அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா? அதுதாங்க: கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர்... இங்லீஷில் சொன்னா last name, surname, family name.
எனக்குத் தெரிஞ்சு நம்ம தமிழ்மக்கள் எல்லாருக்குமே ஒருத்தருக்கு ஒரே பேருதான். (செல்லப்பேர், லொள்ளுப்பேர், பட்டப்பேர், குலதெய்வப்பேர், அப்பாரு பேர், அப்பச்சி பேர், புனைபேர், முகமூடிப்பேர் இதெல்லாம் கணக்கில் சேர்க்கறதாயில்லை, சட்டபூர்வமா, சர்டிபிகேட்டில் போடறது மட்டும்தான் பேச்சு ) அது நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி - யாரோ வெச்சதா இருக்கும். அதனால அது வெச்சபேரு, இங்லீஷில் given name அல்லது first name. சண்முகம், ஆறுச்சாமி, சுந்தரம், ராஜேந்திரன்னு எதுவானாலும் ஒருபேர், ஒரே ஒரு பேர். அதுக்குமேல் கிடையாது.
ஆனா பாஸ்போர்ட் எடுக்கும்போது கேப்பான், 'கடேசிப்பேரு என்ன'ண்ணு. அங்கதான் ஆரம்பிக்கும் வில்லங்கம். அதுவரைக்கும் ஒரு இனிஷியலை ஒட்டிக் கூட்டியாந்திருப்போம், சில பெரியவங்க ரெண்டு இனிஷியலும்கூட வெச்சிருப்பாங்க (இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி). உடனே அந்த இனிஷியலை நீட்டி முழக்கி, 'இதுதாங்க கடேசிப்பேரு'ன்னு சொல்லி... அப்பத்திக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் இருக்குபாருங்க விவகாரம்..
எங்கப்பாவுடைய வெச்சபேரு என்னோட கடேசிப்பேரு ஆயிட்டுது. எனக்கு வெச்சபேரு என் மகனுக்குக் கடேசிப்பேரு ஆச்சு. இனிஷியலை இழுத்துவிட்டா அப்படித்தானே வருது. அங்கதான் நம்மளை எல்லாவனும் கேவலமாப் பாக்குறான். ஒரு குடும்பத்துல கடேசிப்பேரு எல்லாருக்கும் ஒண்ணாத்தான் இருக்கணுமாமில்லே. ஒவ்வொரு இடத்திலேயும், 'என் கடேசிப்பேரு வேற, என் மகனின் கடேசிப்பேரு வேற'ன்னு சொன்னா ஏன் மேலேயும் கீழேயும் பாக்கறானுவ?
இதிலே, 'என் வெச்சபேருதான் என் மகனின் கடேசிப்பேரு'ன்னா இன்னும் திருதிருன்னு முழிச்சு எனக்குத்தான் புரியலைன்னு நினைச்சுக்கிறாங்க. கடேசிப்பேரு இல்லேன்னா என்னவாம்? இதிலே அன்னிக்கு இங்க ஒரு வெள்ளக்காரன் பெருமையாச் சொல்றான், ஊடால நடுப்பேருன்னு வேற ஒண்ணு இருக்காமாப்பா...இங்லீஷில middle name. அப்பாவீட்டிலிருந்து கடேசிப்பேரு வந்துருமாம், அம்மா வீட்டு சீதனமா இந்த நடுப்பேராம். நம்ம ஒரு பேரைச் சொல்லவே இவங்க நாக்கு சுளுக்கிக்குது, ஓரசை, ஈரசை பேராப் பழகிட்டு, நம்ம 'எக்கச்சக்க அசை'ப் பேரை வெட்டிப்புடறாங்க. இதிலே அதே பாணியில் நடுப்பேரும் கடேசிப்பேரும் வெச்சுட்டா, ஒருத்திகிட்டக்கூட போனில் பேசி பேரை முழுசாச் சொல்லமுடியாது. என் சூப்பர்நேம் 'காசிலிங்கம்', முதல் மாசம் எலக்ட்ரிக் பில்லில் Kefilangham ஆகியிருந்தது. இன்னும் லக்ஷ்மிநரசிம்மன், வெங்கடரமணன் எல்லாம் என்ன பாடுபடறாங்களோ!
