NRIக்களின் மூன்று வகையைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். மூன்றாவது வகையினருக்கு (நிரந்தரமா ஒரு இடத்தில இல்லாம அப்பப்ப இடம் மாறிட்டு இருக்கறவங்கள எங்க ஊரில 'சட்டி தூக்கி'ம்பாங்க, அந்த கோஷ்டிகளுக்கு) என்று சில விசேஷ குணங்கள் இருக்குன்னு ஒரு பட்டியல் ரொம்ப நாளுக்கு முன் யாரோ அனுப்பினது. அதன் தமிழாக்கம்:
நீ ஒரு உண்மையான தேசி(Desi)ன்னு ஒத்துக்கலாம், எப்பன்னா,
- நயாகரா பிக்னிக்குக்கு முந்தின நாள் விடியோ காமெரா வாங்கி, பிக்னிக் முடிஞ்சதும் கடையில் ரிட்டர்ன் பண்ணினால்
(அதுதான் ஒரு மாசம் வரைக்கும் டயம் தர்ரானே)
- முதல் மாசம் இலவசம் என்பதற்காக AOL, MSN, *** என்று இன்டர்நெட் சர்வீஸை மாத்திட்டேயிருந்தா
(இதுக்குப் போயி யாராச்சும் காசு செலவு பண்ணுவாங்களா...)
- சாப்பாடு போடறாங்கங்கற ஒரே காரணத்திற்காக கோயிலுக்குப் போனா
(இங்க கோயிலுக்கு சைட் அடிக்கவா போகமுடியும், வேஸ்ட்..)
- ஆறு மாசத்துக்கு முன் சர்க்யூட்சிட்டியில் வாங்கின போன் இன்னிக்கு என்ன விலைன்னு இன்னும் செக் பண்ணிக் கொண்டிருந்தா
(நாம வாங்கினது சூப்பர் ஹாட் டீலான்னு எப்பிடித் தெரிஞ்சிக்கறது?)
- மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனா
(ஒரு லஞ்சுக்குப்போயி யாராவது 300 ருபாயெல்லாம் செலவு பண்ணுவாங்களா?)
- டயோட்டா, ஹோண்டாவைத்தவிர வேறு கார் வாங்கலைன்னா
(ஊருக்குப் போறப்ப இன்னொரு தேசி கிட்ட விக்க வேண்டாமா?)
- இருக்கற $1 தியேட்டர் எல்லாம் தெரியும்னா
(அதே படம் தானே காட்டறான்..50 ரூபாவே ஜாஸ்தி)
- அபார்ட்மென்ட்டை காலி பண்ணறப்ப ரெண்டு நாள் விழுந்து புரண்டு சுத்தம் பன்ணினா
(செக்யூரிட்டி டிபாசிட் திரும்ப வாங்க வேணாமா?)
- ஆபீஸில் பார்க்கிறவனைத் தவிர ஒரு வெள்ளக்காரனையும் தெரியாதுன்னா
(நமக்கெதுக்குப்பா இதெல்லாம்..)
- இன்னொரு தேசிப்பய எதிரே வந்தாக் கண்டுக்காமப் போனா
(அவனும் நம்மள மாதிரியே உத்து உத்துப் பாப்பான்..)
- வாராவாரம் தவறாம கராஜ் சேல், யார்ட் சேல் போனா
(வேற எங்க சோபா, டிவி யெல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் கெடைக்கும்?)
- உங்க வீட்டு பாத்ரூமிலே பக்கெட் இருந்தா
(ஹி..ஹி..நாங்க ரொம்ப சுத்தம், இந்தப் பசங்க மாதிரி பேப்பரெல்லாம் நமக்கு ஒத்து வராது..)
- காரில் போறமாதிரி பெரிய ஊர் ஒண்ணு விடாமப் போயிருந்தா,
(அதுவா, நான் பாத்தாச்சேன்னு சொல்ல வேண்டாமா?)
- 2 பெட்ரூம் அப்பார்ட்மென்ட்டில் 3 பேர் குடியிருந்தால்
(ரெட்டி போன வாரம் தான் இந்தியா போனான், இதொ இந்த சண்டே வெங்கட் வந்துட்டான்னா எல்லாம் சரியாப்போயிடும்)
- பாத்ரூமில் ரின், சர்ப், ஹமாம், இதெல்லாம் இருந்தா
(குளிக்க, துணி துவைக்க இதெல்லாம் வேண்டாமா.)
இதில் நானும் நிறைய ஐய்ட்டத்தை ட்ரை பண்ணிட்டேன், இருந்தாலும் பேச்சிலரா வந்திருந்தா இன்னும் 100% செஞ்சிருக்கலாம், குடுத்து வைக்கலே. இன்னொண்ணு, இது ரெண்டு வருஷத்துக்கு முந்திய லிஸ்ட், இப்போ புதுசா வந்தவங்க கிட்டே கேட்டா updated (இன்னும் தமிழ் கண்டுபிடிக்கலையே...) லிஸ்ட் குடுப்பாங்க, கேட்டுப்பாக்கணும்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக