எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
ஞாயிறு, நவம்பர் 11, 2007
சத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்
சில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சரியாகக் கிடைக்காத பிரச்னையால் பல மாதங்கள் அவதிப்பட்டபின் இயல்பாக எலக்ரானிக்ஸ் பொடிஜாமான்களில் சோனிக்கு பெரிய பிரமுகர் அந்தஸ்து;-) இருப்பதை உணர்ந்திருந்தும் இந்தியாவில் செல்பேசித்துறையில் நோக்கியாவின் அனுபவம் அதிம் என்பதால் நோக்கியாவை ஒருமுறை பாவித்து நோக்கியாவது பாவப்பட்ட என் செல் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டு நோக்கியா 2630 என்ற கைக்கு அடக்கமான பைக்கு லகுவான (66 கிராம் எடை) ஒரு போனை வாங்கினேன்.
ஏற்கனவே மின்னஞ்சலை செல்பேசியில் பார்க்க ஆசைப்பட்டு மாசம் 49 ரூபாய் என்ற தொடக்க நிலை ஜிபிஆரெஸ் சேவைக்கு பிஎஸென்னெல் சந்தா கட்டியும் அதை என் பழைய போனில் சரியாக பயன்படுத்தவில்லை. இதிலாவது சரியாக அமைப்பிக்கலாம் என்று ஆசைப்பட்டு கொஞ்சம் போராடி, பின் ஜிமெயில் அப்ளிகேசனை இறக்கியும் அது சரியாக வேலை செய்யாமல் போக, பின் இந்த நேரடி முகவரியில் முயற்சிக்கவே அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதும் ஆஹா, ஒரே ஜாலிதான் போங்க.
ஜிமெயிலில் வந்த தமிழ் யுனிகோடு செய்திகளும் அருமையாகத் தெரிவது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்! பிறகுதான் வழக்கமான நோண்டல் ஆரம்பம். நம் வலைப்பதிவுகள் எப்படித் தெரியும் என்று பார்க்க ஆசைப்பட்டு எனக்கு மிகவும் பிடித்த தங்கமணியின் வலையைத் திறந்து பார்க்க, அட... அட... அட... ஆனந்தம் போங்க. பக்கங்கள் எல்லாம் தெளிவாத் தெரியுது! கீழே பாருங்க.
இந்த வகை செல்பேசிகளில் யுனிகோடு எழுத்துரு (Unicode font), யுனிகோடு திரைஎழுதி (rendering engine-equivalent to uniscribe in MS) மற்றும் யுனிகோடு உள்ளிட செலுத்தி(input driver) ஆக மூன்று அடிப்படை அம்சங்களும் வாங்கும்போதே நிறுவப்பட்டு வருகின்றன. மேசைக்கணினி/ மடிக்கணினிகளிலேயே தமிழ் உள்ளிட்ட மக்கள் மொழிகளுக்கான அனுசரணை சரிவர நிறுவப்பட்டு விற்கப்படாத நிலையில், செல்பேசியில் சத்தமிலாமல் இது நடந்து வருவதைக் காண மகிழ்வாய் இருக்கிறது.
(இதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மூடிக்கிடந்த இந்தப் பக்கங்களுக்கு உயிருட்டுகிறேன். இனி வாரம் ஒருமுறையாவது எழுதுவேன்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
47 கருத்துகள்:
நல்ல தகவல்.. இங்கே US கருப்பு பெர்ரியில எல்லாம் தமிழ் வரதே இல்லேன்றாங்களே, இந்தியாவுல வருதா. எல்லாம் கேள்வி ஞானம் தான். விவரம் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்கப்பா.
வாரம் ஒரு தடவையா? அதுல என்ன கஞ்சத்தனம்..
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
நலமா?
காசி,
தமிழ் வலைப்பதிவுகளை செல்பேசியில் படிக்க முடிவது குறித்த உங்களது பதிவு பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.
நீங்கள் இப்படி புதிய புதிய தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி தமிழ் வலைப்பதிவைப் பற்றிய ஆர்வத்தை கிளறுவது இது முதல் முறை அல்ல.
உங்களது மீள்வருகைக்கு நன்றி!
நண்பர் காசி
வணக்கம். நலமென நம்புகிறேன்.