இது எப்போ ஆரம்பிச்ச பிரச்னை? 400 வருஷம் பின்னோக்கிப் போனாக்கூட 'வில்லியம்' ஷேக்ஸ்பிய'ருக்குக்கூட ரெண்டுபேரும் இருந்துருக்கு போலத்தெரியுது. 'வில்லியம்' 'வொர்ட்ஸ்வொர்த்', 'ஜான்' 'மில்டன்' எல்லாம் அப்படியேதான் போல. நம்ம கம்பரும் வள்ளுவனும் இளங்கோவும் கடேசிப்பேரு வெச்சிருந்தாமாதிரித் தெரியலையே. அட நம்ம முண்டாசு, அவரு பேரில் 'சி.' கூட சின்னசாமி அய்யர்தானே, அது அவரோட அப்பா பேருதானே. அப்படின்னா எப்பவுமே நம்ம மக்கள் இப்படிக் கடேசிப்பேரு, குடும்பப்பேருன்னு வெச்சிக்கலையா?
இந்த கடேசிப்பேரு சமாச்சாரம் மட்டும் இல்லீன்னா, இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் அட நம்ம பீட்சாலேண்ட்-பார்ன் சோனியாகாந்தியும் இந்த அளவுக்குப் பேர் வாங்கியிருப்பாங்களான்னு தெரியலை. எனக்குத் தெரிந்து, 'மகாத்மா காந்தியும் இவங்களும் ஏதோ மாமன் மாச்சான் கூட்டம்'னு நெனைக்கிறவங்க எத்தனைபேரு!
இங்கே சில கன்னடத்து நண்பருங்க 'ஹெக்டே'ன்னு, 'காமத்'துன்னு கடேசிப்பேரு வெச்சிருக்காங்க. தேலுங்குதேசத்துக்காரங்க 'ராவு' 'ரெட்டி'ன்னு சொல்லிக்கிறாங்க, சேட்டன்மாரு 'நாயர்' 'பிள்ளை'ங்கிறாங்க. இதெல்லாம் எனக்கு வெறும் கடேசிப் பேராத்தெரியலை. கூடவே ஜாதியயையும் தம்பட்டமடிக்கறமாதிரியில்ல தெரியுது. ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு ஜாதியின் அடையாளம், அதனால இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ?
நான் ஒண்ணு பண்ணிடலாமுன்னு இருக்கேன். இந்தப் பேர்ப்பஞ்சம் என்னோடு போகட்டும். என் மக்களுக்கு என் வெச்சபேரை கடேசிப்பேரா ஆக்கியாச்சு, அதுவும் எல்லா இடத்திலும் கெட்டியா உக்காந்திருச்சு. இனிமேல் என் பேரப்புள்ளைங்களுக்கும் இதையே கடேசிப்பேராக்கிட்டா என்ன? என் குடும்பம் இனி 'காசிலிங்கம்' குடும்பம்னு இருக்கட்டுமே. அட தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறது நம்ம ஊரு வழக்கம் தானே. என் பேரனுக்கு என் பேர்தான் கடேசிப்பேரு. ஸ்டைலா ஒருபேரை வெச்சு, அதை 'வெச்ச பேரு' ஆக்கிடலாம். ஸ்டைலுக்கு ஸ்டைல், சாங்கியத்துக்கு சாங்கியம், சட்டத்துக்கு சட்டம். ஒரே கல்லுல மூணு மாங்கா!
தமிழ்மணமெல்லாம் வரும் முன்னாடி எழுதியது. மீள்பதிவு. இன்னும் நிலைமை மாறியிருக்கிறமாதிரி தெரியலை.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
11 கருத்துகள்:
> ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு
> ஜாதியின் அடையாளம், அதனால
> இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க
> இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ?
ஆமாம். பெரியாரின் திராவிட இயக்கம் தந்த புரட்சி இது.
நா. கணேசன்
காசி: இது பற்றி கண்ணதாசன் யோசித்து நாம் எல்லோரும் "பாரதி" என்பதைக் குடும்பப்பேராக (கடைசிப்பெயர்)க் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார். இப்போ 'கண்ணன்' குடும்பப் பேராச்சு ;-) உங்க கோவைக்காரர். அமெரிக்காவில் இருக்கார். அவர் குடும்பப்பெயரும் 'கண்ணன்' ஆயிடுச்சு. உறவா என்கிறார்கள். யாது ஊரே! யாவரும் கேளிர்!
