொத்து. டாடா டீ க்கு ஊட்டி மலைல எப்படி இடம் இருக்கு, யார் கிட்டே போய் வாங்கி இருப்பாங்க. எல்லாம் இவங்களா போய் ஆக்ரமிப்பது தான். இப்படி பெரிய பெரிய ஆளுங்க ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்னு வாங்கிட்டு அப்படியே அந்த பகுதியை வளைத்து விடுவார்கள்.

இதை எல்லாம் தடுத்தால் தான் வன விலங்குகள் நகருக்கு வராமல் இருக்கும். "bio diversity" அழியாமல் இருக்கும்.

ராசுக்குட்டி சொன்னது…

காசி சார்,
நான் இப்போது யானைகள் நுழைந்த வெள்ளலூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவன்தான். நான் அறிந்தவரையில் திருவிழாவுக்குத்தான் யானையை கூட்டி வந்திருக்கிறோம். யானைகள் வழிதவறி இவ்வளவு தூரம் வந்ததில்லை. காடுகளை அழித்ததனாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளினால் ஏற்படும் பதிப்புகளினாலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அண்ணா!
சொந்தச் சகோதரர் நிலபுலனையே சுத்துமாத்துச் செய்து ,தனதாக்கும் நாகரீக மனிதன் ;மிருகங்களின் வாழ்விடத்தை விட்டுவைத்தானா?? அதன் விளைவுகளே இவை...
அளவுக்கு மிஞ்சி ,ஆசைப்படாத,சந்ததிக்குச் சொத்துத் தேடிவைக்காத, பசித்தாலே புசிக்கும்; அடுத்தவேளை உணவை தேடியே உண்ணும்
பண்பட்ட வாழ்வியல்புகழையுடைய விலங்குகளில் பழி போட வேண்டாம்.

Kasi Arumugam - காசி சொன்னது…

இளா, :-))

உள்குத்தெல்லாம் வெச்சு எழுதும் அளவுக்கு இங்கே விச(ய)ம் போதாது. வினயமும்தான். நமக்கெல்லாம் நேரடி செயலாக்கம்தான். யாரையாவது தாக்கணும்னா நேரடியாத்தான். கொங்கு வாசலல் கொஞ்சம் சத்தம் போட்டுப் பாத்தேன். தனியாப் பேசுனா பைத்தியம்னு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு அல்லாரும் வாங்க அடிச்சு ஆடலாம்.

துளசி, ஆமாம் வால்பாறையை எடுத்துக்கொண்டால் புதுசுபுதுசாக குடியிருப்புகள், கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல் தேயிலை, மிளகு போன்ற தோட்டங்கள்... அவை என்னதான் செய்யும்?

சர்வேயர்:
//இன்னும், பத்து இருபது வருஷத்துக்கப்பரம், யானைகள, போட்டோவாதான் பாக்க முடியும் போல.//

அத்தனை சீக்கிரம் இல்லாவிட்டாலும் சில நூற்றண்டுகளுக்குள் இது நடக்கலாம்.:(

Kasi Arumugam - காசி சொன்னது…

சின்னம்மிணி, புரட்சி, பாரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் விலங்குகளின் வரம்புக்குள் நாம் போய் அவற்றை விரட்டுவதே அத்தனைக்கும் காரணம். (புரட்சித்தமிழன் வரவும் உண்மைத்தமிழனைக் காணோமே எதாவது தொடர்பிருக்கா?;-))

Kasi Arumugam - காசி சொன்னது…

வவ்வால்,
//யானைகள் எப்பொழுதும் ஒரே வழித்தடத்தை தான் பயன் படுத்தும்,//

அதைத்தான் பட்டா போட்டு வித்துட்டாங்களே. இப்ப திரும்பவும் அரசாங்கமே அவர்களிடமிருந்து யானைகள் சார்பா:P வாங்கி elephant corridorனு அமைக்கிறதா மந்திரி சொல்லியிருக்காரு, பாப்பம்.

(அதுசரி வவ்வால்-மனிதன் என்கவுண்டர் எப்படி இருக்கும் சொல்லுங்க சுவரசியமா எதாவது:-))

Kasi Arumugam - காசி சொன்னது…

ராசுக்குட்டி, கிட்ட வந்துட்டீங்க... நான் வடசித்தூர், செட்டிபாளையம் தாண்டிப் போகணும். இப்ப எங்கிருக்கீங்க?

யோகன், பழி அதுகள்மேலே இல்லைங்க. நம்மாளுக பண்ணுறதுதான் சிக்கல்.

பாருங்க, முதலைப்பண்ணைன்னு ஒண்ணு அமராவதியில் இருக்கு அங்கே ஒரு பார்வையாளருக்கு 50 பைசா வசூலிக்கிறாங்க. அதுக்கு காவலாளி, கதவு, சீட்டு அச்சடிப்பு... எப்படி இதில் இவர்கள் பணம் மிச்சம்பிடித்து முதலைகளைப் பராமரிப்பது? நல்லாப் பராமரிச்சு 5-10 கட்டணம் வெச்சாக்கூட ஆள் வருவாங்க. செய்யறாங்களா?