உங்களுக்கு வணக்கம் சொல்லவே இந்த பின்னூட்டம்.
நட்புடன்
வாசன் (நியு மெக்சிக்கொ)
இளா, ப்லாக்பெர்ரியில் இன்னும் தெரிவதில்லை என்றுதான் கேள்விப்பட்டேன்.
சிபி, மே:)
தங்கமணி, வரவேற்புக்கு ந்ன்றி. நீங்க எப்ப?
வாசன், வணக்கம்:-) உங்களுக்கு எழுதிய மடலுக்கு பதிலே வரவில்லை:-( மின்னஞ்சல் முகவரி மாத்தீட்டிங்களோ?
நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி......நான் அந்த செல்லுக்கு மாற போகிறேன்.
வசந்தம் ரவி, வாங்குங்க. அது பலவகையிலும் நல்ல போன். விலையும் அதிகமில்லை, ப்ளூடூத், காமரா, விடியோ, எல்லாம் இருக்கு.
அப்படியே, நம்ம செல்லாவோட பதிவு தெரியுதான்னு பார்த்து சொல்லுங்க அண்ணே!
மனுஷன் ரெம்ப சந்தோஷப்படுவாரு!
என்னோட ஐஃபோன்ல கணினியப் போலவெ இணையத்தில் உலாவலாம் ஆனா இன்னும் ஒருங்குறி சப்போர்ட் வரல. வந்திடுச்சுன்னா அடிக்கடி பதிவெழுதலாம்.
:)
அன்பு காசி நலம் தானே?
ஒரு புதிய அலைபேசி வாங்க முடிவு செய்துள்ளேன். உங்களின் தகவல் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி.
சிறில்,
'ஐ..ஐபோன்' அப்படின்னு நீங்கல்லாம் பந்தா வுடும்போது நாங்க தேமேன்னு பாத்தமுல்ல, இப்ப எங்களுக்கு ஒரு நேரம்:-)
மஞ்சூர் ராசா,
நலம்தான் நண்பரே. உங்களுக்கு தகவல் பயனாவது குறித்து மகிழ்ச்சி.
வாத்தியார் சொன்னா தட்டமுடியுமா?
ப்ளாக்கர் செய்யும் நுட்ப மேஜிக்! இதனால் பக்கம் எளிதில் இறங்குவதுடன் செல்பேசிகளுக்காக தேவையற்ற கூறுகள் நீக்கப்படுகின்றன.
செல்லாவின் பதிவின் மேல் முகப்பு
இடுகையின் தலைப்பு
செல்லாவின் கையொப்பம் கூட...
தமிழ்மணம் அளிக்கும் பதிவு கருவிப்பட்டையும் தெரிவது எனக்கு தனிப்பட்ட ஆச்சரியம்
மேற்கொண்டு இப்படிப் பார்த்தேனானால் என் போன் பில் எகிறிவிடும், எனவே இத்தோடு எஸ்கேப்! :-)
காசி அண்ணாச்சி
என்-70 ல தமிழ் யுனிகோடு வராம ஒரே கட்டம் கட்டமா இருக்குதே.. இதுக்கு ஏதாவது ஓதி ஊதணுமான்னு சொல்லுங்களேன்.
சாத்தான்குளத்தான்
அட, என்ன ஆசிப் தம்பி, ஏதோ என் செல்லுல தமிளு தெரிஞ்சதுமே அதை நாலு பேருக்கு சொல்லி இணையத் தமிழை 'அடுத்த கட்ட'த்துக்கு தூக்கிட்டுப் போகலாம்னு பாத்தா இடையில் தேவையில்லாம கேள்வி கேட்டுட்டு...
சிங்கம் 'இந்தக் காட்டுக்கு யாரு ராஜா'ன்னு கண்ட பிராணியையெல்லாம் கேட்டுட்டு கடேசில ஆனையைக் கேட்ட கதையெல்லாம் நெனப்பு இருக்கா? :)
(அந்தளவுக்கு வெவரமிருந்தா கணித்தமிளு சங்கத்துலயோ, த.நா. அரசுத் துறையிலேயோ உத்தமமா எதாச்சும் செய்ய மாட்டனா? இங்கே ஏன் கிடக்கேன்?)
//அட, என்ன ஆசிப் தம்பி, ஏதோ என் செல்லுல தமிளு தெரிஞ்சதுமே அதை நாலு பேருக்கு சொல்லி இணையத் தமிழை 'அடுத்த கட்ட'த்துக்கு தூக்கிட்டுப் போகலாம்னு பாத்தா இடையில் தேவையில்லாம கேள்வி கேட்டுட்டு...
சிங்கம் 'இந்தக் காட்டுக்கு யாரு ராஜா'ன்னு கண்ட பிராணியையெல்லாம் கேட்டுட்டு கடேசில ஆனையைக் கேட்ட கதையெல்லாம் நெனப்பு இருக்கா?
(அந்தளவுக்கு வெவரமிருந்தா கணித்தமிளு சங்கத்துலயோ, த.நா. அரசுத் துறையிலேயோ உத்தமமா எதாச்சும் செய்ய மாட்டனா? இங்கே ஏன் கிடக்கேன்?)//
//'அடுத்த கட்ட'த்துக்கு தூக்கிட்டுப் போகலாம்னு பாத்தா //
//அந்தளவுக்கு வெவரமிருந்தா கணித்தமிளு சங்கத்துலயோ, த.நா. அரசுத் துறையிலேயோ உத்தமமா எதாச்சும் செய்ய மாட்டனா? இங்கே ஏன் கிடக்கேன்?)
:) :)
இப்படியெல்லாம் சொல்லி தப்பமுடியாது
இது தொடர்பான அனைத்து செல்லிட தொலைபேசிகளுக்கும் தமிழ் உள்ளிடல்
வெளியிடல் முறைகளுக்கும் தமிழ்மணம் சார்பான பொறுப்பாளராக ஒருமன(:))மாக திரு காசி ஆறுமுகம் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
@theevu
//இது தொடர்பான அனைத்து செல்லிட தொலைபேசிகளுக்கும் தமிழ் உள்ளிடல்
வெளியிடல் முறைகளுக்கும் தமிழ்மணம் சார்பான பொறுப்பாளராக ஒருமன(:))மாக திரு காசி ஆறுமுகம் அவர்கள் நியமிக்கப்படுகிறார் //
உளமாற வழி மொழிகிறேன்
அலோ, தீவூ, என்னங்க இது வெளாட்டு? நீங்க பாட்டுக்கு ஒண்ணை கொளுத்திப் போட்டுட்டுப் போக சீனிவெடி வெக்கிறார் சீனாண்ணே! ஆளை வுடுங்கண்ணே. கும்புட்டுக்குறேன்.;-)
I received emails asking certain questions about this experience which I don't consider unique ;) I give below my reply to one of them, since the same may be useful to someone:
===================================
Dear xxxxxxxxxxxx,
vaNakkam. Thanks for your email. I did nothing here but to report my happiness! I too was wondering what need to be set up in order to get Unicode Tamil support in cellphones. As I wrote an article in my blog as early as 2004 on Unicode, many people even asked me why they are not able to see Unicode Tamil in cellphones.
I bought this Nokia phone and just subscribed to the GPRS service of BSNL. one sends an sms to 57333 (I think) with phone model number to receive the gprs settings through sms. Once the settings are executed, the phone is ready to access the internet.
As I wrote in my recent blog, immediately after one enters url of any Unicode Tamil page, the built in browser automatically shows the contents perfectly. I concluded that it has
1. Tamil (and other Indic languages as well) Unicode font
2. Complex script rendering engine (equivalent to Uniscribe in MS applications)
3. Glyph based input facility for many Indic languages (selectable by user on the fly)
Hope this helps. Best wishes.
==================================
அன்பினிய நண்.காசி,
நலமா?
கோவை சென்றபின்
மறந்துவிட்டீர்களே?
அனுப்பிய மடலுக்கும் பதில் இல்லை.
பிசியாகிவிட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்.
நோக்கியா செல்பேசியில் தமிழை கொண்டு வந்ததில் மகிழ்ந்திருப்பதை விட java 2 அல்லது அதற்கு சமானமான தொழிநுட்பத்தில் இயங்கும் ஏனைய செல்பேசிகளில் தமிழை நாமாக எப்படி தெரியப்பண்ணுவது என்பதுகுறித்து தேடி பகிரவேண்டும். அதுவே பயனுள்ளது.
நல்ல செய்தி(கள்)!
ஆல்பர்ட்,
வணக்கம். பதில் கொடுக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்:( (உண்மையில் இப்போது நினைவில்லை) பல மாதங்கள் இணையப் பக்கமே வராமல் இருந்தேன். அப்போது உங்கள் மடல் வந்திருக்கலாம். என்ன வென்றாலும் இப்போது எழுதுங்கள்.
மயுரன், தமிழில் கட்டளைகள், பிறகு பெயர்முகவரி உள்ளிடுதல் போன்றவை மலிவான பொண்கலிலேயே பலநாள் நடப்பிலிருந்தாலும் அவை பெரும்பாலும் மூடிய proprietory நுட்பங்களில் இயங்குவன என நினைக்கிறேன். ஆனால், இப்போது இருப்பது தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளின் யுனிகோடு வடிவத்திற்கான *முழு* அனுசரணை என்பதால் கட்டாயம் ஒரு தரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். இதற்குமேல் எனக்கு இபோது சொல்ல முடியவில்லை.
சு.வ., நன்றி :)
//பொண்கலிலேயே// தவறு. போன்களிலேயே - சரி
AN UPDATE:
//1. How much one has to pay additionally for enabling net facility in the mobile with BSNL?//
BSNL post paid and prepaid services work little different. I am a post-paid customer and tell you what I know: There are two packages for the GPRS service , one basic at Rs. 49 per month with download limit as 5 MB I think. Additional MBs will be charged extra. The other premium package costs Rs. 149 p.m. with unlimited downloads.
//2. How one can access net? Step by step description//
There are web browser applications in the GPRS/WAP enabled cell phones. One should have one of these phones in the first place.
Then you subscribe to the GPRS service from the mobile company (say BSNL). In the case of BSNL, they used to ask for a letter before, but now one could do it easily by sending sms to 3733 with text as GPRS49 for this package or GPRS149 for the other package. You will receive an sms asking you to confirm your request by sending another sms to 53733 with text as 'GPRS49Y'
You will receive a communication that your subscription is activated. Now send an sms with the model no. ('NOKIA 2630' in my case) to 8355. You will receive a set of executable applications that will automatically do the setup.
Voila!, you are ready to surf. But hold on, there are glitches too.
BSNL creates several connectivity settings with names like bsnl_south, bsnl_wap, bsnl_internet. One of the settings have to be activated for the web to work. In my case bsnl_internet works fine. Still I have problems in sending mails through gmail, even though I receive mails in gmail without any problems.
மிகவும் உருப்படியான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காசி.
//அது பலவகையிலும் நல்ல போன். விலையும் அதிகமில்லை, ப்ளூடூத், காமரா, விடியோ, எல்லாம் இருக்கு.
//
அப்டி என்ன தான் விலைன்னு சொல்லி போடலாங்களே ? :)
எ.அ.பாலா
பாலா, 4500 ரூபாய் நான் கொடுத்தேன் என் நண்பர் 4350க்கே வாங்கிட்டார்!
தகவலுக்கு நன்றி! நான் ஏற்கனவே என் வலைப்பக்கத்தை நோக்கியா 6030ல் முயற்சித்து பார்த்தேன். 'வெயிலான்' என்ற தலைப்பு மட்டும் தமிழில் தெரிந்தது. Memory full என்ற தகவலுடன் நின்று விட்டது.
வேர்ட் பிரஸ் பதிவுகளும் தெரிகிறதா என பார்த்து சொல்ல முடியுமா?
மேலே உள்ள படத்தில் காட்டப்படுவது வேர்ட்பிரஸ் பதிவுதான் வெயிலான்.
பயனுள்ள தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அலைபேசியில் தமிழ் இணையம் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. மெல்லத் தமிழ் இனி உயிர்க்கும் அலைபேசி மற்றும் இணையம் வழியாகவும்..
