ஆழந்தெரியாமக் காலை விடுவதே வேலையாப் போச்சுங்க!
நண்பர்கள் பலரிடமும் கேள்விகளை அனுப்பி, அவர்களும் பதில் அனுப்பியிருந்தார்கள். பதில்களைப் பார்த்து கொஞ்சம் மலைப்பாய்த் தான் இருந்தது. அத்தனை விதமான பார்வைகள், கருத்துகள். இவற்றை கேள்விக்கு ஒரு இடுகையாக 6 இடுகைகளில் இடுவதாக முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பதில்களை அப்படி இட்டால் வாசிப்பது மிக சிரமமாக இருக்கும் என்றும், அதனால் இவற்றை சிரமமெடுத்து எழுதியோருக்கு உரிய கவனம் கிடைக்காமல் போய், கருத்துக்கள் பலருக்கும் சென்று சேராமல் போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. மேலும் ஏற்கனவே கோவி.கண்ணன் போன்ற நண்பர்கள் எழுதும் பதில்கள் ஒரு சங்கிலித்தொடராக அமைந்து வருகிறது. இந்த நிலையில் முன்பு போட்ட திட்டத்தில் ஒரு மாறுதல் செய்கிறேன். நண்பர்கள் புரிந்துகொண்டு உதவவேண்டும்.
அதாவது என் மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பிய நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்கள் பதிவிலேயே இந்தக் கேள்வி-பதிலை ஒரு இடுகையாக இடுங்கள் என்பதே. இதனால் ஒவ்வொருவர் எழுதிய மணியான பதில்களும் அவற்றுக்குரிய கவனம் பெறுவதோடு, அவரவர் ப்திவில் நிரந்தரமாக சேமிக்கவும் ஏதுவாகின்றது. அந்தந்த பதில்கள் மேல் விவாதம் நடப்பதானால் அங்கேயே நிகழவும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும் மறுமொழிவழியாகவோ, தங்கள் பதிவு வழியாகவோ பதில் எழுதுபவர்களும் ஜோராச் செய்யுங்க.
என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!
அவரவர் பதிவில் இட்டபின் இங்கே ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
செஞ்சுடலாமா?
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
28 கருத்துகள்:
பள்ளிகூடத்துல படிக்கும் போதே ஒழுங்கா எழுதலைன்னு எனக்கு அனுப்பலையா தல!?
தமிழ்மணம் திரட்டி ஐந்தாண்டு நிறைவு செய்வதையொட்டி, கேள்விகளைக் காசி எனக்கு அனுப்பி மறுமொழிக்கச் சொல்ல, அதற்கு மறுமொழிகளை நான் அவருக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும். இப்பொழுது, ”உங்கள் பதிவிலேயே போடுங்களேன்” என்ற அவர் யோசனையை ஏற்று என் வலைப்பதிவில் இடுகிறேன். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னைப் பங்கு கொள்ளச் செய்த காசிக்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
காசி: ரொம்ப விவரம்! எங்களை எழுதவும் வைத்து, அவர் குடிலுக்கு வந்து பரிமாறவும் வைத்து விட்டார்! இதுதான் கோவைக்குசும்பு போலும் ;-)
அவர் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள். கவினுலகம் வலைப்பதிவில்!
சொன்னது மாதிரியியே நானும் என் பதிவில் போட்டுவிட்டேன்.
தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள் என்னுடைய பதிவில்
காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்
http://kuzhali.blogspot.com/2009/08/blog-post_26.html
இதோ எனது பதில்கள் இங்கே:
தமிழ்மணம் - 5, கேள்விகள் - 6, காசியும் நானும்
அண்ணே,
செஞ்சுட்டன்!
//என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!
