ஞாயிறு, ஜனவரி 13, 2008

பொங்கல் வாழ்த்து - சிரிக்க

நம்ப நண்பர் ரங்கராஜு் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவருங்க. அப்பப்ப தங்கிலீசில் அவர் புதுமையாக எதையாவது அனுப்புவார். 'கொஞ்சம் தங்கிலீசை விட்டு தமிழுக்கு வாங்க,. பலருக்கும் கொண்டுபோகலாம்'னு சொன்னதில், முயன்று தமிழில் எழுதியிருக்கிறார். பார்த்து எப்படின்னு சொல்லுங்க மக்களே.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
-காசி.

இனி, ரங்கராஜு:

சில தலைவர்கள், கட்சிகள் பொங்கல் வாழ்த்து சொன்னால் எப்படி இருக்குமென்று ஒரு கற்பனை..............

கற்பனை மட்டுமே, சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் துளி கூட இல்லை. யார் , எது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.


சொரணை கெட்ட தமிழர்கள்
சொல் அம்பு விடும் மறவர்கள்
நன்றி கெட்டு நான்கைந்து முறை
நாற்காலி கொடுக்காவிட்டாலும்
எண்பதிலே என்பால் பற்று கொண்டு
எழுச்சி கண்ட ஏமாற்றுக்காரர்கள் அல்ல...
சேலைகட்டி ஆட்சி செய்த கேவலம்
சோழர்களின் வரலாற்றில் இல்லை என்பதை
வேட்டிக் கட்டிய எனக்கு
வாக்குச்சீட்டில் எழுதிய வல்லமைக்காரர்கள்.
புத்தியில்லை என்று புத்தாண்டில் சொல்லி
பத்தி கொளுத்தும் பழக்கத்தை
பெரியாரின் பள்ளியில் பயிலவில்லை....
அண்ணாவின் ஆசிரமத்தில் அறியவில்லை....
பானையில் அரிசி இல்லாவிட்டாலும்
பார்வையில் இலவச டிவி யுடன்
பொங்குக பொங்கல் என்று வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------
காவிரியில் கப்பல் விட கையெழுத்திட்டு ஆணையில் ரேகை வைக்க அன்றய தினம் நான் அனுப்பிய கடிதம் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் சிக்கி பிரதமர் கைக்கு போகாததை இந்த நாடே கைகொட்டி சிரிக்கிறது. தஞ்சை மாவட்டம் பஞ்சனல்லூர் கிராமத்தில் எல்.கே.ஜி படிக்கும் மாணவன் சக மாணவனிடம் பென்சில் கேட்க, கொடுக்க மறுத்தவனோடு கை கலப்பு ஏற்பட்டு கட்டி புரண்டிருக்கிறார்கள்.எனது கட்சி நிர்வாகிகள் வரும் பொங்கல் தினத்தன்று போராட்டம் நடத்தவுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு இந்த மைனாரிட்டி அரசில் சரியில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். அடுத்த பொங்கலுக்குள் என் ஆட்சி அமைவது உறுதி, வரும் காலம் இனி வசந்தகாலம் என் கட்சியினருக்கு என்று பொங்கல் திருநாளில் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------
மடியும் வரை மருத்துவர்களும், இருக்கும் வரை இன்ஜினியர்களும், ஆயுள்வரை ஆசிரியர்களும் சம்பளம் வாங்காமல் அரசு பணியாற்ற வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக சட்டமாக இயற்ற வேண்டும்,மறுத்தால் போராடுவோம். மறுக்காவிட்டால் நாங்கள் வாபஸ் வாங்குவோம். இந்த பொங்கலுக்கு இங்கே உள்ளோம். அடுத்தபொங்கலுக்கு அ.. ங்கே இருப்போம். எந்த பொங்கலுக்கு எங்கே இருந்தாலும்,தைப் பொங்கலுக்கு தை...புரம் வந்து தமிழனைகாப்போம் என்று வாழ்த்துகிறேன்.