புரட்சி தமிழன் சொன்னது…

காசி அய்யா எனக்கும் உண்மைத்தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான்வேறு அவர் வேறு நான் புரட்சிதமிழன் மட்டும்தான்

வவ்வால் சொன்னது…

காசி,

//அதைத்தான் பட்டா போட்டு வித்துட்டாங்களே. இப்ப திரும்பவும் அரசாங்கமே அவர்களிடமிருந்து யானைகள் சார்பா:P வாங்கி elephant corridorனு அமைக்கிறதா மந்திரி சொல்லியிருக்காரு, பாப்பம்.//

இதை மாதிரி அயோக்கியத்தனம் எதுவும் இருக்காது, இவங்களே ஆக்ரமிப்பாங்க, ஆக்ரமிப்பாளர்களிடம் காசு வாங்கிட்டு பட்டா போட்டு தருவாங்க, உண்மைல வன நிலத்தை பட்டா போட்டு தரமுடியாது, அது அனுபவ பாத்தியத்தில் உள்ளது என்று ஒரு சான்று தான் தரமுடியும், அப்படி பட்டாக்கொடுத்தால் கூட செல்லாது என்று அரசு அறிவிக்கலாம், அப்படி இருக்க காசு கொடுத்து திரும்ப வாங்க போறாங்களா? யார் வீட்டு காசு அதான் இப்படி.

சாலை ஓரம் ஆக்கிரமிப்புனு இடித்து தள்ளும் அரசு ஏன் வன நில ஆக்ரமிப்புகளை கண்டுக்கொள்வது இல்லை? என்பதில் இருக்கு மர்மம்!

யானைகள் அழிவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தான் செய்கிறது, காரணம் யானைகளில் இப்போது ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம் மிக கவலைக்கிடமாக இருக்கிறது, 100 பெண் யானைகளுக்கு 19 ஆண் யானைகள் என்ற அளவில் உள்ளதாக கேள்வி , இதனால் இனப்பெருக்கம் ஏற்படுவது பாதிக்கப்பட்டு , பல பெண் யானைகள் துணை இல்லாமல் குட்டிப்போடாமலே இறந்து விடுவதாக சொல்லி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு மக்கள் வேறு காட்டை அழிக்கிறாங்க அவை எப்படித்தான் ஜீவிக்கும், இனப்பெருக்கம் செய்யும்.

வவ்வால் கொடுக்கிற என்கவுண்டர் தாங்காம இங்கே பலரும் பீதியாகி கிடக்கிறாங்களே தெரியாதா! :-))

புரட்சி தமிழன் சொன்னது…

வவ்வால் அவர்கள் கூறியிருப்பது போன்று ஆண் யானைகல் குறாஇவான சதவீதம் இருப்பதர்க்கு தந்தம் வேட்டையே காரணம். அடுத்து சாலை ஓராங்களை ஆக்ரமிப்பு செய்பவர்கள் சாமானியர்கள், வனத்தை ஆக்ரமிப்பு செய்பவர்கள் கொடை வள்ளல்கள் வனத்துறைக்கும் காவல்துறைக்கும் அவர்கள் கொடை தான் குடையாக இருக்கிறது

Kasi Arumugam - காசி சொன்னது…

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பெயரில்லா சொன்னது…

Kasi Sir

I read all blogs through Google Reader. I am unable to read your blog post in full through google reader. I could read only the initial 1 or 2 paragraphs.

Can you enable complete read setting in your blogger settings ?

one more query - any way in google reader to read comments also ? presently I am able to read only post and not comments for the post.

thanks
(could not get the help in google reader help section)

Mahesh

Kasi Arumugam - காசி சொன்னது…

Mahesh,

Greetings.

Glad that you read this blog. Intentionally it is set up so that the news feed does not carry the full post. By publishing only a portion of it, it is ensured that you visit a blog to read the full post and other's comments too. Also, the blogger gets his statistics correct. So, please continue to visit and read here:-) (if the preview is interesting, of course)

There is a comment feed address you need to include in your Google reader subscriptions. It is http://kasiblogs.blogspot.com/feeds/comments/default But similar to the main feed, this also will carry a portion of the comment. (simple short comments may come fully)

Hope this explains, if not satisfies you!

வசந்தம் ரவி சொன்னது…

உங்கள் செய்தியோடையில் பதிவுகள் முழுமையாக கிடைக்க வழி செய்யுங்கள் ....கூகிள் ரீடர் மூலம் படிப்பதால் சிரமமாக இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

//கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.//

சுத்துப் பட்டிகளையெல்லாம் முழுங்கி கோவை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தனும்னு எழுதியிருந்தீங்க. இப்ப என்னடான்னா யானைங்க முந்திகிட்டு எல்லையை விரிவுபடுத்திகிட்டு இருக்குங்க. ஹூஹும். கோவையை சாதா நகராட்சியா தான் மாத்தனும் போல :-)

(எழுதினது யாருன்னு தனியா சொல்றேன்)

Kasi Arumugam - காசி சொன்னது…

வசந்தம் ரவி,

வருகைகும் கருத்துக்குக் நன்றி.

