வியாழன், ஆகஸ்ட் 27, 2009

தமிழ்மணம் குழு

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மணம் சேவையை நடத்துவது தமிழ் மீடியா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் என்பது தெரிந்த செய்தி. இது லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது.

இப்போது
முனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,
முனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,
முனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,
மயிலாடுதுறை சிவா - பொருளாளர்.

இவர்களோடு,

முனைவர் சொ. சங்கரபாண்டி
தமிழ்சசி
முனைவர் இரமணீதரன்
முனைவர் பாலு
இளங்கோ
முனைவர் சுந்தரமூர்த்தி
கார்த்திக்ராமஸ்
முனைவர் தங்கமணி
முனைவர் பாலாஜி பாரி

ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுரதாவும் நானும் ஆலோசகர்களாக உள்ளோம்.

தமிழ்மணம் தொடர்ந்து இயங்குவதற்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் பெரிதும் காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்சசியின் நுட்பரீதியான பங்களிப்பு மிக முக்கியக் காரணி. தமிழ்மணம் நுட்பத்தின் குழந்தை. தொடர்ந்து நுட்ப மேம்பாடுகள் செய்துகொண்டிருந்தாலே இது காலமாற்றங்களுக்கேற்ப பரிணாமித்து இயங்கமுடியும். ஏற்கனவே சொன்னதுபோல தமிழ்மணத்தின் நிரல்கள் ஒரு வழமையான மென்பொருளாளரால் உருவாக்கப்படாததால் தொழில்முறை உத்திகளைப் பயன்படுத்தி ஒரு குழுமுயற்சியால் மேம்படுத்துவதில் பல சவால்கள் ஏற்பட்டன. அப்போது தனியொருவராக பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்று கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் நுட்பம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழ்சசி.

திரைமணம், செய்திகள், மறுமொழி திரட்டி என பல பரிமாணங்களாக விரிந்திருக்கும் தமிழ்மணம் தளத்தின் முதன்மை நுட்பவியலாளருக்கு வந்தனங்கள். இரு குழந்தைகளுடன், தற்போதைய சிக்கலான பொருளாதார மந்த நிலை சூழலில், தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். மாற்றாக பலரும் பங்களிக்க ஏதுவான வேறு தீர்வுகள் இருப்பினும் முன்வைத்தால் தமிழ்மணம் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக மென்பொருளாளர்கள் கவனத்துக்கு இதை வைக்கிறேன்.

தற்போதைய தலைவர் செல்வாவும் சரி, முன்னாள் தலைவர் சங்கரபாண்டியும் சரி, தலைவருக்குரிய முதிர்ச்சி, கண்டிப்பு, பொறுமை, போன்ற எல்லாக் குணங்களும் கொண்டு தமிழ்மணத்தை நடத்திச் செல்வதைப் பார்க்கிறேன். செல்வா கிட்டத்தட்ட நான் வலைப்பதிவுக்கு வந்த நாள்முதலே நல்ல நண்பர். ஈரோட்டுக்காரர். நுட்பத்திலும், இலக்கிய சமூக எழுத்துக்களிலும் சமமான ஈடுபாடு கொண்டவர். தேவைக்கேற்ப நுட்பப் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.

சங்கரபாண்டிக்கென்று வலைப்பதிவே கிடையாது! பின்னூட்டப் புகழ் சங்கரபாண்டியென்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பெரும் சமூக ஆர்வம் கொண்டவர். இணையத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கம் போன்ற பணிகளில் அதிகம் செயலாற்றுபவர். எங்க ஊர் மாப்பிள்ளை!

எங்கூர்க்காரர் கணேசனைப் பத்திச் சொல்வதானால் சொல்லிட்டே இருக்கலாம். நாசாவில் விஞ்ஞானி. அற்புதமான நினைவாற்றல். ஆனால் தினமும் மணிக்கணக்காகப் படிப்பது தமிழ். வெறுமனே படித்துக்கொண்டிராமல் தமிழ்க் கணிமைக்காகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார். பல பெரிய தமிழறிஞர்கள், நுட்பவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!

’பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு. ஈழத்து நிகழ்வுகளால் காயப்பட்டிருக்கும் அவரைப் போன்ற நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பலநாள் பங்களித்துள்ளார்.

சுந்தரவடிவேல், கலையார்வம் நாட்டுப்புறவியல் ஆர்வம் மிக்க நண்பர். பெட்னா விழா போன்ற நிகழ்வுகளில் நாட்டுப்புறக்கலை வடிவங்கள்மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.