அவரவர் பதிவில் இட்டபின் என் இடுகையில் ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
//
அவரவர் பதிவில் இடுவது சரி. அதை செய்வது ஒரு புறம் நடக்கும் அதே நேரம்
ஒவ்வொரு பதிலாக தொகுத்து நீங்கள் ஆறு இடுகைகள் எழுதினால், ஒரு கருத்து கேள்வி குறித்து 30 வித கருத்துக்களை பெறுவது எளிதாக இருக்குமே
சுருங்க சொன்னால்
30 இடுகை வாசிப்பதற்கு பதில் 6 இடுகை வாசித்தால் போதும்
--
இதை நீங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று இல்லை
உங்கள் தளத்தில் அறிவித்து தன்னார்வலர்கள் யாரையாவது கூட செய்யச்சொல்லலாம்
--
அன்புடன்
புருனோ
--
என் கருத்துக்கள் எனது தளத்தில் உள்ளன
காசி, எனது பதிலை வெளியிட்டு விட்டேன்.
இன்று - Today >> காசி கேட்ட கேள்விகள்
my post: http://pitchaipathiram.blogspot.com/2009/08/05.html
உங்க தயவுல ஆகஸ்டு மாசம் ஒரு பதிவு தேத்திட்டேன்!
சுட்டி: Tamilmanam « Snap Judgment
நன்றி :)
என் பெனாத்தல்களைப் பார்க்க http://dharumi.blogspot.com/2009/08/332.html
காசி : நட்சத்திரக் கேள்விகள்
காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்
http://sajeek.com/archives/452
காசி
கம்பியில்லா இணைப்பு கொடுப்பது எப்படி ???????
என்னுடைய கருத்துக்களை நேற்று உங்களுடைய இன்னொரு இடுகையில் பின்னூட்டி விட்டேன். இங்குதான் மற்றவர்கள் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் என்பதனால் இங்கேயே அப்பின்னூட்டங்களுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.
http://kasiblogs.blogspot.com/2009/08/0.html?showComment=1251258184982#c5581940167036547356
நன்றி - சொ.சங்கரபாண்டி
எனது பதில்கள்:
பத்ரி
அறுவை சிகிச்சையில் இருக்கும் சிங்கை நண்பர் செந்தில்நாதன் நலம்பெற்றுவாழ வாழ்த்துகிறேன்.
கேள்விகளுக்குப் பதில்களை இடுகையாய் இட்ட, மறுமொழியிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி, வேலைப்பளு மற்றும் இணையத் தொடர்புச் சிக்கல்களால் என்னால் எதிர்பார்த்தவாறு தொகுக்கவோ மேற்கோளிட்டு அலசவோ முடியவில்லை. பிறகு செய்கிறேன்.
இதே கேள்விகளுக்குப் பதிலாக தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிய நண்பர் மதி கந்தசாமி அனுப்பிய செய்தி கீழே:
கடந்த பல மாதங்களில் ஈழத்திலிருந்து எழுதும் வலைப்பதிவர்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்களை கொஞ்சமாவது எழுத வேண்டும். இதைப்பற்றி
ஈழத்திலிருந்து யாரும் எழுத மாட்டார்கள். நிலமை அப்படி.
வெளியிலிருந்தும் பெரிதாக எழுத முடியாது. ஏனென்றால் ஈழத்திலிருந்து
எழுதியவர்களுக்கும் இப்போது எழுதுபவர்களுக்கும் தமிழ் இணையத்தில்
மும்முரமாக காத்திரமான பங்களிப்பு செய்துகொண்டிருப்பவர்களுக்கும் ஏதாவது
நடந்தால்?... என்கிற பயந்தான்.