------------------------------------------------------------------------
தலைவர்களை விடதொண்டர்களே எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், மாற்றத்திற்கு ஒரு தொண்டர் வாழ்த்து தெரிவிக்கிறார். அகிம்சை வழியில் சத்தியாகிரக போராட்டம் கண்ட பாரம்பரிய இயக்கம் தொடர்ந்து சத்தியமூர்த்தி முன் கத்தி சண்டை நடத்தி o+, B+,AB-, என இரத்தம் அற வழியில் ஒன்று கலந்து பின் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்த பெருமையினை இந்த தைத் திருநாளில் நினைவு கூர்ந்து தலைவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து முன்னிலை பெற வாழ்த்துகிறேன்".
-------------------------------------------------------------------------------------------------
மேம்பாலம் வருதுன்னு சொன்னா மண்டபத்திற்கு ஆபத்துன்னு அர்த்தம் புத்தாண்டு தைக்கு வருதுன்னு சொன்னா என் அரச‘ங்கத்துக்கு ஆபத்துன்னு அர்த்தம் நான் புறப்படும்போது புயல் வருதுன்னு சொன்னா என் பிரசாரத்துக்கே தடைனு அர்த்தம் தடை, ஆபத்தை மீறி நான் ஆட்சிக்கு வருவது உறுதி.நானாக கூட்டணிக்கு போகமாட்டேன் திராவிட கூட்டணிக்கு இப்போது போகமாட்டேன், திராவிட் இந்திய கேப்டனாக வரும்வரை..... த .அரசுபொங்கலுக்கு வழங்கிய இலவச துணியில் ஒரு சிலருக்கு தையல் விட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தைத்தவருக்கும் அமைச்சர்களுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பினை முதல்வர் தைத் திருநாளில் தெளிவாக விளக்க வேண்டும் என கேட்டு, வாழ்த்து கூறி ஏழைகளுக்கு பிறந்த நாள் தையல் மிஷின் வழங்க புறப்படுகிறேன்.
-----------------------------------------------------------------------
தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஆடி மாதத்தில் AUDI கார், தைமாதத்தில் THAI(தாய்லாந்து) இருப்பதால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மீறி அறிவித்தால் ஆதரவை விலக்கிக் கொள்வோம். இருப்பினும் எங்கள் நிலைமையை நினைவில் கொண்டு சிறுமாற்றத்தோடு அனுமதி அளிப்போம் என்ற ஸ்திரத்தன்மையான கொள்கையோடு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------------------
தைப்பொங்கல் வைக்கமுடியாமலும், விக்கலை அடக்கமுடியாமலும் அந்தோ என் தமிழினம் யாழ்ப்பாணத்தில் தவியாய் தவிக்கும் தருணத்தில் கூட அறிக்கைவிட முடியாத இடத்தில் எனை தள்ளிய தாண்டவராயர்கள்,சேது சமுத்திரம் பற்றி செய்தி படித்தால்கூட சினம் வரக்கூடிய சிம்மாசனம் அருகே அமர வைத்து விட்டார்கள் பாவிகள்.கோடியை கொடுக்கும் தங்கங்கள் என்னிடத்தில் இல்லை. வெள்ளியை கொடுக்கும் வறியவர்கள், கொள்கையோடு என்னோடு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.படைபலம் இல்லாதவன் போர் பரணி பாட முடியாமல் போகலாம், பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று உங்களை கோட்டான்களிடமிருந்து காத்திட இந்த தைப்பொங்கல் நன்னாளில் சூளுரை ஏற்கிறேன்.
----------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