காசி, நான் கடந்த ஒன்றரை வருடங்களாக (6030) மொபைல் மூலம் வலைப்பதிவுகள், ஒருங்குறி வலைமனைகள் (யாஹூ செய்தித் தளங்கள் போன்றவை), ஒருங்குறி மடல்கள் ஆகியவற்றை வாசித்துகொண்டிருக்கிறேன். 6030 மூலம் ஒருங்குறியில் மடலே அனுப்பலாம். நான் நிறைய நண்பர்களுக்கு அனுப்பியும் இருக்கிறேன்.
6030 வில் தமிழ் ஒருங்குறி இருப்பதால் இது சாத்தியம். நோக்கியாவின் மற்ற மொபைல்களில், குறிப்பாக நல்ல வெர்ஷன் மொபைல்களில் இந்த தமிழ் ஒருங்குறி பயன்பாடு இல்லை. இவற்றில் தமிழைப் படிக்கமுடியாது. அதற்கு என்ன தீர்வு என்று கண்டால், எல்லா மொபைல்களிலும் தமிழை வாசிக்கத் தொடங்கலாம்.
--ஹரன்பிரசன்னா
ஹரன்பிரசன்னா,
தகவலுக்கு நன்றி.
செல் தமிழ் ஆசான் பட்டத்தை உமக்கே தருகிறோம்:)
கோச்சுக்காட்டி ஒண்ணு சொல்லட்டா? இந்தமாரி செய்தியெல்லாம் உங்க பாக்கட்டுக்குள்ளயே வச்சுக்காதீங்க, நாலுபேருக்கு அள்ளி வுடுங்க!
காசி, கொஞ்சம் சுய புராணம் போல ஆகிவிட்டது என நினைக்கிறேன். :)
என் பாக்கெட்டுக்குள் வைப்பதெல்லாம் இல்லை. இது புதுசு என்று எனக்குத் தெரியாது. அதுதான் விஷயம். எல்லாரும் இதைப் பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டிருந்துவிட்டேன்.
//கொஞ்சம் சுய புராணம் போல ஆகிவிட்டது//
இங்க என் சுயபுராணத்தைவிட எதுவும் பெரிசா இருக்காது இருக்க விடமாட்டேன், கவலைப்படவேண்டாம்!?!?! :)
நாம் சொல்வது புதிதாகவே இருகவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஒடுது!)
/// நாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! ///
முற்றிலும் உண்மை! இது போன்றதொரு கோணத்தில் இது வரை சிந்தித்ததில்லை. நன்றி!
காசி, தமிழ் தெரிவது சரி. குறுஞ்செய்தி, மடல் போன்றவற்றைத் தமிழில் எப்படி எழுதுகிறீர்கள்? நீங்கள் செல்லினம் வைத்திருக்கவில்லை, செல்லினம் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். சுரதா எழுதி போன்றவற்றைப் பயன்படுத்தி வெட்டி ஒட்ட வேண்டுமா இல்லை வேறு மென்பொருள் வசதி இருக்கா? செல்பேசியில் தமிழ் உள்ளீட்டுக்குத் தமிழ்99 போல் திறன் வாய்ந்த விசைப்பலகை அமைப்பு முறையை உருவாக்கலாம் என்றும் ஒரு யோசனை ரொம்ப நாளாக இருக்கு. பார்க்க - தமிழ் செல்பேசி விசைப்பலகைக்கான தேவை.
அப்புறம், உங்கள் மறுமொழிப் பெட்டியை முழுப்பக்கத்தில் திறக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்
வெயிலான், :)
ரவிசங்கர்,
ஏற்கனவே சொன்னதுபோல எந்த மேலதிக கருவி/நீட்சி/பதிவிறக்கம் இல்லாமலேயே தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளுக்கான முழு அனுசரணையுடன் இந்த போன் வருகிறது. (இந்தியாவுக்கு வெளியே இதே மாடல் வாங்குவது இதேவாக இருக்காது)
தமிழ் உள்ளிட முதல் வரிசையில்
2 என்ற விசையில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ,
3 -ல் மீதமுள்ள உயிர்
4,5,6,7,8,-ல் 18 மெய்யெழுத்துக்கள் (அகரமேறிய) 9-ல் கிரந்தம் என ஒரு பாணி கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் எந்தக் கையேட்டையும் படிக்காமல் யாரையும் கேட்காமல் புரிந்துகொள்ள முடிந்தது (இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதாலாயிருக்கலாம்)
வழமையாக குறுஞ்செய்தி அதிகம் எழுதாத எனக்கு ஆங்கிலத்தைப் பார்க்கிலும் கடினமாகத் தோன்றவில்லை. ஒரே அளவு கடினமாகத்;) தான் இருக்கிறது.