நான் பங்களிக்கும் சர்வதேச வலைப்பதிவர்களின் இணையத்தளத்தில்
இலங்கையிலிருந்து ஒரு பக்கச் செய்திகளை மட்டும்
கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லாச்செய்திகளுக்கும் இன்னுமொரு பக்கமும்
இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எழுத எந்தவிதமான சுதந்திரமும் இல்லையென்று
சில மாதங்களுக்கு முன்பு அவர்களிடம் சொன்னேன். நான் சொன்னதைக் கவனமாகப்
படிக்கவில்லையோ என்னவோ, ஈழத்திலிருந்து தமிழர்களின் கருத்துகளையும்
தொகுத்துத் தந்தால் பிரசுரிப்பதாகவும் தொடுப்புக்கொடுப்பதாகவும்
சொன்னார்கள். இம்முறை கொஞ்சம் விலாவாரியாக, பதிவர்கள்
விசாரிக்கப்படுவதையும், வேறு சில பதிவர்கள் பதிவுகளையே மூடிவிட்டுப்
போவதையும் ஓரிரு பதிவர்கள் மட்டுமே சொந்தப்பாதுகாப்பை நினைக்காமல்
அவ்வப்போது நடப்பதை எழுதுவதையும் சொன்னேன். ஆனால், எழுதுபவர்களின்மீது
வெளிச்சம் பாய்ச்சி அவர்களின் பாதுகாப்புக்கு பிரச்சனை வரக்கூடாது என்று
நான் நினைப்பதையும் சொல்லி வைத்தேன்.
அந்தக் குழுமத்தின் செயற்பாட்டுக்கூட்டத்தில் இந்த விதயம்
விவாதிக்கப்பட்டு ஈரான் போன்ற நாடுகளில் நடப்பதைப்போல Advocacy பக்கம்
எழுத யோசனையும் பங்களிப்பையும் கேட்டார் அந்தக் குழுமத்தின் தலைவர். நான்
சொன்ன விதயத்தின் நம்பகத்தன்மையைப்பற்றியும் விவாதம் நடந்திருக்கும்போல.
அந்தக் குழுமத்தலைவரின் நண்பரொருவர் இலங்கையில் ஏதோவொரு பொதுப்பணிக்காக
சென்றிருந்தவர் ஏதோவொரு சாதாரண இணையத்தளத்தில் ஒரு தமிழ் வலைப்பதிவரின்
கருத்தை சொன்னதற்காக நாடு கடத்தப்பட்டாராம்.
குழுமத்தலைவரின் யோசனையை நான் மறுபடியும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை
வெளியே வரவேண்டுமென்பது மிக முக்கியமாக இருந்தாலும், என்னால் வேறு
ஒருவரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன். என்னுடைய
பயம் நியாயமானதுதான் என்பதை ஆமோதிக்கும்வண்ணம் அவருடைய பதில் இருந்தது.
அதிலிருந்து ஒரு சிறு பகுதி:
இந்த மடல் சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
-----
இணையத்தில் போரைப்பற்றி வரும் செய்திகளை இலங்கை அரசாங்கம் கண்காணிப்பது
குறித்த ஆவணங்கள்/துப்புகள் கிடைக்காதா என்றிருக்கிறேன். செய்தித்துறை
அமைச்சகம் பலரை (several dozens) இணையத்தில் நடப்பதைக்
கண்காணிப்பதற்காகவே நியமித்திருப்பதாக எனக்கு
நம்பத்தகுந்தவர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வந்திருக்கீறது.
ஆனால், என்னுடைய கட்டுரையில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆதாரங்கள்
கிடைக்கவில்லை. கூடவே சீனர்களின் செயற்பாடுகளை இவர்களும்
பயன்படுத்துகிறார்கள் என்று செய்தி கிடைத்திருக்கிறது. ஆதாரம் இல்லை.
-----
நிறைய விசயங்களைப் பொதுவில் கதைக்க முடியாத சூழல்.
எனவே தமிழ் வலைப்பதிவுகள் எப்படியிருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும்.
செய்யக்கூடாது என்பதையெல்லாம் தமிழ் வலைப்பதிவர்கள் + வாசகர்களிடமே
விட்டுவிடுகிறேன்.
இந்தாங்க அண்ணாச்சி!
தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :)))))
காசி,
என் வலைப்பதிவை இழுத்து மூடிவிட்டதால் இங்கேயே ஒட்டி விடுகிறேன். பதில்களும் முழுமையானவையல்ல. சும்மா ஒப்பேத்தியது தான்.