முதல் முறையாகப் பாஸ்போர்ட் எடுக்கும்போது ஆரம்பிச்சது, அமெரிக்கா போகும்போதெல்லாம் தொடர்கிறது.
அவர்(என் கணவர் நரசிம்மன் சுந்தரராஜன்,
நான் ரேவதி நரசிம்ஹன்
நல்லவேளை மிடில் நேம் கேக்கலை. இல்லாட்டா நாரயணன் வேற போட்டு இருக்கணும்.
எப்ப எழுதினீங்களோ .இப்பவும் அதே நிலைதான்.:)
இது போல சிரித்து வெகு நாளாகி விட்டது.
இங்கு பாரதி குடும்பத்தார் அனைவருமே பெண், பேரன்,பேத்தி எல்லோருமே பாரதி என்று அழைக்கப் படுகிறார்கள்.
அப்போ அவங்க கணவர் பெயரெல்லாம் தொடராதா:))
என் பேரன் , அவனோட 7 வயசில தனக்கு ஒரு ஆங்கில மிடில் நேம் வைக்கச் சொல்லி வந்து அழுதான்.
அன்னிக்கு மத்திரம் அவனுக்கு ஜான் என்றபேரை வைத்து சமாதானப்படுத்தினாள் என் பெண். ஜான் அவனுடைய சினேகிதனின் மிடில் பெயர்
இனிசியலை நீட்டியதால் அப்பா பெயரை அவங்க பெயராவும் அவங்கபேரை ஒப்புக்காவும் மாத்திடராங்களாமே..:)
வடக்குல இன்னும் இந்த குடும்பப்பேரு (ஜாதிப்பேரோ?) இருக்கு..
எப்பன்னாலும் இந்த பதிவு எடுபடும் போல..:))
இதை அப்பவே வாசிச்சிருக்கேன், இப்ப வாசிச்சாலும் சுவாரசியமாத் தான் இருக்கு, பரவாயில்ல, அப்பப்ப சுவாரசியமாவும் எழுதுவீங்க போல ;-)
இன்னொரு விஷயம்:
தமிழ்மணத்தை conceptualize செய்தவர், அதன் Founder, தமிழ்மணம் "நட்சத்திரம்" எனும்போது, சற்று காமடியா இருக்கு, தோணிச்சு, சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க :)
எ.அ.பாலா
என்னுடைய பேரிலும் இதே குழப்பம் தான். இப்ப எல்லாம் என் பேரே மறந்து போச்சு. என் தாத்தா பேர் தான் இப்ப என் பேர்.
கொடுமையடா சாமியோவ்.
// இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி //
K.K.S.S.R., K.K.S.S.N., T.K.S.P, S.P.G.C., S.P.G.R., V.V.V.,V.V.R.,
எங்க ஊர்ல பெரும்பாலானோர்க்கு பெயருக்கு முன்னால் இப்படித்தான்.... :)
ஆங்கில விக்கிபிடியாவில் நான் எழுதியது http://en.wikipedia.org/wiki/Indian_names
In Western English-speaking societies, when there are two people with the same name, for example, Jones Robert and Smith Robert, in an elementary school class, they are referred to as J.Robert and S.Robert respectively to avoid confusion.
But two Ramans in South India have just the one name each. So the names of their fathers are used as initials instead of a surname.
Raman, son of Gopal, would be G. Raman, and Raman, son of Dinesh, D. Raman. This led to the initial system, mostly followed in South India.
Most schools automatically add the initials upon enrollment.
In some parts of Tamil Nadu, traditional family names have recently been abandoned in favour of a father's/husband's given name as a family name.
The use of a father's/husband's given name as a family name is in vogue. These names are also used as initials. School and college records would have the names with initials as given below.
"S. Janaki" - the family name initial and then the given name.
"S. Janaki" might also be written as "Janaki Sridar" in legal documents.
Legal documents such as passports will have the last name fully expanded, instead of initials. Other legal documents such as property deeds will have any of these name formats with the mention of father’s /grandfather’s/husband’s given name and/or village/town/city name.
Mandating expansion of initials in passport and multinational companies that are influenced by western standards is a big source of confusion in South India. For example, a letter for Raja Gopala Varma, son of Krishna Kumar, who is usually referred as "K. Raja Gopala Varma", might be addressed incorrectly to "Krishna Kumar Raja Gopala Varma".
Men's names are usually prefixed with initials as mentioned before.
