புதன், ஜூலை 12, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -9

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8

ஊருக்குத் திரும்பும்முன்பே ஆட்சேபகரமான மறுமொழிகள் பிரச்னை ஆரம்பமாகிவிட்டதென நினைவு. ஆனாலும் அதுபற்றி தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை. அனைவரும் ப்ளாக்கர்.காம்-க்கு இதன் தீவிரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்ற ஒன்று மட்டுமே சொல்லமுடிந்தது. இந்தப் பிரச்னை அருணா ஸ்ரீனிவாசன் அவர்கள் பதிவில் ஒருமுறை ஒருவன் ஆபாச மறுமொழியை இட்டதால் வெளிச்சத்துக்கு வந்தது என நினைக்கிறேன்.

ஊருக்கு வந்தபின் 'பிடுங்கி நடப்பட்ட மரமாக' பல சிரமங்கள். எனவே பலநாட்கள் இணையத்திலிருந்தே விலகியிருந்தேன். எனவே பதிவுகளில் நடப்பதை முழுதுமாக அறிவது சாத்தியப்படவில்லை. இதனால் இந்த ஆபாசத் தாக்குதல்கள், போலி மறுமொழிகள் பற்றிய முழுமையாக என்னால் பின் தொடரவியலவில்லை. ஊர் திரும்பி சில வாரங்கள் கழித்து அலுவலக வேலையாக சென்னை சென்றேன். முன்பாகத் திட்டமிடாததால் முறையாக அறிவிக்காவிட்டாலும், கிடைப்பவர்களை வைத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஆசையில் ஐகாரஸ் பிரகாஷைத் தொடர்புகொள்ள அவர் அடித்துப்பிடித்து (அவர்களுக்கு) வழக்கமான இடமான உட்லண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அசத்தினார். உண்மையில் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு மழைகாரணமாகவே இங்கு மாற்றப்பட்டது அது.

செல்வராஜுடன் பல முறை தொலைபேசியிருந்தாலும் நேரில் சந்திக்க வாய்ப்பு வந்ததில்லை. இத்தனைக்கும் அவர் நாங்கள் வசித்த ரோச்சஸ்டரிலிருந்து சில மணி நேரத்தில் சென்றுவிடும் தூரத்திலேதான் வசித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக நான் சென்னை வந்திருந்த அன்று அவரும் அலுவலக வேலையாக இந்தியா வந்து சென்னையிலிருந்தார். மாலையில் பெங்களூர் கிளம்பவேண்டியவரை இழுத்துப்பிடித்து சந்திப்புக்கு வரச்சொல்லிக்கேட்க அவரும் ஆர்வத்துடன் சம்மத்தித்தார். அன்றுதான் அவரையும் சந்தித்தேன்.
அந்த சந்திப்பு பலரையும் நேரில் காணும் வாய்ப்பை அளித்தது. மிகுந்த நிறைவாய் இருந்தது. அன்று அனைவரும் இந்த போலியன் பிரச்னையைப் பற்றிப் பேசினோம். மீண்டும் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று விளக்கிவிட்டு, ஒரு யோசனையாக அப்போது 'கொஞ்ச நாள் மறுமொழி திரட்டுவதை நிறுத்தி வைக்கலாமா?' என்றும் தோன்றியதை முன்வைத்தேன். பலரும் ஆமோதித்தார்கள். ஆனால், பிறகு வீடு திரும்பி ஆழமாக யோசித்துப்பார்த்ததில் இதனால் மட்டும் போலிப்பிரச்னை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வராததாலும், எலிக்குப்பயந்து வீட்டைக்கொளுத்திய கதையாக இத்தனை சிரமப்பட்டு ஏற்படுத்திய வசதியை விலக்குவது சரியல்ல என்று தோன்றியதாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்று பின்னால் உணர்ந்துகொண்டேன். என்ன செய்வது, என் நம்பிக்கைகள்தானே தமிழ்மணத்தில் என்னை இத்தனைதூரம் செலுத்தின, அவற்றுக்கு எதிராக என்னால் இயங்கமுடியவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
இதுபற்றி எனக்கு இப்போது கிடைத்த சில சுட்டிகள்: http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_112082445484376520.html http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_11.html

அந்த சந்திப்பில் ராமச்சந்திரன் உஷா, பெருமாள் முருகனின் 'கூள மாதாரி' புத்தகத்தைப் பரிசளித்தார். அவர் பரிசளித்தபின் தான் ஒன்று நினைவுக்கு வந்தது.