இளங்கோ, பாலு, கார்த்திக், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சிவா, பாலாஜி பாரி ஆகியோரும் சாத்தியத்துக்குட்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இது சிறப்பான அமைப்பா என்றால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். ஆனால் சிறப்பான குழுவா என்றால் உரக்கச் சொல்லலாம் ஆம் என்று.

42 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

//இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். //

சீக்கிரம் எட்டவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு.//

அப்பாடா ரமணி தான் பெயரிலின்னு நீங்கள் சொல்வதை வைத்து உறுதி படுத்திக் கொள்கிறோம்.
:)

Jerry Eshananda சொன்னது…

வணக்கம், தமிழ்மண புரவலர்களையும், அதனைபுடம்போட்டுசெப்பனிடும் "சொக்க தங்க -மனசு -காரர்களையும் வணங்குகிறேன்.தமிழ்மனக்குடும்பத்தில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி. தமிழ்மணம்,சிறந்த படைப்புகளை சொந்தமாக பிரசுரிக்க "தமிழ்மண பதிப்பகம்"தொடங்கலாமே?
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.

யுவகிருஷ்ணா சொன்னது…

வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் குழுவைப் பற்றிய நல்லவிதமான அறிமுகம்.

இந்த குழுவில் சிலரின் தமிழ் நிஜமாகவே எனக்கு புரிபடுவதில்லை. முன்பெல்லாம் பெயரிலி அண்ணை, கார்த்திக்ராமாஸ், சங்கரபாண்டி போன்றோரின் பல பின்னூட்டங்களை படித்து என் டவுசரை நானே கிழித்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம்.

முதன்முறையாக சுடலைமாடன் அவர்களை சந்தித்தபோது, வழக்கபோல எல்லா பதிவர்களிடம் சொல்லும் அதே வார்த்தையை சொல்லி ஒருமுறை மாட்டிக்கொண்டேன். “அண்ணே உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன் சூப்பர்”.

”அப்படிங்களா தம்பி. எனக்கு வலைப்பூவே இல்லையே?” என்று அவர் பதிலளித்ததும் தமிழிணைய வரலாற்றில் என்னால் மறக்க முடியாத வரலாற்று சோகம் :-( அதாவது வலைப்பூவின்றி வெறும் பின்னூட்டங்களாலேயே கருத்துக்கோட்டையை வெற்றிகரமாக எழுப்பியவர் அவர் என்பதற்காக சொல்கிறேன்.

அப்படியாப்பட்டவரே சமீபத்தில் சன்னாசியின் பதிவொன்றில் இட்ட பின்னூட்டம் என்னை மலைக்கச் செய்தது. “சன்னாசி! உங்களிடமும் பெயரிலியிடமும் இதேதான் பிரச்சினை. நல்ல விஷயங்களை எழுதும்போது கூட எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதமாட்டீர்கள்” என்று சொல்லியிருந்தார்.

சந்தனமுல்லை சொன்னது…

தமிழ்மணம் குழுவினர் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி! தமிழ்மணம் தொடர்ந்து இயங்க வாழ்த்துகள்!!

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

தமிழ்மணம் குழுவினர் அறிமுகத்திற்கு நன்றி.

ஐந்தாண்டுகள் கடந்த தமிழ்மணத்தின் முன்னாள், இன்னாள், குழுவினர் அனைவரின் உழைப்புக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன்.

Tamil blog reader since 2004 சொன்னது…

Thamizhmanam has played a nice role in democratizing opinion sharing in Tamil society.

The credit goes to the past and present management as well as the bloggers.

Kudos to all of you!!!

gnani சொன்னது…

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

மஞ்சூர் ராசா சொன்னது…

தமிழ்மணத்தின் தூண்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. (நா.கணேசன், மற்றும் உங்களை மட்டுமே எனக்கு இதுவரை தெரியும்)
அதிலும் கணேசனை இதுவரை நேரில் பார்த்ததில்லை.

மஞ்சூர் ராசா சொன்னது…

ஞானியின் விளம்பர பதிவு இங்கு பின்னூட்டமாக வந்திருப்பது ஏனோ நெருடுகிறது. அதற்கான இடம் இதுவல்ல என்பது அனுப்பியவருக்கு புரியவில்லையா?

Bruno சொன்னது…

//பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! //

:)

Bruno சொன்னது…

//தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். //

தமிழ்சசிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி !! :) :)

பெயரில்லா சொன்னது…

//’பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்!///

நெத்தியடி! :-)
அசாத்தியமான நகைச்சுவையுணர்வு கொண்ட இரமணி பதிவர்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாதது வேதனைதான்

தமிழ் மணம் குழுவினருக்கு என் வாழ்த்துகள்!!

வினையூக்கி சொன்னது…

வலைப்பதிகின்றேன் என்பதை விட தமிழ்மணத்தில் எழுதுகின்றேன் என பெருமையுடன் சொல்லிக்கொண்ட(கொள்கிற) அளவுக்கு வலைப்பதிவர்களுக்கு தளத்தை அமைத்துக்கொடுத்த தமிழ்மணம் குழுவினருக்கு மானசீகமான நன்றி.

துபாய் ராஜா சொன்னது…

தமிழ்மணம் குழுவினர் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி!

தமிழ்மணம் தொடர்ந்து சிறப்பாக இயங்க வாழ்த்துகள்!!

நர்சிம் சொன்னது…

மிக நல்ல/திறமையான குழு.அறிமுகத்திற்கு நன்றி.

பழமைபேசி சொன்னது…

நன்றிங்க அண்ணே, வாழ்த்துகள்!

ரவி சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி. அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

Radhakrishnan சொன்னது…

தமிழ்மணம் பற்றி அறிந்திட உதவிய இடுகைக்கு மிகவும் நன்றி.

ilavanji சொன்னது…

தெரிந்தேன்! தெளிந்தேன்!! :)

தமிழ்மண குழுவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்...

மீனா சொன்னது…

தமிழ்மணத்திற்கு முன்னைய காலத்தையும் ஆரம்பித்த நாட்களையும் நினைக்கும்போதே... ஆஹா..!
எத்தனை இனிமையான நாட்கள்!நன்றி காசி.

’பெயரிலி’(இரமணிதரன்)மறக்கமுடியாதவரில் அவரும்!அவர் பற்றிய தங்களின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்மணம் மேன்மேலும் வளர
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இரா. செல்வராஜ்
நா. கணேசன்
பா. சுந்தரவடிவேல்
மயிலாடுதுறை சிவா

சொ. சங்கரபாண்டி
தமிழ்சசி
இரமணீதரன்
பாலு
இளங்கோ
சுந்தரமூர்த்தி
கார்த்திக்ராமஸ்
தங்கமணி
பாலாஜி பாரி

சுரதா
காசி

அனைவருக்கும் நன்றியும் நல் வாழ்த்துகளும்.

Vassan சொன்னது…

தன்னார்வமாக, முன்னோடிகளாக செய்யப்படுபவை பாராட்டப்பட வேண்டியவை. வருமானமத்தை அடிப்படையாகக்
கொள்ளாமல் தமிழ் மணம் நடத்தும் குழுவினர் நமது பாராட்டுகளுக்கும், நன்றிகளுக்கும் உரியவர்.

நீங்கள் முனை என போட்டிருப்பது முதலில் புரியவில்லை. முனைவர் என்பதை புரிந்து கொள்ள 30 நொடிகளானது.
ஊசி முனை, ஈர்க்குச்சி முனை, கல் முனை என இல்லாமலிருந்தால் சரி! இது போலவே மருத்துவர்கள் என்பதை மரு என
சில அன்பர்கள் எழுதும் போது வேடிக்கையாக உள்ளது. மரு என்றால் ஏதோ முகத்தில் வருவதல்லவா?

ரமணி பற்றி எழுதியிருப்பது இதமாய் இருந்தது. ஆசிப் எழுதியிருப்பது மிகவும் சரியானது. பல பதிவுகளை படிக்கும்
வாய்ப்புகள் கிடையாது, ஆயினும் ரமணி பற்றி தவறான புரிதல்கள் இருக்கும் போல. ரமணி மற்றும் அவர் போன்ற
*நம் தமிழீழ மக்கள்* புலம் பெயர்ந்து பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது.

மடற்குழுக்கள் மட்டும் இருந்த காலத்தில் சில அடிப்படை புரிதல்கள் இருந்தன, குழுக்களில் உலாத்தியவர்களிடையே.
வலைப்பூக்களில் அது இல்லை. யோசிக்கப்பட வேண்டியது.

வாழ்த்துகள். நன்றிகளும்.

அறிவிலி சொன்னது…

தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகள்

குறும்பன் சொன்னது…

//தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!//

உங்களை அறிஞர் கணக்குல அவரு சேர்க்கலை போலிருக்கு இஃகிஃகி

Jackiesekar சொன்னது…

தமிழ் மண குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

முரளிகண்ணன் சொன்னது…

\\வலைப்பதிகின்றேன் என்பதை விட தமிழ்மணத்தில் எழுதுகின்றேன் என பெருமையுடன் சொல்லிக்கொண்ட(கொள்கிற) அளவுக்கு வலைப்பதிவர்களுக்கு தளத்தை அமைத்துக்கொடுத்த தமிழ்மணம் குழுவினருக்கு மானசீகமான நன்றி.

\\

நான் எழுத ஆரம்பித்த போது இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தமிழ்மணம் குழுவினருக்கு நன்றிகள்

நிகழ்காலத்தில்... சொன்னது…

தமிழ்சசி மற்றும் தமிழ்மணம் குழுவினருக்கு என் நண்றிகளும் வாழ்த்துக்களும்..

குடுகுடுப்பை சொன்னது…

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!//

விரைவில் எனக்கு அவர் வீட்டு விருந்தும், அவருக்கு என் வீட்டு விருந்தும் கிட்டும். நாங்கள் 200 மைல் இடைவெளியில் வசிக்கிறோம்.

தமிழ்மணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

துளசி கோபால் சொன்னது…

குழுவினரின் அறிமுகத்துக்கு நன்றி.

அவர்களுக்கு எங்கள் இனிய பாராட்டுகளும் நன்றிகளும்.

Kasi Arumugam சொன்னது…

மறுமொழிந்த நண்பர்களுக்கு நன்றி. இப்போது கிடைத்த நேரத்தில் குழு உறுப்பினர்களின் வலைப்பதிவுக்குத் தொடுப்புக் கொடுத்துவிட்டேன்.

கோவி, இப்பத்தான் தெரியுமா?:)

யுவ கிருஷ்ணா, இதை நீங்க ஏற்கனவே சொல்லியாச்சு. ப்ளீஸ் நோ ரிப்பீட்டு;)

குறும்பன், :) நாங்கதான் அமெரிகாவிலேயே அறிஞரானவங்களாச்சே, அது தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞருக்கு மட்டுந்தானாம்;)

நண்பர்களுக்குத் தனியே பதில் சொல்ல நேரமில்லை இருந்தாலும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

தருமி சொன்னது…

காசி, தமிழ்மணம், இன்றைய பொறுப்பாளர்கள் - அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியும்.

மேலும் வளர வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH சொன்னது…

இவர்களில் முனைவர் திரு.நா.கணேசன் அவர்களை நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். தங்கமான மனிதர். பொள்ளாச்சிக்காரர். பொள்ளாச்சிக்காரர்களே தங்கமானவர்கள்.
அதிலு இவர் சொக்கத்தங்கம்!
24 கேரட்!

உண்மைத்தமிழன் சொன்னது…

காசி ஸார்..

அப்படியே அவங்க வீட்டு அட்ரஸையும் சொல்லியிருந்தீங்கன்னா எதுக்காச்சும் நாளைக்கு ஆட்டோ அனுப்பணும்னா தேட வேண்டாம்ல..!

Subramani, Pazhani சொன்னது…

Thanks for adding the blog links.

புருனோ Bruno சொன்னது…

//இது போலவே மருத்துவர்கள் என்பதை மரு என
சில அன்பர்கள் எழுதும் போது வேடிக்கையாக உள்ளது. மரு என்றால் ஏதோ முகத்தில் வருவதல்லவா?//

Dr என்றால் கூட அதற்கு

Drive (as in, a road)
Debere (latin for debit)
Dining Room (real estate)
Dram
Digital Research
Delivery Reports (unter X.400)
Deactivate Request (C/I channel code)
Data Ready
Data Receive(r)
Data Record(er)
Data Reckoning
Data Requirement
Discrepancy Report
debitor
drawer
devedor
sacador

என்று பல அர்த்தங்கள் இருக்கிறதே சார் !!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நன்றி...

enRenRum-anbudan.BALA சொன்னது…

தமிழ்மணம் நிர்வாகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். நெஞ்சார்ந்த நன்றிகள்

யாரையும் இதுவரை சந்தித்ததில்லை, உங்களைத் தவிர :)

எ.அ.பாலா

வருண் சொன்னது…

காசி அவர்களே!

தமிழ்மணக் செயற்க்குழு மற்றும் ஆலோசகர்கள் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி!

கற்றார் நிறைந்த நல்ல குழுவாகத்தான் இருக்கிறது! :-))

Sanjai Gandhi சொன்னது…

தமிழ்மணத்தின் சிறப்பான ஐந்தாண்டுகளுக்கு வாழ்த்துகள்.. :)

Thamira சொன்னது…

பலரும் தெரிந்துகொள்ள விரும்பியிருந்த தகவல்கள் என நம்புகிறேன். நன்றி.

தமிழ்மணம் இன்னும் செழிக்க வாழ்த்துகள்.!

ராஜா சந்திரசேகர் சொன்னது…

தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள்

தமிழநம்பி சொன்னது…

தமிழ்மணம் குழுவினர்க்கு நெஞ்சாரந்த நன்றி கலந்த இனிய வாழ்த்துக்கள்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...