விளக்கத்துக்கு நன்றி காசி. இந்தப் பாணியை யார் வடிவமைத்தார்கள் என்று ஏதும் தகவல் கிடைத்தால் சொல்லுங்கள். இது nokiaவுக்கு மட்டும் இல்லாமல் எல்லா செல்பேசிகளிலும் செயல்படுத்தப்படுமா என்றும் அறிய வேண்டும். இல்லாவிட்டால், கணினியில் ஆளுக்கு ஒரு குறிமுறை வைத்துக் குழப்பியது போல் ஆகிவிடும்.
taminglish தட்டச்சு இல்லாத வரை மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாணியை விட அது இன்னும் கடினமாகவும் தமிழைச் சிதைப்பதாகவும் இருக்கும்.
ரவிசங்கர்,
யார் வடிவமைத்ததென்று தெரியவில்லை. நோக்கியா வலைத்தளத்திலும்கூட ஒரு தகவலுமில்லை
தமிங்கல த்டட்டச்சைவிட எளிமையாத்தான் தெரிகிறது. தமிழ்க் (இந்தியக்) கணிமை அமைப்புகள் நோக்கியாவுடன் பேசி இந்த உள்ளீட்டு முறையை ஆய்வு செய்து விரைவில் தரப்படுத்துவதோடு இந்தியாவுக்குள் விற்கும் மற்ற பிராண்டு போன்களிலும் இதேவகையான ஆதரவை கட்டாயப்படுத்த இந்திய அரசுடன் எடுத்துச் செல்லவேண்டும். உத்தமம் போன்ற அமைப்புகள் எதாவது செய்வார்களா பார்ப்போம். ஊதுகிற சங்கை ஊதுவோம்.
காசி, செல்பேசி உள்ளீட்டு முறையைத் தரப்படுத்தி அதை எல்லா செல்பேசிகளிலும் செயற்படுத்த அமைப்புரீதியாக முன்னெடுப்பது முக்கியம் தான். ஆனால், முதலில் தெரிய வந்திருக்கும் இந்த முறையை (தமிங்கிலத்தைக் காட்டிலும் பரவாயில்லை என்றாலும்) அதிகம் ஆயாமல் தரப்படுத்த முனைவது சரியாக இருக்காது. ஏனென்றால், அவசரத்துக்கு ஒன்றைத் தரப்படுத்தி பரவலாக்கி விட்டால் பிறகு நல்ல மாற்றம் என்றாலும் செயற்படுத்த இயலாமல் பிடித்த பிடியாகப் போய் விடும். பிற நிறுவனத்தார் இன்னும் சிறந்த முறையைக் கொண்டு வரலாம். கொஞ்சம் இதை evolve ஆக விட்டும், அதே வேளை இவற்றைச் சாராமல் தனித்த முறையில் கணிமைக் காரர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றைக் காண வேண்டும்.
//ரவிசங்கர்: அதிகம் ஆயாமல் தரப்படுத்த முனைவது சரியாக இருக்காது.//
//காசி:தமிழ்க் (இந்தியக்) கணிமை அமைப்புகள் நோக்கியாவுடன் பேசி இந்த உள்ளீட்டு முறையை ஆய்வு செய்து விரைவில் தரப்படுத்துவதோடு//
:))
சில நோக்கியா செல்பேசி மாடல்களில் தமிழ் எழுத்துரு உள்ளது. ஆனால் அனைத்து நோக்கியா போன்களிலும் இது கிடையாது.
நோக்கியாவில் உள்ள சிலருக்கு மேற்கொண்டு தகவல் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் - இல்லாத போன்களில் நாமே தேவையான கோப்புகளை, எழுத்துருக்களை, மென்பொருள்களை சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டு.
தகவல் ஏதேனும் கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.
ரவி,
இந்த தனியுரிமை செல்பேசி யங்குதளங்களெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்.
