வெள்ளி, ஜூலை 07, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -5

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.

இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன். இத்தனைக்கும் ப்ளாக்கர்.காம் வலைப்பதிவுகளில் மறுமொழிச் சேவை இல்லாததால் என் வலைப்பதிவுக்கு backblog.com என்ற, வெளியிலிருந்து இயங்கும் மறுமொழிச் சேவையைப் பெற வருடம் $10 சந்தா கட்டியிருக்கிறேன். இன்று தமிழ்மணம் திரட்டி இலவசமாக அளிக்கும் சேவைகள் விலை கொடுத்துப் பெற்ற இந்த சேவையின் வேலைத்திறனை விட பல மடங்கு இருக்கும் என்பது கண்கூடு.

சுரதாவின் முயற்சியில் ஒரு வலைத்திரட்டி உருவாவது அறிந்து அவருடனும் தொடர்பு கொண்டு தமிழ்மணம் உருவாவதைப் பகிர்ந்துகொண்டபோது இரண்டும் வேறுவேறு நுட்பத்தில் இயங்குவதை விளக்கி, தமிழ்மணம் இயக்கும் நுட்பத்தின் கூடுதல் சிறப்பைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டினார். அத்துடன் தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான பல ஆலோசனைகளை வ்ழங்கி மேம்படுத்தலுக்கும் உதவினார்.

முகுந்த்தும் ஒரு திரட்டியை தன்னுடைய தளத்தில் நிறுவியிருந்தார். ஆனால் சரியாக அதை வளர்த்து சீராட்டுவதன் தேவையை உணராததாலோ என்னவோ அது பிரபலமாகாமலேயே போய்விட்டது.

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அன்புள்ள காசி,
வணக்கம். நல்லா இருக்கீங்களா?

உங்க பதிவுகளைப் பார்த்தேன். சந்தோஷம்.

இப்பத்தான் அதை 'தேசிப் பண்டிட்' லே இணைச்சுட்டுச் சரியா வந்திருக்கான்னு
பார்த்தா நம்ம டுபுக்கும் அதே நேரம் உங்களை அங்கே இணைச்சிருக்கார்.

அதனாலே ரெட்டிப்பு சந்தோஷம்தான் எனக்கு.

http://www.desipundit.com/category/tamil/

Kasi Arumugam சொன்னது…

துளசி, நல்லாருக்கேங்க. நன்றி.

குமரன், இந்தத் தொடர் முடிந்து இயன்றபோது எழுதுகிறேன். அழைப்புக்கு நன்றி.

சவூதி தமிழன் சொன்னது…

//முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.//

இந்த உமர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இன்று 12 ஜூலை மாலை 5:30க்கு மரணம் அடைந்தார்

Kasi Arumugam சொன்னது…

சகோதரர் உமர் தன் தேனீ இயங்கு எழுத்துருவை எங்கும் பயன்படுத்த இலவசமாக அளித்திருந்தார். மேலும் பல வடிவங்களையும் gplஉரிமம் வாயிலாகத் தமிழ் உலகிற்கு அளித்துள்ளார். யுனிகோடு தமிழுக்கு உரக்கக் குரல் கொடுத்தாலும், அதில் மாற்றுக் கருத்துக் கொண்டோருடனும் நல்ல நட்புப் பாராட்டி, அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து வந்தார். சகோதரரே என்று விளிப்பதை பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு எழுதினார். அவரின் நினைவுகள் என்றும் மனதைவிட்டு அகலாதவை.

தகவலுக்கு நன்றி, சவூதி தமிழன்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...