வெள்ளி, நவம்பர் 07, 2003

ரமணியிடமிருந்து ஒரு Update:

புதிதாக வந்த பேச்சிலர்கள் என்ன செய்வார்கள் என்று என்னை கேளுங்கள் சொல்கிறேன்.
* எதாவது சாகசமான காரியத்தை அரைகுறை தைரியத்தோடு செய்யக்கிளம்பிவிடவேண்டியது - நீச்சல் கூட தெரியாமல் ஆற்றில் ராஃப்டிங் என்ற ஒடத்தில் ஏறி அதை நகர்த்தமுடியாமல் திணறுவது,
* காதலியைக் கவர் செய்ய கிடார் கற்றுக்கொள்வது. அப்புறம், அதை பரணையில் தூங்கவைப்பது.
* இந்தியாவுக்கு திரும்பிப்போகிறவர்கள் விற்கும் பொருட்களை போட்டிபோட்டு வாங்குவது
* சாக்ஸிலிருந்து ஆரம்பித்து எவ்வளவு சின்ன பொருளாயிருந்தாலும் Costco என்னும் மொத்த விற்பனை அங்காடியில் மலிவு விலையில் வாங்க நீளமான க்யூவில் கால்கடுக்க நிற்பது.
* கட்டாயமாக லாஸ் வேகாஸ் புண்ணிய(!) நகரத்தை ஒன்றுக்கு மேற்பட்டமுறை கண்டுகளித்து (ஆனால் பத்து டாலருக்குமேல் சூதாட மனமில்லாமல்) முக்தி அடைவது.


வினோபாவைக்கேட்டால்'நன்றியுரைக்கும் நாள'ன்று (Thanks Giving Day) என்றுமில்லாக் கோலமாய் விடியலுக்கு முன் எழுந்து Best Buy, Circuit City போன்ற கடைகளின் முன் கடைதிறப்பவனின் தரிசனத்திற்கு தவங்கிடப்போம். என்பார்.


அதெல்லாம் சரி ரமணி, என்ன ஆச்சு? சிலந்தி மறுபடியும் முருங்க மரத்தில் வலை பின்னுகிற மாதிரி தெரிகிறது. வாருங்கள், விழித்து எழுங்கள்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...