:-)

பொங்கல் நல்வாழ்த்துகள் காசி அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு !

Unknown சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக பென்சில் சண்டைக்கு மைனாரிட்டி அரசை கலைக்க சொல்லும் வசனம். உங்கள் நண்பரை வெளியில் விட்ராதீங்க. ஊர் ஆட்டோவெல்லாம் அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கும்.

இராம்/Raam சொன்னது…

:D

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

தருமி சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள்.

மணியன் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

கண்மணி/kanmani சொன்னது…

மிகவும் ரசித்தேன்.நல்ல நகைச் சுவை உணர்வு.இன்றைய அரசியலை பிரதிபலிக்கிறது.
யார் யார் எனத் தெரிந்தாலும் பேரைச் சொல்லி மாட்டுவானேன்.

பொங்கல் வாழ்த்துக்கள் காசி சார்.

manjoorraja சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

கலக்கல்
ரங்காவையும் பதிவுலகிற்கு இழுத்துவாருங்கள்.

மொக்கைகள் ஓடிவிடுவர்

கோவை சிபி சொன்னது…

ரங்கராஜு் வை அப்பப்ப வெளியில விடுங்க!
பொங்கல் வாழ்த்துகள்.

தமிழ் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் சொன்னது…

very nice. Esspecially JJ & KK

Kasi Arumugam சொன்னது…

குமரன்,
நன்றி.

கண்ணன்,
பாராட்டை அவரிடம் சொல்கிறேன்.ரங்சுக்கும் சுட்டி அனுப்பியிருகிறேன், பார்ப்பார் என நினைக்கிறேன்.நன்றி.

சுல்தான்,
நீங்க //உங்கள் நண்பரை வெளியில் விட்ராதீங்க.// என்கிறீர்கள். கோவை சிபியோ //ரங்கராஜு வை அப்பப்ப வெளியில விடுங்க! // என்கிறார். நான் என்ன விடுவது, ஒளிப்பது, அவரே தீர்மானிக்கட்டும்:)

ராம், தருமி, மணியன்,
நன்றி.

கண்மணி,
செம உசார் பார்ட்டி போல;)

ராசா,
இழுத்துவிட்டு அவர் வேலையை ஏன் கெடுக்கணும்னு பாக்குறேன். அவர் ஐ.டி. ஆளில்லையே!

சிபி, திகழ்மிளிர் (பெயர்க்காரணம்? ப்ளீஸ்), முரளி,
நன்றி.

தமிழ் சொன்னது…

திகழ்மிளிர் (பெயர்க்காரணம்? ப்ளீஸ்)

பிறந்தது ஒரு முழுநிலவு அன்று,
தமிழ் மேல் ஒரு பற்று
அவ்வளவு தான்
வேறு ஒன்றுமில்லை.

enRenRum-anbudan.BALA சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள், காசி !!

கலக்கல் நகைச்சுவை, ரசித்தேன் :)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

//////தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஆடி மாதத்தில் AUDI கார், தைமாதத்தில் THAI(தாய்லாந்து) இருப்பதால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மீறி அறிவித்தால் ஆதரவை விலக்கிக் கொள்வோம். இருப்பினும் எங்கள் நிலைமையை நினைவில் கொண்டு சிறுமாற்றத்தோடு அனுமதி அளிப்போம் என்ற ஸ்திரத்தன்மையான கொள்கையோடு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்////////
இது ஒன்றுதான் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது,செஞ்சேனை சிங்கங்களா????

நல்ல நகைச்சுவை.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நல்ல நகைச்சுவை...பாராட்டுகள்..

வீ. எம் சொன்னது…

அருமை. நன்றாக சிரித்தேன்..

அப்படியே ஒரு விண்ணப்பம்..
என் வலைப்பதிவில் வரும் கருத்துக்களை தமிழ்மணம் திரட்டுவதில்லை.. மட்டுறுத்தல் (மொடெரடி) செய்துள்ளேன். மடல் மூலம் பல முறை தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இன்னும் திரட்டப்படவிலை... உதவ முடியுமா?

பெயரில்லா சொன்னது…

பட்டை போடுங்க வீஎம் சார்

Kasi Arumugam சொன்னது…

திகழ்மிளிர்,
திகழுங்கள், மிளிருங்கள், வாழ்க!

பாலா,
நன்றி.

அறிவன்,
நானும் அப்படித்தான் புரிந்துகொண்டேன்.

வீ.எம்,
நன்றி.

தமிழ்மணத்தை வச்சுப் பெருமையடிச்சுக்கறதோட நம்ம ஜோலி ஓவர். எதாச்சும் வேலை நடக்கணும்னா இப்ப
உண்மையிலேயே உழைக்கிறாங்களே, அவங்களைக் கேக்கணும். கேட்டாச்சுங்கிறீங்க. வேணும்னா நானும் உங்க சார்பா ஒரு மடல் தட்டிவிடுறேன். அனானி சொன்னமாதிரி பட்டை போட்டாச்சா?

Kasi Arumugam சொன்னது…

பாசமலர், நன்றி.

மறுமொழி மட்டுறுத்தத் தாமதமானதற்கு பொறுத்துக் கொள்ளவும்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...