வியாழன், ஜனவரி 29, 2004

ஒன்பது ரூபாய் நோட்டு

இன்றைய தினமணியில் ஒரு செய்தி. 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற ஒரு படத்தின் தொடக்க விழா பற்றியது. இதைப் படித்ததும் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது, சும்மா டமாஸ். கோயமுத்தூர்காரனா இருந்துட்டு இந்தக் கதை சொல்லவும் பயமா இருக்குது. முதலில் ஒரு டிஸ்கிளைமர்: தயவு செய்து இதுக்கும் எங்க ஊருக்கும் முடிச்சுப் போடாதீங்க;-)

ஒருத்தன் சரியான கேப்மாரி. எல்லாவிதமான ஃப்ராடு வேலைகளிலும் கில்லாடி. எத்தனை நாளைக்கி திருட்டு, பிக்பாக்கட்டுன்னு உடம்பை வளைச்சு கஷ்டப்படறது. நேத்து முளைச்ச பசங்கல்லாம் சைபர் திருட்டு, அது இதுன்னு நோகாம நோம்பிகும்பிடறானுங்க. நானும் இனி கொஞ்சம் சொகுசான தொழில் பண்ணப்போறேன்னுட்டு, கள்ள நோட்டு அடிக்கலாம்னு திட்டம் போட்டான். ஒரு ஆர்டிஸ்டைக் கூட்டுச்சேர்த்து, ப்ளாக்கெல்லாம், (அட நம்ம blog இல்லீங்கோ) பண்ணி மெஷினை எங்கியோ புடிச்சு நோட்டும் அடிச்சுட்டான். முதல் நோட்டு ரெடியானதும், சாமி கிட்டே வெச்சு பூசையெல்லாம் பண்ணி (அவன் உஷா மாதிரி இல்லே;-) போணி பண்ணறதுக்கு எடுத்துட்டுப் போனான். அப்பத்தான் பாத்தான், அந்த டோரிக்கண்ணு ஆர்டிஸ்ட்டு 10 ரூபாய்னு போடற எடத்துல, 15 ரூபாய்னு போட்டு வச்சிருக்கிறதை!

சரி, தொலைஞ்சு போகட்டும். இவ்வளவு சிரமப்பட்டு அடிச்ச நோட்டை தூக்கி எறியவும் மனசு வல்லே. எங்காவது இதுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டாமலா போயிறுவான், பாக்கலாம்னுட்டு நோட்டம் விட்டான். அப்பத்தான் பக்கத்துல ரயில்வே கேட்டுக்கிட்ட நொண்டி விளக்கு ஒண்ண வெச்சுக்கிட்டு ஒரு பெருசு பொட்டிக்கடை வச்சிருக்கிறது ஞாபகம் வந்தது. பகல்லியே அந்தப் பெருசுக்கு பத்துக்கும் இருபதுக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த இருட்டில என்ன தெரியப்போகுது. அந்தாளுதான் நமக்கு சரியான கேஸ்ன்னு அங்க போனான்.

'அய்யா, சவுக்கியங்களா?'ன்னு ரொம்ப பாசமா விசாரிச்சுட்டே, 'ஏனுங்க, இதுக்கு சில்லரை கிடைக்குங்களா'ன்னு நைசா புது நோட்டை நீட்டினான். அந்தப் பெருசும் வாங்கி என்னமோ பெரிசாக் கண்டுபுடிக்கிறமாதிரி உத்து உத்துப் பாத்துட்டு, காசுப் பெட்டிக்குள்ளே பொட்டுட்டு, சில்லரையா ரெண்டு நொட்டுக் குடுத்தது. அதை வாங்கினதும், 'வுடுறா சவாரி'ன்னு நம்மாளு அங்கிருந்து நைசா நழுவிட்டான்.

கடையிலேர்ந்து கண்மறைவா வந்து நின்னு கையிலிருந்த ரூபாயைப் பாத்தா, எட்டு ரூபாய் நோட்டு ஒண்ணும், ஏழு ருபாய் நோட்டு ஒண்ணும் இருந்துச்சாம்.

இந்த படத்திறப்பு விழாவில் ஜெயகாந்தன், தங்கர் பச்சான் போன்ற பெரிய தலைகள் எல்லாம் தெரியுது. அதனால் இது நல்ல நோட்டா வரும்னு நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...