ஏற்கனெவே ஒரு முறை
- தமிழ்ப்பக்கங்கள் வாசிக்க,
- குறுஞ்செய்தி/மறுமொழி தமிழில் எழுத,
- வரும் தமிழ் குறுஞ்செய்தி வாசிக்க
ஆனால் தொடர்ந்து அந்த செல்பேசியை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கவில்லை. இப்போது வாங்கிய சோனி எரிக்சன் C510 + ஏர்டெல் மொபைல் ஆபீஸ் இணைய சேவை மூலமாக நான் பெற்றுவரும் சில வசதிகளையும் இன்னும் நிறைவேறாத தேவைகளையும் எழுதிவைக்க வேண்டி இந்த இடுகை.
- முன்பு சொன்னபடி, இந்தியாவில் விற்கும் பல குறைந்த விலை செல்பேசிகளில் தமிழுக்கும் பல இந்திய மொழிகளுக்கும் மேலேசொன்ன மூன்றுவகையான ஆதரவுடன் வருகின்றன.
- அந்தோ, கொஞ்சம் படிப்போ வசதியோ உள்ள இந்தியன்தான் தாய்மொழியில் புழங்குவதில்லையே, அதனால் மேம்பட்ட, உயர்ரக செல்பேசிகளில் இது எதற்கு என்று அவற்றில் இவ்வசதி வருவதில்லை. எனவே சிரமப்பட்டுத்தான் தமிழ் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
- ஒபரா மினி என்ற இலவச உலாவியைத் தரவிறக்கி, சில அமைப்புத் தெரிவுகளைச் செய்வதன் மூலம் (Use bitmap fonts for complex scripts=yes) வலைப்பக்கங்களில் தமிழ் வாசிக்கலாம்.
- இலகுவாகத் தரவிறக்கம் ஆக (செலவு குறைய :)) முக்கியமான வலை சேவைகளின் மொபைல் வடிவத்தைப் பயன்படுத்தலாம். உ.ம். m.gmail.com, m.twitter.com, m.thamizmanam.com
- ஜிமையிலின் imap சேவையில் இயங்குமாறு செல்பேசியின் மின்னஞ்சல் செயலியை அமைப்பித்துவிட்டால் அதிலும் push email என்ற தெரிவைச் செய்வதன்மூலம், ப்ளூபெர்ரி போலவே உடனடியாக மின்னஞ்சல் நம் செல்பேசிக்கு வருமாறு செய்யலாம். இதற்கென்று தனியான செலவில்லை. GPRS மட்டும் போதும். பலமுறை என் மடிக்கணியின் ஜிமெயில் திரைக்கு ஒரு புது அஞ்சல் காட்டப்படும் முன்னமே, செல்பேசியில் ட்ட்டடாய்ங் என்று வந்துவிடும். நண்பர்கள் மத்தியில் ஒரு கீக் (geek) எபக்ட் கிடைக்கும்:)
18 கருத்துகள்:
நோக்கியா 3110C மொபைலில்
தமிழில் எழுதவும்
படிக்கவும்
மிகவும் வசதியாக உள்ளது
விலையும் குறைவு
நான் இப்போது
பின்னுட்டம்
இடுவதும்
இந்த மொபைல்தான்
//மேம்பட்ட, உயர்ரக செல்பேசிகளில் இது எதற்கு என்று அவற்றில் இவ்வசதி வருவதில்லை. எனவே சிரமப்பட்டுத்தான் தமிழ் பயன்படுத்த வேண்டியிருக்கிறது//
உண்மைதான். வின்டோஸ் செல்பேசிகளில் தமிழ் தெரிய வைப்பதற்குள் தாவு தீருது. :-))
"Working with windows is Working around windows"
எனது நோக்கியா N70 செல் பேசியில் Opera mini 4.2 மூலம் தமிழ் இணையங்களை வாசித்து வந்தேன். இப்போது எரர் வந்து இணைய சேவையில் இணைய மறுக்கின்றது.. :(
ஜாவா ஸ்கிரிப்ட் சம்பந்தமான தகராறு என்று நினைக்கிறேன்.. இணையத்தில் அதற்கு தீர்வும் கிடைக்கவில்லை... இப்போது செல் பேசியில் தமிழ் வாசிக்க இயல்வதில்லை.. :(((
Thanks kasi sir.i tried opera power settings in my nokia N97 and able to read tamilmanam and ur post in tamil.appa broken jangiriyilirunthu viduthalai.
Sir is there any way to write in tamil using mobile key pad?
///உண்மைதான். வின்டோஸ் செல்பேசிகளில் தமிழ் தெரிய வைப்பதற்குள் தாவு தீருது. :-))
"Working with windows is Working around windows"///
என்னால் opera mini தவிர மற்ற எந்த இடத்திலும் தமிழ் வரவழைக்க முடியவில்லை. (windows mobiles 6.1)
ஏதாவது உதவி செய்யமுடியுமா?
//நோக்கியா 3110C மொபைலில்
தமிழில் எழுதவும்
படிக்கவும்
மிகவும் வசதியாக உள்ளது
//
எழுதுவது எப்படி ??
//DHANA கூறியது...
நோக்கியா 3110C மொபைலில்
தமிழில் எழுதவும்
படிக்கவும்
மிகவும் வசதியாக உள்ளது//
இந்த செல்பேசியல் எவ்வாறு தமிழில் தட்டச்சுவது?