கூகிள் ரீடர் வழியாக இடுகைகளின் முன்னோட்டம் பார்ப்பது மட்டுமே சரி என்பது என் கொள்கை:-) வாசிக்க விசயம் இருப்பதாக எண்ணினால் இங்கே வந்து வாசிக்க வேண்டுகிறேன். இதையேதான் மகேஷ் கேட்டிருந்தார் அவருக்கு கொடுத்த விளக்கம் (ஆங்கிலத்தில்) மேலே இருக்கிறது.

Kasi Arumugam - காசி சொன்னது…

//சுத்துப் பட்டிகளையெல்லாம் முழுங்கி கோவை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தனும்னு எழுதியிருந்தீங்க.//

அனாமதேயண்ணா, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வைத்துப் பார்த்தால் கோவை ஒரு சாதா நகராட்சிதானுங்கண்ணா. சும்மா பேருக்கு மாநகராட்சினு சொல்லிட்டுத் திரியறாங்கண்ணா. இப்ப புதுசா பெருநகராட்சி (மெட்ரோபாலிடன்) ஆக வேற திட்டம் போடுறாங்கண்ணா. அதை பத்திரிகை செய்தியிலிருந்து எடுத்துப் போட்டேண்ணா. அப்பக் கூட 'விரிவு படுத்தணும்'னு அதுல ஒரு இடத்திலயும் நான் சொல்லலைங்கண்ணா. இப்படி அரையும் குறையுமா வாசிச்சு, சொல்லாததை சொன்னதா எழுதுறதிலிருந்தே நீங்க எவ்வளவு பெரிய மண்டைனு தெரியுதுங்கண்ணா. அந்த மண்டையில என்ன மாதிரி மூஞ்சி ஒட்டியிருந்தா எனக்கென்னங்கண்ணா?

வர்ட்டாங்கண்ணா?

covai sibi சொன்னது…

i read your some of the blogs.valthukkal.regarding this,now this time when forest has enough food and water for elephants are entered only because of missing their way.normally sundakamuthur and covaipudhur belt wont affect by elephants entry.now a days entry happening only tasty food like sugarcane,bananas in the areas of boluvampati belt.

covai sibi சொன்னது…

and also reagrding enrouchment,poluvampatti forest range is less affected area compared to all other range in tamilnadu.this is because farmers here not sold the lands to others who are coming to commercialise.

ஸ்னேக் பாபு சொன்னது…

யானை ஒரு பன்றிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மிருகம் என்று அறிவியல் கூறினாலும் யானை என்பது பிள்ளையாரின் அம்சம் என்று அனைவருக்கும் தெரியும்.அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த யானைக்குப் போகத்தான் மீதி மற்ற மனிதருக்கு.தனியொரு யானைக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.

பெயரில்லா சொன்னது…

Kasi Sir,

thanks for your reply.

I am using Google reader because blogger / blogspot.com is restricted (no access) from our work network at office. Only google reader is the way to read the blogs. So even if we are interested to read the post if we click the actual blogger/blogspot link it will not be accessible for us. Hence the request.

I am posting this comment from a place where the blogger is not restricted. (there may be many like me who have access to Google reader but not blogger/blogspot sites.

thanks for understanding.

Mahesh

Kasi Arumugam - காசி சொன்னது…

அங்குமிங்கும் போய்வந்த யானைகளில் மூன்று கடைசியில் கோவை-பாலக்காடு ரயில் பாதையைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. :(

இதில் ஒன்று கர்ப்பிணி என்றும் அதன் வயிற்றில் குட்டியும் இறந்தது என்பதும் கூடுதல் செய்தி.

(இதனால் விநாயகருக்கு கோபம், ஆகவே கர்ப்பிணிகளுக்கு ஆகாது என்றும் வதந்தி கிளப்பப் பட்டிருப்பதாகவும் செய்தி. அதற்குப் பரிகாரமாக எதையாவது வியாபாரம் செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள் சமயோசிதர்கள்! :()

வவ்வால் சொன்னது…

காசி,
//அங்குமிங்கும் போய்வந்த யானைகளில் மூன்று கடைசியில் கோவை-பாலக்காடு ரயில் பாதையைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. :(
//

அந்த செய்திப்பார்த்த போது இந்த பதிவைத்தான் நினைத்துக்கொண்டேன், நீங்களும் வந்து அப்டேட் செய்து இருக்கிங்க!

இப்போலாம் அடிக்கடி யானைகள் ட்ரெயினில் அடிப்படும் செய்தி வருகிறது. காரணம் ஆக்ரமிப்பு தான்.

அதுவும் இந்த விபத்துக்கொடுரமாக இருக்கு.

வழக்கம் போல இதை வைத்தும் ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்!

Kasi Arumugam - காசி சொன்னது…

வவ்வால்,

//வழக்கம் போல இதை வைத்தும் ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்!//

ஆமாங்க. பொழைக்கத் தெரிஞ்சவங்க.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...