தமிழ்மணம் மூலம் நான் அளித்துவந்த சேவையை இலவசமாகப் பெறுவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்றைக்கு வலைப்பதிவர்களாக இருந்த சிலர் சேர்ந்து எனக்கு எதேனும் நன்கொடை அளிக்க வேண்டும் என்று பரிமேலழகர் முன்பு ஒரு யோசனையை முன்வைத்திருந்தார். http://pari.kirukkalgal.com/?p=130 நன்கொடையாக எதையும் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை, என் சுதந்திரத்துக்கு அது கேடுவிளைக்கும் என்று சுட்டிக்காட்டி, 'கொடுத்தே ஆக வேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு புத்தகம் பரிசளியுங்கள். முடிந்தால் உங்கள் கையொப்பத்துடன் அளியுங்கள். ஊர்திரும்பியவுடன் என் இல்லத்தில் அவற்றைச் சேர்த்துவைத்து பெருமைப்பட்டுக்கொள்வேன்' என்று சொல்லியிருந்தேன். நான் இந்தியா திரும்பிய பின்னரே புத்தகங்களைப் பெற்றுக்கொள்வேன் என்றும் சொல்லியிருந்தேன். உஷா அதை நினைவில் வைத்துக் கொடுத்தாரா என்று அறியேன். எதுவானாலும் அருமையான புத்தகத்தைப் பரிசளித்த அவருக்கு என் நன்றி.

அன்று வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த இன்னொரு நண்பர் தமிழ்மணம் திரட்டி இயங்கும் நுட்பம் குறித்து சில கேள்விகளை என்னுடன் தனியாகக் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரும் அஞ்சல் தொடர்பில்/தொலைபேசியில் எங்களுக்குள் பரிமாற்றம் இருந்தது. அவர் இன்று தேன்கூடு நடத்தும் அன்பர்.

-தொடரும்

6 கருத்துகள்:

மாயவரத்தான் சொன்னது…

நல்ல சுவாரசியமாகப் போகிறது தொடர். (என்னோட கஷ்டம் உனக்கு சுவாரசியமாப் போச்சான்னு திட்ட வேண்டாம்!). ஆனாலும் ஒவ்வொரு பாகத்தையும் கோவணத்துண்டு (வார்த்தை பிரயோகத்துக்கு ஸாரி) மாதிரி தம்மாத்தூண்டு முடிப்பது ஏன்?!

enRenRum-anbudan.BALA சொன்னது…

காசி,
படிக்க சுவாரசியமாகவே இருக்கு ! ரொம்ப நாள் கழிச்சு தொடர்ந்து எழுதறீங்க. நல்லது.
ஒரு விஷயம் குறித்து அப்புறம் தனி மடல் போடறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா

Osai Chella சொன்னது…

Somehow today i could find time to go thru all your 9 posts and the one on PDAs. Never thought that you would have faced so much situations!LOL! I am wondering "how we have not seen those planes of expression" in Tamil Blogging. We were very active in egroups for a long and hence missed these developments. I have read only a few Tamil Blogs, and ppl like Badri are in top of my mind. Many ppl started writing on knowing the new media possibilities n simplicities of blogging and hence the usual Quantity vs Quality issues will emerge... but we can not swim against the trend. Shocked to know about the impersonation issue etc.

You got a good hand! Keep it up!

With regards
OSAI CHELLA

பழூர் கார்த்தி சொன்னது…

மாயவரத்தான், சுருக்கமாக எழுதுவதால்தான் சுவாரசியமாக இருக்கிறது :-)

***

இத்தொடர் தமிழ்மணத்தை உபயோகப்படுத்தும் அனைவருமே படிக்க வேண்டிய தொடர்.. உங்கள் உழைப்பிற்கும், அக்கறைக்கும் மிகுந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள், காசி !!

Hariharan # 03985177737685368452 சொன்னது…

காசி,

தங்களது நல்ல முயற்சியான தமிழ்மணம் சமீபமாகப் பயன்படுத்துபவன் நான். என் நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக.

கடல் கடந்து வாழும் தமிழன் தமிழ்மணம் மூலமாக புதிய நட்பு, உறவுகளைப் பெறும் அதே இனிய வேளையில் "கூடுதல் உரிமையோடு" கருத்துப் போர் செய்யவும் தமிழ்மணமே தளமுமாகிறது.

தமிழ் மணம் உருவான விதம் தங்கள் தொடர் மூலம் ஒரு எதிர்கால 'சென்சேஷனல்' வெற்றி உருவானதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

மீண்டும் நன்றிகள் பல தங்களுக்கு.

Unknown சொன்னது…

காசி, நினைவுகளை இவ்வாறு பதிந்து வைப்பது பின்னொருநாள் பயனுள்ளதாக இருக்கும். நான் தமிழ்மணத்தை தொடர்ந்து கவனிக்காத சில மாதங்களில் நடந்த விஷயங்களை அறிய உதவுகிறது. தொடரட்டும்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...