பத்திரிகைகளின்மீதான அ.தி.மு.க வின் சகிப்புத்தன்மை
இன்று நேற்றல்ல என்றுமே அ.தி.மு.க.வுக்கு பத்திரிகைகள் மீது சகிப்புத்தன்மை கிடையாது. 'பொன்மனச்' செம்மலுக்கே இல்லாத சகிப்புத்தன்மையை 'புரட்சி'த்தலைவியிடம் தேடுபவர்களை என்னவென்பது? இன்னும் நன்றாய் நினைவிருக்கிறது. படுதலம் சுகுமாரன் என்ற ஒரு எளியவர் எழுதியதை (சிறு துணுக்கு என்று நினைக்கின்றேன்) பிரசுரித்ததற்காக வெளியில் அதிகம் தன்னைக் காட்டிக் கொள்ளாத ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியனைக் கைது செய்து சில நாள் இதேமாதிரி சுடச்சுட மக்களுக்குக் கொரிக்க செய்தி கிடைக்க அன்று 'வானளாவிய' அதிகாரம் படைத்த பி ஹெச் பாண்டியன் உத்தரவு பிறப்பித்தார். இத்தனைக்கும் பாலசுப்ரமணியன் எம் ஜி ஆரை வைத்துப் படம் இயக்கியவர் (படபிடிப்பில் எம் ஜி ஆரை எதற்காவது வைதிருப்பாரோ என்னவோ, 'இரு மகனே ஒரு நாள் வச்சிக்கிறேன்' என்று காத்திருந்திருக்கலாம், இந்த மாதிரி பழைய கணக்கைத் தீர்ப்பதில் எம் ஜி ஆர் கில்லாடி)
கைது நடந்த படலம், ஆ.வி. ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு, ஜெயில் அனுபவம், சவரம் செய்யாத முகத்துடன் அவர் பேட்டி, ப.சுகுமாரன் பேட்டி, வாழ்க்கை வரலாறு (இன்று அவர் நல்ல எழுத்தாளர், வாழ்த்துகள் [மரத்தடிக்கு வந்த பின் 'க்' போடக்கூடாதாமே] ) என்று நாங்கள் விழுந்து விழுந்து ஆ.வி.யும் ஜு.வி.யும் படித்தது ஞாபகம் வருகிறது. பிறகு 'பெரிய மனசு பண்ணி' (இந்த magnanimous என்ற வார்த்தையை அறிந்து கொண்டு என் vocabularyஐ வளர்க்க உதவிய எம் ஜி ஆருக்கு, ஒரு ஓ போடறேன்) எம் ஜி ஆர் குறுக்கிட்டு ஆ.வி. ஆசிரியரை வெளியே விட ஏற்பாடு பண்ணிய மாதிரி நம் 'சமூக நலம் காத்த வீராங்கனை' ஒரு பச்சைக்காகிதத்தில் ஆணை பிறப்பித்து இந்த தமாசுக்கு 'கட்' சொல்லுவார். அத்துடன் எல்லாரும் அவரவர் வேலையைப்பார்க்கப் போய்விட வேண்டும்.
நம் பத்திரிகையாளர்களுக்கு நன்றாகவே தெரியும், இடி அமீன் லெவலுக்கு ஒன்றும் நடக்காது என்று. எனவே இதெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு அத்தியாயம். தாராளமாய் பிரச்னைகளில் சிக்கலாம், சுலபத்தில் பெரிய ஆளாகலாம். மேலை நாடுகளைப்போல் கொஞ்சம் படித்த வாசகர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படாத ஆட்சியாளர்கள் ஒரு எல்லை. சர்வாதிரிகாரிகள் கையில் மாட்டி உயிரை விடவேண்டிய நிலையில் சுதந்திரத்துக்காகப் போராடும் இருண்ட நிலையில் உள்ள நாடுகளின் பத்திரிகைகள் இன்னொரு எல்லை. இது இரண்டும் இல்லாமல் நம் அ.தி.மு.க.வினரின் ஆட்சியில் உள்ள பத்திரிகைக்காரர்கள் பாடு ஜாலி தான்.
பாவம் மற்ற மாநிலப் பத்திரிகைகள்! அவர்களுக்குக் கொடுப்பினை இல்லை..
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
சனி, நவம்பர் 08, 2003
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக