சனி, நவம்பர் 08, 2003

தி ஹிந்து பத்திரிகையுடன் தமிழ்நாடு சட்டசபை மோதல்

இது எதிர்பார்த்ததுதான். இந்த அரசுடன் மோதல் ஆரம்பித்தபோதே இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதென்று ஹிந்து 'ராம்'க்கும் தெரியும். நடந்தால் நடக்கட்டும் நல்லதுதான் என்று தான் நினைத்திருப்பார் என்று தான் தோன்றுகிறது. எனக்கென்னவோ ராம் பொறுப்பேற்கும் இடத்தில் கொஞ்சம் நடுவுனிலைமை தவறுவதாகவே தோன்றுகிறது. செய்தித்தாள்கள் செய்திகளைக்கொடுப்பதற்கு மட்டுமே, அவை தனக்கென்று ஒரு அபிப்ராயத்தை வைத்துக்கொண்டு அந்த அபிப்ராயத்தை கொள்கையாக்கி, பின்பு அந்தக் கொள்கைக்காக போராடுவதெல்லாம் தேவையில்லாத வேலை. இவர்கள் பத்திரிகை இதே மாண்புமிகு பு. தலைவி போன தேர்தலில் மதச்சார்பின்மை மேக்கப்பில் வந்தபோது ஆகா ஓகோ என்று வரவேற்றது அதற்குள் மறந்துவிடுமா என்ன? எது எப்படியோ, சீரியல்கள் பிடியில் கிடந்து மாரடிக்கும் தொலைக்காட்சி நேயர்களுக்கு இன்னும் சில நாள் முருக்கு, மிக்சர், டீ, காப்பியுடன் நல்லாப் பொழுது போகும். பேப்பர், ஜுனியர் விகடன் எல்லாம் நல்லா விக்கும்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க பத்திரிகை அதிபர்களின் சுதந்திரம்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...