Some men used to omit the initial, adding the father's given name in the end. However, this isn't a legal name and won't change their name in official records.
For example, both P. Chidambaram and Chidambaram Palaniyappan are valid; however the latter form is not legally used.
Generally, the initials are omitted, and father's name is suffixed in order to shorten a name, for example, G. Raja Ravi Varma, son of M. Gopal Krishnan, becomes Raja Gopal.
For women, the system of initials is slightly different. Before marriage, a girl uses her father's initial, but after marriage, she may choose to use her husband's initial.
Of late the trend has changed and many women, especially those employed, do not change the initials, but continue with their father's initials. This is mainly for convenience, since school degree and career papers have the woman's father's initials on them.
Changing a name legally is a cumbersome procedure, including announcing the proposed change in a newspaper and getting it published in an official gazette. So the modern trend is to add the husband's name at the end, like some Western women who add their husband’s name with a hyphen.
People who do not understand the South Indian naming protocol sometimes expand the initials in an incorrect manner. For example, the name P. Chidambaram, tends to be expanded to Palaniyappan Chidambaram, which is incorrect in the sense that it implies that the person's given name is "Palaniyappan", and the family name is "Chidambaram". In fact, the person's only name is "Chidambaram", with an initial of "P".
Other such famous misrepresentations include the chess grandmaster, V. Anand (wrongly expanded as Vishwanathan Anand); cricketer, L. Sivaramakrishnan (Laxman is his father's name); and the freedom fighter and statesman, C. Rajagopalachari (often cited as Chakravarty Rajagopalachari).
On the other hand, north India media refers to Dr. Anbumani Ramadoss (son of Dr. Ramadoss) often simply as Dr Ramadoss, which again is incorrect as Ramadoss is his father's name and not his family name.
Tamil names
Like North-Eastern Indians, Tamils have names in their native tongue, instead of Sanskrit as in other parts of India.
Beautiful Tamil names include Thenmozhi, Chezhian, Tamizh chelvi, Aaravamudhan, Azhagan, Panneer Selvam, Kayalvizhi, Kanimozhi, Muthazhagu, Pandiyan, Anbazhagan, Vadivukkarasi, Sendil, Vadivel, Velu, Murugan, Perumal.
Nowadays, many people have names from other languages such as Sanskrit or Arabic. The State government has introduced a scheme to name babies born in Chennai Municipality hospital in Tamil and as an encouragement avail a free gift of a gold coin. This is taken as a measure to curb the recent trends of naming the babies in other languages. Many Tamils use a "vilasam", which gives the initials (a syllable in Tamil) of the person's paternal ancestors up to, say, seven generations. This keeps every one readily identifiable. For example, in a reasonably sized community Mu. Ko. Ka. Mu. Tha. Er. Ganesh would be the cousin of Mu. Ko. Ka. Mu. Tha. Ka. Ganesh.
When the initial is expanded it refers to the name of the father, and not to the person bearing the name. So the final name in the sequence is the actual given name of the individual, and the first name stands for the father. For example, the full name of C. V. Raman (who won the 1930 Nobel Prize in Physics for his work on the scattering of light and for the discovery of the Raman effect) was Chandrashekhara Venkata Raman (C. V. Raman): Raman is his given name , and Chandrashekharan is his father's name. Raman is not the family name of the nobel laureate, as many in Europe and the US mistakenly believe.
In Tamil Nadu, only the father's initial is used with the given name. The first name of a person is expanded and used only at legal documents such as passports, court proceedings and wills.
Tamil names also contain the village name in the following order: village name, father's name, given name. For example, Monkombu Sambasivan Swaminathan who is known as M. S. Swaminathan is one of the most popular Indian scientists and known as "Father of the Green Revolution" in India. Swaminathan is the name of the person, Sambasivan is the name of the father, and Monkombu is name of the village from where they have originated.
Family names in south India would be their caste names if have to be strictly followed. Caste names are rarely used, since they are not unique. In addition, many people exclude the caste in their names because the caste system is a controversial social problem in India; young people rarely like to identify themselves by their caste. Unique family names are hidden in the caste, sub-caste and tribe names.
சில பேர் முதல் பெயராக ஊரு பெயரை வைத்திருப்பாங்க.
வாங்க ! வாங்க! க.இ. காசி ....
புதுச்சேரியில் அநேகப் பேர்களுக்கு குடும்ப பெயர்கள் உண்டு ...
கருத்துரையிடுக