நான் வெளிநாட்டில் வசிப்பதால் பதில்கள் அதற்கு தகுந்த மாதிரித் தான் இருக்கும். இவை தமிழ்நாட்டில் இருப்பவரின் அனுபவத்துக்கும், தேவைகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கலாம்.
மற்றபடி, தமிழ்மணம் நிர்வாகத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்பவர்களின் பெயர்களை மட்டும் பட்டியலிட்டுவிட்டு 'மற்றும் பலர்' என்று முடித்திருக்கலாம். ஒப்புக்கு சப்பாணியாக ஒட்டிக்கொண்டிருக்கும் என் பெயரையும் போட்டு மானத்தை வாங்க வேண்டுமா? (நான் எழுதியதைப் படித்து டவுசர் கிழித்துக்கொண்டு கார்டூன் போட்ட லக்கிலுக்கே மறந்த பிறகு என் பெயரை நினைவுபடுத்துவது தேவையா?)
பதில்கள்:
1. சில விஷயங்களில் தேவைக்கு, அதாவது அன்றாடம் செரித்துக்கொள்ளக்கூடியதை விட, அதிகமாக இருக்கின்றன. உதாரணம், சினிமா, செய்திகள், இலக்கியம், அரசியல், வெட்டி அரட்டைகள் போன்றவை. இணையத்துக்கு முன் இணையத்துக்குப் பின் என்று பிரித்தால் இணையம் மூலம் அதிகம் பயன் பெற்றது இலக்கியம் தான். சினிமா, அரசியல் பழைய ஊடகங்களிலேயே தேவைக்கு அதிகமாக இருந்ததுண்டு.
2. உலக அளவில் சிதறிக்கிடக்கும் தமிழர்கள் தமிழ் இணையத்தின் பயனை வெகுவாக அனுபவிக்கிறார்கள். 15-20 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் வாழ்க்கை வனவாசம் மாதிரி தான் இருந்தது. இணையத்தின் புண்ணியத்தால் கிட்டத்தட்ட சொந்த ஊரில் வாழ்வது போன்று கலாச்சார ரீதியான ஒரு virtual வாழ்க்கையாவது கிடைக்கிறது.
மற்றபடி அரசாளுமை தமிழில் இருப்பது பற்றி அதை பயன்படுத்துவோர் தான் சொல்ல முடியும். நான் இருக்கும் நாட்டில் இணைய அரசாளுமை வசதிகள் வாழ்க்கைச் சிக்கல்களை பெருமளவு குறைத்திருக்கிறது. வேலை நேரத்தில் ஏதாவது அலுவலகமொன்றின் படிகளில் தவம் கிடைக்க வேண்டியதில்லை. வங்கி வேலைகள், வீட்டுப் பயன்படுபொருள் செலவுகளை (utility bills) கட்டுவது போன்றவற்றை ஒரு மாலையில் பின்னணியில் ஏதாவது பாட்டு (ஏதாவது என்பதும், பாட்டு என்பதும் முக்கியம் :-) ) கேட்டுக்கொண்டு செய்துவிட முடிகிறது.
இவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் செய்ய முடிந்தால் நல்லதே. அதுவும் சாமான்யர்கள் செய்ய முடிந்தால் இன்னும் நல்லது. நேரம், செலவு, எரிபொருள் என்று பலவற்றை சிக்கனப்படுத்தலாம்.
3. தமிழ் இணையத்தின் வளர்ச்சி பெரும்பாலும் தன்னார்வலர்களின் முயற்சியால் தான் நடந்தன என்பது 25 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி/இணையத்தை பயன்படுத்தி வரும் என்னுடைய கணிப்பு. அரசும், வணிக நிறுவனங்களும் பிறகு நுழைந்தன. இனிமேல் கூட தன்னார்வலர்களின் பங்கு அதிகமாக இருக்கும். இது உலக நியதி. யாராவது நடந்து தேய்த்து கோடு போட்டால் அரசாங்கம் அங்கே ரோடு போடும். மற்றவர்கள் அதில் பயணிப்பார்கள். அதிக பணமுள்ளவர்கள் அதிவேகமாக பயணிப்பார்கள்.