வருகிற ஆண்டின் இறுதிப்பகுதியில் லினக்சை அடிப்படையாக்கொண்ட இயங்குதளங்களை இலவசமாகத்தரவிறக்கி எமது செல்பேசிகளில் நிறுவப்போகிறோம்.
அப்போது தரப்படுத்தல் பற்றியெல்லாம் சஇந்திக்கலாம்.
நொக்கியாவுக்கும் நமக்கும் எந்த விதமான தொடர்பும் இருகப்போவதில்லை. இது வெறும் சந்தை சார்ந்த விஷயம் மட்டுமே. பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
காசி - நீங்க சொன்ன ஆய்வைக் கவனிக்காம விட்டுட்டேன் :)
மயூரன் - செல்பேசிக்கு லினக்ஸ் குறித்து நானும் கேள்விப்பட்டேன். என் கவலை தனியுரிமை செல்பேசி இயக்குதளம் குறித்தோ தமிழ்த் தட்டச்சுக்கான மென்பொருள் குறித்தோ இல்லை. எந்த இயக்குதளம், மென்பொருளாக இருந்தாலும் அதில் பின்பற்றப்படும் விசைப்பலகை layout தரப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். layout என்பது இவை சாராதது தானே? கணினியில் எண்ணற்ற தமிழ்த் தட்டச்சு முறைகளை வைத்துக் கொண்டிருப்பது போல் இல்லாமல், செல்பேசியிலாவது சிறந்த தட்டச்சு வடிவமைப்பை உருவாக்கவும் அதைப் பரவலாக்கவும் தொடக்கத்திலேயே முனைய வேண்டும். nokia போன்ற சந்தையில் முன்னிருப்போர் திறம் குறைந்த வழக்கத்தைப் பரவலாக்கி விட்டு விட்டால், அப்புறம் நல்ல முறையை நாம் கண்டறிந்தாலும் மக்கள் மாறிக் கொள்ளச் சிரமப்படுவார்கள்.
ஆராய்ச்சியாளரே ஆய்வை கவனிக்கலைனா என்னைய மாதிரி அரைகுறைங்களா கவனிக்கும்? :))
ரவிசங்கர், நீங்கள் சொல்வதையே நானும் சொல்ல விரும்பினேன், ஆனால் என் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் 'anti open source image' காரணமாகவும் நான் மயூரனுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. (வேறு காரணமும் இருக்கு இப்ப வேண்டாம் ;) )
(image-பிம்பம் ஒன்றைப் பற்றி ஒரு இடுகை எழுதிட்டிருக்கேன், விரைவில் எதிர்பாருங்கள், டொட்டொடோய்ங்.)
// இல்லாத போன்களில் நாமே தேவையான கோப்புகளை, எழுத்துருக்களை, மென்பொருள்களை சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டு.//
வசதி இருக்கிற போன் வைத்திருக்கும் பலருக்குமே இது இருப்பதே தெரிவதில்லை/உணர்வதில்லை, தெரிந்தவர்களிலும் பலரும் பயன்படுத்துவதில்லை, பயன்படுத்தும் சிலரும் மற்ரவர்களுடன் பகிர்ந்து பரப்புவதில்லை, இதில் இல்லாத போன்களைப் பற்றிப் பேசி ஆவதென்ன? கொக்கு தலையில் வெண்ணெய்?
நல்ல தகவல் உயிரூட்டமான பின்னூட்டங்கள். ஆனாலும் என் நொக்கியா 6070 இல்் எவ்்வாறு தமிழை உயிரூட்டுவது என்று அறிய முடியவில்லையே!
//நோக்கியாவில் உள்ள சிலருக்கு மேற்கொண்டு தகவல் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் - இல்லாத போன்களில் நாமே தேவையான கோப்புகளை, எழுத்துருக்களை, மென்பொருள்களை சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டு.//
வழக்கமாக நோக்கியா அலைபேசிகளில் சிம்பையான் (Symbian) என்ற OS உபயோகப்படுத்தியிருப்பார்கள். அதன் கோப்புகளின் extension .SIS அந்த கோப்புகளை தேடினால் தமிழில் தட்டச்சு செய்ய மென்பொருள்கள் கிடைக்கலாம்.
கருத்துரையிடுக