திங்கள், ஜூலை 24, 2006

Seminar on Blogs at CSI, Coimbatore

கோவையில் வரும் புதனன்று வலைப்பதிவுகள் பற்றிய நுட்பங்களின் அடிப்படைகளை விவரிக்கும் கருத்தரங்கு ஒன்றைத் தயாரித்து அளிக்கிறேன். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் ஆதரவில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, வலைப்பதிவில் ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். ஆங்கிலத்தில் நடக்க இருக்கிறதானாலும் பொதுவில் எளிமையான நுட்பங்களைப் பற்றியதானதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று எண்ணுகிறேன். இதில் கிடைக்கும் அனுபவத்தையும் வரவேற்பையும் பொறுத்து, தேவைப்பட்டால் இன்னொருநாள் தமிழிலும் அளிக்க முயல்வேன்.

நன்றி.

There is going to be a seminar by me on Blogs: Technology, Services, Tools and Aggregators under the aegis of Computer Society of India, Coimbatore Chapter. It is held at the CSI Hall near Race Course, at 6:30 Pm on 26th July, Wednesday. I welcome friends interested in the subject of blogging. Please call me at 98941 11554 to confirm your particpation.

Thanks,
-Kasi

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல செயல். உங்களையும் வலைப்பதிவையும் பிரிக்க முடியாது :-))
சிறப்பாக நடக்க வாழ்துகள்.

Kasi Arumugam சொன்னது…

//உங்களையும் வலைப்பதிவையும் பிரிக்க முடியாது :-))// இல்லைங்க கல்வெட்டு. இது ஏற்கனவே ஒத்துக்கொண்டது. நமக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு சொல்வோமேன்னுதான்.
நன்றி.

Unknown சொன்னது…

-->>சிறப்பாக நடக்க வாழ்துகள்.
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் எழுத்துப் பிழை.

சிறப்பாக நடக்க வாழ்த்துகள்

aathirai சொன்னது…

vara mudiyadhavargalukku transcript ingu podungal.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//நமக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு சொல்வோமேன்னுதான்//

நல்ல சிந்தனை திரு.காசி அவர்களே..


நான் இப்பொழுது நகர்கோவிலில் இருப்பதால் நமது கோவையில் நடைபெறும் தங்களின் செமினாரில் கலந்துகொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றேன்.( செமினார் பற்றி தெளிவாக ஒரு பதிவிடவும்).

உங்களின் செமினார் நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.

Kasi Arumugam சொன்னது…

கோவையில் இருப்பவர்களுக்கு நினைவூட்ட ஒருமுறை! :-)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...