இணையத்தின் வருகையால் மேற்கத்திய நாடுகளில் பழைய ஊடகங்களின் பலம் குறைந்து வருகிறது. சில நிறுவனங்கள் (செய்தித்தாள்கள் போன்றவை) திவாலாகும் நிலைக்கு வந்து விட்டன. அதுபோல தமிழ்நாட்டிலும் 50, 100, 125 ஆண்டுகளாக தின்று கொட்டை போட்ட ஊடக நிறுவனங்களும் திவாலாகாதா என்றும் நப்பாசை இருக்கிறது. ஆனால் அதே பழைய ஊடகப் பெருச்சாளிகள் தான் இணையத்தையும் பெருமளவு கையகப்படுத்துவார்கள் என்பது தான் நடைமுறை.
புது மொந்தை பழைய கள்.
4. பதிலில்லை (எதுக்கு தேவையில்லாத கனவெல்லாம்?)
5. சினிமா, அரசியல், இலக்கியம், மொக்கை தான் அதிகமாக இருக்கின்றது. வலைப்பதிவுகளை படிக்க இப்போது சலிப்பாக இருக்கிறது. துறை சார்ந்த பதிவுகள் அதிகமாக வேண்டும். எழுதுபவர்கள் எல்லோரும் ஏதாவது, கல்வி, தொழில் பின்னணி உள்ளவர்கள் தான். மற்ற அக்கப்போர்களுக்கு இடையில் தங்கள், கல்வி, தொழில் தொடர்புள்ள கட்டுரைகளும் எழுதினால் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும். மொழியும் வளமடையும்.
6. தமிழ்மணம் வாசிப்பது கிட்டத்தட்ட ஒரு போதையாகவே ஆகிவிட்டது. ஆனாலும் தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு உடனடியாக மூடிவிடத்தக்க அளவில் தான் பெரும்பாலான இடுகைகள் இருக்கின்றன. துறை சார்ந்த பதிவுகளை ஊக்குவிக்க முயற்சி எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட, சிறந்த பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்படாமல் இருந்தால் அவற்றைத் தேடி, அப்பதிவர்களை தொடர்பு கொண்டு தமிழ்மணத்தில் இணைய அழைப்பு விடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்மணம் மொக்கைகளின் திரட்டியாகிவிடும்.
காசி,
பல நாட்களுக்கு முன்னரே எழுதத் துவங்கிப் பாதியில் நின்றுவிட்டத்து. என்றாலும் இங்கே என் பதிலகளை இட்டிருக்கிறேன்.
http://domesticatedonion.net/tamil/2009/08/29/thamizmanam_5/
நட்புடன்
வெங்கட்
இராம.கி. அய்யாவின் இடுகைக்கான தொடுப்பு இங்கே:
தமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்
சுரேஷ் கண்ணன் பர்வை
காசி - தமிழ்மணம் - 05ம் ஆண்டு நிறைவு - கேள்வி-பதில்
வெங்கட்டின் பார்வை
தமிழ்மணம் ஐந்தாண்டு நிறைவையொட்டி
இவர்களது பதில் இடுகைக்கான சுட்டியாக இங்கு அமையப் பெறாததால் இதை ஏற்படுத்துகிறேன்.
பதிலெழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் நாட்களில் ஒவ்வொரு கேள்விகளுக்குமான பல பார்வைகளைத் தொகுத்து என் பார்வையையும் சேர்த்து எழுதுகிறேன். இதை இந்த வாரத்துக்கே செய்திருக்கவேண்டும். முந்தைய இரு வாரங்களிலும் பயணம், இந்த வாரம் தவிர்க்க முடியாத அலுவலகச் சூழல் போன்ற காரணங்களால் செய்யமுடியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்.
கருத்துரையிடுக