வெள்ளி, ஜனவரி 30, 2004

திருக்குறள் ஒரு கலைக்களஞ்சியமா?

இன்று வெங்கட்டின் வலைக்குறிப்புகளில் கிடைத்த ஒரு தொடுப்பு சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதிக்கு இட்டுப்போனது. தமிழ்லினக்ஸ் பற்றி சுஜாதா மீது வெங்கட் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி என்னால் கருத்து எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனால் சுஜாதாவின் மீது என் தனிப்பட்ட அபிப்ராயம் அவரின் நிஜம் நீதிக்கதைகள் படித்தபின் கொஞ்சம் குறைந்துபோனது உண்மை (என் அபிப்ராயம் அவரை என்ன செய்யப்போகிறது?) ஆனால் இன்று அவர் க.பெ. பகுதியில் திருக்குறளைப்பற்றி பலரும் சிலாகித்துச் சொல்லுவதை (மீண்டும்) கிண்டல் செய்திருந்தார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. எந்த ஒரு நூலும் உலகத்தில் உள்ள எல்லா அறிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கமுடியும் என்று நினைக்கும் ஒருவர் ஒரு கிணற்றுத்தவளைக்கு ஒப்பாவார். அன்று என் கிருஷ்ணபக்த நண்பர், 'கீதையில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை' என்று சொன்னபோதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் நாம் நம்மையே ஒரு எல்லைக்குள் பூட்டிக்கொள்கிறோம்; பின் 'நம் கருத்தே சரி'யென்று வாதிடவும் துணிகிறோம்! கைனகாலஜியிலிருந்து, ஜெனடிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு என்று எல்லா நுட்பவியலும் திருக்குறளில் தேடுவது மடமை.

மற்ற நுட்பவியல்கள் வளர்ந்துகொண்டே இருப்பவை. சொல்லப்போனால் ஒவ்வொரு இயல்களில் புதுக்கருத்துகள் மட்டுமன்றி, அவ்வப்போது புதுப்புது 'இயல்'களே தோன்றுவதையும் பார்க்கிறோம். பொறியியல் என்பது இன்று கிளை கிளையாய்ப் பிரிந்து எத்தனை வகை இருக்கிறதென்று அறிவோம். இந்தப் பொறியியலே ஒரு கலையாகக் கருதப்பட்டது ஒரு காலம். இன்னும் மாணிக்கவாசகம் பிள்ளையின் பொறியியல் பட்டப்படிப்புகான கணிதப் புத்தகத்தில் பார்த்தால் பி.ஏ.(எஞ்சினீரிங்) என்று ஒரு பட்டப்படிப்பு இருந்திருப்பது தெரிய வரும். பிறகு இது ஒரு கலை அல்ல என்று உணர்ந்து, பி.எஸ்.சி.(எஞ்சினீரிங்) வந்திருக்கிறது. பிறகு இது விஞ்ஞானமும் அல்ல என்று உணர்ந்து பி.இ. என்று வந்தது... இப்படியே விரிந்து கொண்டிருப்பது இந்த அறிவுசார் கல்வி. ஓரளவுக்கு 'எல்லா'த்துறைகளிலும் வீச்சுக் கொண்ட கலைக்களஞ்சியங்களே வருடந்தோறும் புதுப்பதிப்பு வெளியிடும்போது, 2000 வருடத்திற்கு முந்தைய ஒரு சிறு நூலில் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன வென்பது. அதைப்பற்றி விமர்சிப்பதே கூட வீண்.

ஆனால் நிர்வாகம் என்பது அப்படியல்ல. ஒரு சமூகம், தலைவன், குடிமக்கள் என்ற அமைப்புகள் வந்த நாளிலேயே நிர்வகிப்பது பற்றிய அறிவும் சிந்தனைகளும் வந்துவிட்டன. எனவேதான் திருக்குறளில் வரும் சில நிர்வாகக் கருத்துகள் என்றும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. இந்த வகையில் ஏற்கனவே எனக்குப் பிடித்த இரு குறள்கள் நிர்வாகவியல் கருத்துகளை விளக்கும் முறை பற்றி எழுதியிருந்தேன். அதற்கான சுட்டி:

ஒன்று
இரண்டு

அவ்வகையில் மூன்றாவதாக இதோ இன்னொன்று.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...