அத்துடன் யாரிடமாவது இத்தகைய விலைகுறைந்த நொக்கியா செல்பேசிகளின் தமிழ் keypad layout இருக்கிறதா?
Dhana,
வாங்க, ஆமாம், அதேபோல நோக்கியா 2630விலும் யுனிகோடு தமிழில் சுலபமாக எழுதலாம். மறுமொழியலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் விலைகொடுத்து வாங்கிய பொருளில் இது இல்லை.
கோபி, கண்மணி, தமிழ்ப்பிரியன், யாரோ ஒருவன், புருனோ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புருனோ, நிமல், நோக்கிய கடைகளில் குறைந்த விலை மாடல்களில் கீபேட் அச்சிடப்பட்டிருக்கிறதைப் பார்க்கலாம்.
இந்த 4-5 நாட்களாக இடுகை எழுத நேரமில்லாவிட்டாலும் மறுமொழிகள் மட்டுறுத்தல் தொடர்ந்து நடந்ததற்குக் காரணம் இந்த சி510+ஒபராமினிதான்.:)
அலுவலகக் கணினியில் ப்ளாக்கருக்குத் தடை.
நான் கூட ஐமேப் வசதியை பயன்படுத்தனும். நல்ல தகவல்கள். நானும் ஓபரா மினியில் மாற்றம் செய்து தான் தமிழ் படிக்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா. :)
புருனோ
கூறியது...
//எழுதுவது எப்படி.
மன்னிக்கவும்
எழுதமுடியாது
தட்டச்ச முடியும்.
நிமல் -NIMAL
சொன்னது//
NOKIA3110C
செல்பேசியில்
எவ்வாறு
தட்டச்சுவது.
/நோக்கியா3110C மாடல் தமிழ்
உட்பட 10 இந்திய
மொழிகளில்
தட்டச்சலாம்.
இந்த மொபைலில்
யுனிகோடு-8
உள்ளது.
மேலும் UCWEB
என்கிற மொன்பொருளை தரவிரக்கி
வலையில் உலவலாம்.
நன்றி Dhana,
தகவலுக்கு நன்றி....
நன்றி காசி,
நான் இலங்கையில் இருக்கிறேன். ஆதலால் இங்கு கிடைக்கும் நோக்கியா மொபைல்களில் தமிழ் தட்டச்சு வசதி இருந்தாலும் அவற்றின் keypad சிங்கள மொழியிலேயே கிடைக்கிறது. ஆதலால் தமிழிருந்தும் தட்டச்ச முடியாது...!
என்னுடைய Nokia 5800 XM மொபைலில் தமிழ் எழுத்துரு (Tamil, Latin உள்ள ஏதாவது Unicode Font உ+ம்: aAvarankal.ttf) சேர்த்தால் ஒபேரா இன்றியே தமிழ் வாசிக்க முடிகிறது. ஆனாலும் complex script rendering(?!) இல்லாததால் எழுத்துக்கள் குதறப்பட்டு வருகின்றன.
HiGobi தளத்திலுள்ள எழுதியில் தமிழ் எழுதவும் முடிகிறது. ஆனால் இன்னமும் சரிவர தட்டச்ச வழி இல்லை.
FYKI,
There is tamil sms application developed in UCSC. Check the following link..
http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/index.html
நான் எனது nokia N95 8gb செல்பேசியில் SKYFIRE browser application (www.skyfire.com) பதிந்துள்ளேன். அதன் மூலம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தமிழ் வலைத்தளங்கள், வலைப்பூ, தமிழ் மின் மடல்கள் அனத்தையும் வாசிக்க முடிகிறது.
தமிழில் தட்டச்சு செய்யும் வசதி பற்றி தெரிந்தவர்கள் அறிய தரவும்.
அன்புடன்
இஸ்மாயில் கனி
//நான் இலங்கையில் இருக்கிறேன். ஆதலால் இங்கு கிடைக்கும் நோக்கியா மொபைல்களில் தமிழ் தட்டச்சு வசதி இருந்தாலும் அவற்றின் keypad சிங்கள மொழியிலேயே கிடைக்கிறது. ஆதலால் தமிழிருந்தும் தட்டச்ச முடியாது...!//
நிமல்,
replace இலங்கை with இந்தியா and சிங்கள with இந்தி:-) என் 2630 பொறுத்தவரை இங்கே அதுதான் நிலைமை.
ஆனாலும் வெகு சில நோக்கியா செல்பேசிகளில் தமிழ் கீபேட் பொறித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனக்கென்னவோ, ரோமன் முறையில் கணினி விசைப்பலகையில் உள்ளிடுவதைவிடவும் நோக்கியாவின் முறை எளிதாய்த் தெரிந்தது.
மறுமொழிந்த நண்பர்களுக்கு நன்றி.
ஜபோனில் தமிழ் முன்னர் பயர்பொக்ஸ்சில் வந்நது போல வருகிறது. அதில் இலகுவாக தமிழ் உள்ளிடும் முறை செயலியை உருவாக்கலாம்.யாரு செய்வார்கள்.
நானும் சோனி c510 பயன்படுத்துறேன்.மடிக்கணிணியில் இணைத்து பயன்படுத்த சிறப்பாக உள்ளது
கருத்துரையிடுக